நடிகர் ஆர்யா ஒரு காலகட்டத்தில் தமிழ் சினிமாவில் பிளேபாயாக சுற்றிக் கொண்டிருந்தது எல்லோருக்குமே தெரியும்.நடிகை சாயிஷாவை காதலித்து திருமணம் செய்து கொண்ட இவருக்கு ஒரு பெண் குழந்தை இருக்கிறது.
தற்போது ஆர்யா முழுக்க முழுக்க நம்பி இருப்பது இந்த படத்தை தான். இதற்காக கடுமையான உடற்பயிற்சி எல்லாம் செய்து கொண்டிருக்கிறார்.
சினிமாவில் சம்பாதிக்கும் வருமானம் மட்டுமில்லாமல் ஆர்யா சொந்த பிஸினஸும் செய்து வருகிறார். நடிகர் ஆர்யா ஷீ செல் என்னும் ஹோட்டல் பிசினஸ் நடத்தி வருகிறார்.
இங்கு அனைத்து விதமான கடல் உணவுகள், அசைவ உணவுகள், வெளிநாட்டு உணவுகள், சைனீஸ் வகைகள், பர்கர், ஐஸ்கிரீம் வகைகள், சூப் வகைகள், ஜூஸ் வகைகள், ஃபலூடா, இந்தியாவைச் சேர்ந்த பாரம்பரிய உணவுகள் என அனைத்து விதமான உணவுகளும் விற்பனை செய்யப்படுகிறது.
இந்த ஹோட்டல் ஆன்லைன் டெலிவரி நிறுவனமான ஸ்விக்கி மற்றும் சொமேட்டோ உடன் இணைந்து பணியாற்றுகிறது.
சாண்ட்விச் எல்லாம் 80 ரூபாய்க்கு மேல் தான் ஆரம்பம் ஆகிறது. கடல் உணவுகள் எல்லாமே 200 ரூபாய்க்கு மேல் தான் விற்கப்படுகிறது.
இந்த ஹோட்டல் அடையார் பகுதியில் மட்டுமில்லாமல் பெங்களூரு, துபாய் போன்ற இடங்களிலும் இருக்கிறது. ஆர்யா இந்த ஹோட்டல் பிசினஸ் மூலம் வருடத்தில் கோடிக்கணக்கில் வருமானம் பார்க்கிறார்.
இதை தாண்டி அவருடைய மனைவி சாயிஷா பாலிவுட்டில் மிகப்பெரிய சினிமா குடும்பத்தைச் சார்ந்த ஒரே பெண் ஆவார். அவருக்கும் ஏகப்பட்ட சொத்துக்கள் இருக்கின்றன.
Thanks for Your Comments