அமெரிக்காவின் சிறையில் இருந்து தப்பித்த பயங்கரமான கைதிகள்?

0

தி ராக் என்று சொல்லப்படும் தீவு சிறைச்சாலை. உலகிலேயே குற்றவாளிகளுக்கு சிம்ம சொப்பனமாக விளங்கும் சிறைச்சாலைகளில் ஒன்று. 

அமெரிக்காவின் சிறையில் இருந்து தப்பித்த பயங்கரமான கைதிகள்?
அமெரிக்காவில் கலிஃபோர்னியாவின் கடற்கரையில் இருந்து, சுமார் 2 கி.மீ தூரத்தில் கடலுக்குள் ஒரு நரகம். அல்பட்ராஸ் சிறைச்சாலை. கதை இங்கிருந்து தான் ஆரம்பிக்கிறது.

10 அடி நீளம் 4.5 அடி அகலம் உள்ள அறைகள். சுமார் 450 குற்றவாளிகளை அடைக்க முடியும். இந்த சிறைச்சாலையை சுற்றிலும் வலிமையான நீரோட்டங்கள் கொண்ட கடல். உறை நிலைக்குச் செல்லும் குளிர்ந்த நீர். சுற்றிலும் சுறாக்கள் கூட்டமாக அலையும். 

எனவே இதில் இருந்து தப்பிப்பது என்பது மரணத்தை தேடிப் போவது போல தான். இருந்தாலும் மரணத்தை விட கொடுமையானது சிறைச்சாலை.

எப்படிப்பட்ட குற்றவாளியும் இப்பெயரைக் கேட்டதும், அவன் மனம் ஒரு முறை கீழே உட்கார்ந்து யோசிக்கும். ஆனாலும் சுமார் 36 கைதிகள் தப்பிக்க செய்த முயற்சிகளில், 23 பேர் பிடிபட்டனர். 

ஏழுபேர் சுட்டுக் கொல்லப்பட்டனர். மூன்று பேர் கடலில் மூழ்கி இறந்தனர். மீதி மூன்று பேர்???? ஜான் ஆங்கிலின் இவரது சகோதரர் கிளாரன்ஸ் ஆங்கிலின், ஃபிராங் மோரிஸ்.

அவர்கள் பற்றிய ஜாதகம் ஏதுமில்லை. இதில் மூளையாக செயல்பட்டவர் மோரிஸ் தான். ஏற்கனவே இவர்கள் வேறோரு சிறையில் இருந்து 1961ல் தான் அல்பட்ராஸ் சிறைக்கு மாற்றப் பட்டார்கள்.

வெறும் வயிற்றில் தண்ணீர் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள் !

எனவே ஒருவரை ஒருவர் அறிந்தே இருந்தனர். மோசமான சூழல் நிறைந்த இப்பகுதியை கடந்து உயிரோடு சென்றிருக்க வாய்ப்பேயில்லை. தேடிப்பார்த்து கிடைக்கவில்லை. 

எனவே 1979 டிசம்பர் 31 அன்று இந்த வழக்கு விசாரணை மூடப்பட்டது.

அதிர்ச்சி தந்த கடிதம்:

2018 ல் ஜான் ஆங்கில் என்ற தப்பித்த கைதியிடம் இருந்து ஒரு கடிதம். மூடப்பட்ட வழக்கு மீண்டும் தோண்டி எடுக்கப்பட்டது.

சுருக்கம் இதுதான்.

அமெரிக்காவின் சிறையில் இருந்து தப்பித்த பயங்கரமான கைதிகள்?

என் பெயர் ஜான் ஆங்கிலிகன். ஜூன் 1962ல் நான் எனது சகோதரர் கிளாரன்ஸ் மற்றும் ஃபிராங் மோரிஸ் ஆகியோருடன் ஆல்பெட்ராஸிலிருந்து தப்பித்தேன். எனக்கு 83 வயதாகிறது நான் மோசமான நிலையில் இருக்கிறேன். 

எனக்கு புற்றுநோய் வந்துவிட்டது . ஆம் நாங்கள் அனைவரும் அன்று இரவு எங்கள் இலக்குகளை அடைந்தோம். ஃபிராங்க் அக்டோபர் 2008இல் இறந்து விட்டார் . அவரது கல்லறை அர்ஜென்டினாவில் மற்றொரு பெயரில் உள்ளது. 

என் சகோதரர் 2011ல் இறந்து விட்டார் . ஏழு ஆண்டுகளாக நான் மினோட் வடக்கு டகோட்டா மற்றும் ஒரு வருடம் ஃபார்கோவிலும் வாழ்ந்து வருகிறேன்.

(அதாவது அவர் கலிபோர்னியாவின் தென் பகுதியில்.தப்பி ஓடிய சில மைல்களுக்கு அப்பால்) என்னை சிறைச்சாலை மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சை அளிக்க உறுதி வேண்டும். 

இது குறித்து டிவியில் அறிவிக்க வேண்டும். அப்படி செய்தால் நான் எங்கிருக்கிறேன். எப்படி தப்பித்தோம் என்று துல்லியமாக அறிவிப்பேன்.

FBI களத்தில் இறங்கியது. அனைத்தையும் ஆரம்பத்தில் இருந்து பதிவு செய்யப் பட்டவற்றை விரிவாக ஆராய்ந்தது… கொஞ்சம் ஃப்ளாஷ் பேக்.

பழங்கள் என்னென்ன நோய்களை வராமல் தடுக்கிறது?

1962 ஜூன் 12. அதிகாலை அல்பட்ராஸ் சிறைச்சாலையின் காவலர்கள் கைதிகளின் ஒவ்வொரு அறையையும் வழக்கம் போல சோதனை செய்தபோது ஒரு அதிர்ச்சி காத்திருந்தது. 

மூன்று பேர் தங்களது அறைகளில் இல்லை. உடனடியாக தகவல் தெரிவிக்கப்பட்டது. 

அறைகளை திறந்து பார்த்த போது அதிர்ந்து போயினர். அறைகளில் இருந்த காற்றுக்காக இருந்த சிறு கம்பிகளால் ஆன பகுதி ஹா.வென்று வாயைத் திறந்து சிரித்தது.

குற்றம் நடந்தது என்ன?

அமெரிக்காவின் சிறையில் இருந்து தப்பித்த பயங்கரமான கைதிகள்?

அல்பட்ராஸ் சிறைக்கு வந்ததில் இருந்தே இங்கிருந்து தப்பிப்பது எப்படி? என்ற எண்ணம் மேலோங்கி இருந்தது. இவர்களோடு ஆலன் வெஸ்ட் என்ற ஒரு கைதியும் சேர்ந்து கொண்டார். 

நால்வரும் புளோரிடா மற்றும் ஜார்ஜியா சிறைகளில் இருக்கும் போது ஒருவரை ஒருவர் அறிந்திருந்தனர். தானா சேர்ந்த கூட்டம். 

படிப்படியாக, சுமார் ஆறுமாதங்கள் தங்களுக்கு தேவையான பொருட்களை சேகரித்து வைத்தனர். முதல் வேலை அறைச் சுவரின் பின்புறம் ஒரு பயன்படுத்தப்படாத நடைபாதை. 

அங்கு செல்வதற்காக காற்றுக்காக விடப்பட்ட வென்டிலேட்டரை அகலப்படுத்த வேண்டும். சாப்பாட்டு கூடத்தில் இருந்து திருடி வந்த கரண்டி களை பயன்படுத்தி சிறிது சிறிதாக உடைத்து அதன் கம்பிகளை அகற்றி விட்டு. 

பின்னர் சுவர் ஓரங்களை குடைந்து ஆள் வெளியே செல்லும் அளவுக்கு பெரிதாக்கி, அது பார்வையில் படாதபடி மறைந்தனர். சோப்பு, பற்பசை , கான்கிரீட் தூசி மற்றும் டாய்லெட் பேப்பர்கள். 

திருடப்பட்ட பெயின்ட். இவற்றின் மூலம் தத்ரூபமாக ஒரு தலையை உருவாக்கி. பின்னர் சலூனில் இருந்து எடுத்து வரப்பட்ட முடிகளை வைத்து ஒட்டி. இரவில் தூக்குவது போல தலையணையில் வைத்து. 

போர்வையால் மூடி (ஏற்கனவே சினிமாவில் நிறையவே பார்த்தாச்சு) பின் துளை வழியாக இரவில் வெளியேறி.அனாதையாக கிடந்த நடைபாதை. 

அவற்றில் இருந்த குழாய்கள் மூலம் மேலேறி. ஒரு மறைமுகமான இடத்தில் தங்களுக்கான பட்டறையில் ஏற்பாடு செய்தனர்.

அமெரிக்காவின் சிறையில் இருந்து தப்பித்த பயங்கரமான கைதிகள்?

அப்போது படிப்பதற்காக கிடைத்த ஒரு பத்திரிகை வாழ்க்கையில் விளக்கேற்ற வந்தது. 'பாப்புலர் மெக்கானிக்ஸ்' இதில் உங்கள் லைஃப் ரிசர்வர் என்ற தலைப்பில் அவசர காலத்தில் தண்ணீரில் தப்பிப்பது எப்படி? 

உயிர் காக்கும் படகு தயாரிப்பு, துடுப்பு, ரப்பர் துண்டுகள் மற்றும் குழாய்கள் மூலம். எவ்வாறு செய்யலாம்?? மற்றும் ஒட்டும் பிசின். காற்று நிரப்புதல், நீரில் ஏற்படும் அபாயங்கள்.தவிர்ப்பது எப்படி??

ஃபுட் பாய்சன் பற்றி பாரம்பரிய மருத்துவம் சொல்வது என்ன?

மழைக் கோட் . :

படகு தயாரிக்க சுமார் ஐம்பது மழைக் கோட்டை எடுத்து வந்து மறைத்து வைத்தார்கள். அவற்றை வெட்டி கைகளால் தைத்து, திரவ பிளாஸ்டிக் மூலம் சீல் வைக்கப்பட்டது. 

நீராவிக் குழாயிலிருந்து வரும் வெப்பம் இதை உருக்க பயன்படுத்தப்பட்டது. ஒட்டுப் பலகைகள், துடுப்பு அனைத்தும் அந்த ரகசிய அறையில் தயார் செய்தனர். 

இரவில் சோதனைக்கு வரும் காவலர்களுக்கு எந்த விதமான சந்தேகமும் எழவில்லை. இவ்வாறு நால்வரும் தங்களது அறையில் இருந்து வெளியேறி. வேலைகளை செய்து விட்டு விடிவதற்குள் அறைக்குள் வந்து விடுவதுண்டு.

அந்த நேரம் வந்தது . :

வெளியேறும் நாள் குறிக்கப்பட்டது. அனைவரும் குறித்த நேரத்தில் வெளியேறி ஒன்றாக இணைந்து கொள்ள வேண்டும். படகில் காற்று நிரப்ப ஒரு வாக்குவம் கிளீனரை பயன் படுத்தி இருந்தார்கள். 

இந்த சத்தம் வராமலிருக்க அறைக்குள் ஒருவர் சத்தமாக இசையை அலறவிட்டுக் கொண்டிருந்தார்.இனிய கிளம்ப வேண்டியது தான் பாக்கி. போய் வருகிறோம் அல்கட்ராஸ் இரவு 11:30. ஜூன் 11. 

வழக்கம் போல பி மற்றும் சி ப்ளாக் நிசப்தத்தில். அனைவரும் உறங்க.தூங்கா விழிகள் எட்டு. சந்தேகம் வராதபடி முன்னேற்பாடுகளைச் செய்து முடித்து விட்டு. அறையின் பின் புறம் உள்ள நடைபாதையை அடைந்தனர்.

அமெரிக்காவின் சிறையில் இருந்து தப்பித்த பயங்கரமான கைதிகள்?

இதில் ஒருவர் மட்டும் வந்த பாடில்லை. அவர் தான் ஆலன் வெஸ்ட். இவர் கொஞ்சம் அதிகமாவே வேலை செய்திருப்பார் போல. 

அந்த வென்டிலேட்டரின் சுவரை அகலப்படுத்தும் போது, சற்று அதிகமாக சுவர் சிதறிப் போக, சிமெண்ட் வைத்து அதை பூசியி ருந்தார். நல்ல சிமெண்ட் போல. மீண்டும் அதை அகற்றுவதில் கால தாமதமாகி விட்டது. 

நேரம் கடந்து விட்டதால் வேறு வழியின்றி நண்பனை விட்டு விட்டு வெளியேறினார்கள். நீண்ட நேரம் முயற்சி செய்து வெளியே வந்த ஆலன் நண்பர்கள் இல்லை. எனவே திரும்பி வந்து படுத்து விட்டார்.

தப்பித்த மூவரும் வேக வேகமாக குழாய்களில் ஏற. படார் சத்தம். குழாய் ஒன்று உடைந்தது. காவலர்கள் காதுகளில் சத்தம் விழ. சிறிது நேரம் மயான அமைதி. சரிதான் ஒன்றுமில்லை என மீண்டும் அமர்ந்து விட்டனர். 

நகம், முடி வெட்டும் போது வலிப்பது இல்லை.. ஏன் ?

ஏற்கனவே அங்கே நிறைய பேய்கள் ஆவிகள் இருப்பதாகவும் நம்பப்பட்டதால் பல அறைகள் கைதிகள் இல்லாமல் இருந்தன. வடிவேல் சொன்னது மாதிரி திடீர்னு அலறுதாம் உடையுதாம் மாதிரி அங்கும் நடந்திருக்கிறது.

மேலே ஏறி உயரத்தில் உள்ள வென்டிலேட்டரின் மூடியைத் திறந்ததும் சுதந்திர காற்று வீசியது. அங்கிருந்து சுமார் 50 அடி கீழே இறங்கி.

12 அடி உயர முள் கம்பி வேலியை தன் தாண்டி, வடகிழக்கு கரையோரம் இருந்த சர்ச் லைட் கண்களில் படாமல், மின் உற்பத்தி நிலையத்தின் நிழலில் பதுங்கி. பின்னர் தாங்கள் தயாரித்த படகில்.

அடுத்த பத்து நாட்கள். தீவிர விசாரணை தேடுதல். ஏற்கனவே அனைவரது அறைகளும் அலசி ஆராய்ந்து. வேறு வழியின்றி ஆலன் நடந்தவற்றை புளி போட்டு விளக்கி.கஷ்டமே இல்லாமல் திட்டம் பற்றி புரிந்து கொண்டனர். 

இப்போது இவர்களது முக்கிய குறிக்கோள் கரையை அடைந்ததும் கொஞ்சம் ஆடைகள், ஒரு காரை திருடி தப்பிக்க வேண்டும். ஆனால் அவ்வாறு ஏதும் நடக்கவில்லை. 

அமெரிக்காவின் சிறையில் இருந்து தப்பித்த பயங்கரமான கைதிகள்?

எனவே அவர்கள் மூவரும் உறை நிலையில் இருந்த கடல் நீர் மற்றும் அதன் நீரோட்டம் அவர்களை உள்ளிழுத்து சென்றிருக்கும். அவர்கள் கண்டிப்பாக இறந்திருக்கக கூடும் என முடிவு செய்தனர்.

அதற்குள் சில கில்லாடிகள் கடலில் குதித்து நீந்தி திடகாத்திரமுள்ள ஆண்களால் தப்பிக்க இயலும் என்பதை நிரூபிப்பதில் ஈடுபட்டனர். அடுத்த பத்து தீவிர தேடுதல் வேட்டை. 

ஜூன் 14 அன்று ஏஞ்சல் தீவின் தெற்கு கரையில் சுமார் 180 மீட்டர் தொலைவில் ஒரு துடுப்பு, சற்று தூரத்தில் தப்பித்தவர்களது நண்பர்கள் உறவினர்கள் பற்றிய விவரம், புகைப்படங்கள் மற்றும் பணப்பையுடன் சுற்றப்பட்ட பிளாஸ்டிக் பை ஒன்றும் கண்டெடுக்கப்பட்டது.

ஒரு வேளை இவர்கள் இறந்து விட்டார்கள் என்று நினைப்பதற்காக திட்டமிட்டு இவ்வாறு இவை போடப்பட்டது?? மேற்கண்ட கடிதம் பல்வேறு சந்தேகங்களை கொண்டு வந்தது.

சம்பவம் முடிந்து ஒரு மாதம் கழித்து நார்வே கப்பல் ஒன்று" கோல்டன் கேட் பகுதியில் ஒரு இறந்த உடலைக் கண்டோம் என்றது. இறந்த உடல் ஒரு மாதம் வரை நீரில் மிதக்கும்?? 

லாஜிக் உதைக்க. வேறு வழியை பார்க்க ஆரம்பித்தார்கள். குளிர் நீரோட்டம்.இதில் 20 நிமிடங்களுக்கு மேல் உயிர் வாழ முடியாது. அதோடு சுறாக்கள் வேறு. தினமும் வெந்நீரில் குளித்து பழகிய உடம்பு.

பாஸ்ட் புட் கடைகள்… அதிர்ச்சியூட்டும் உண்மை தகவல்கள் !

நோ சான்ஸ். பதினேழு ஆண்டுகள் கழித்து 1979 டிசம்பர் 31ல் விசாரணை முடிவுக்கு வந்ததாக கூறி முடித்து வைக்கப்பட்டது.

இப்போது புதியதாக வந்திருக்கும் இது உண்மையான கடிதம் தானா? என்று உறுதி செய்யாத நிலை. யாரோ ஒருவர் தனக்கு சிகிச்சை தேவை என்பதற்காக இவ்வாறு போலிகடிதம் எழுதியிருக்கலாம் என்றார்கள். 

அந்த நள்ளிரவில் இருந்த நீரோட்டம் அவர்கள் கரையேற உதவியிருக்கலாம் என்று ஆராய்ச்சியாளர்கள் 2014 ல் உறுதி செய்தார்கள்.

அமெரிக்காவின் சிறையில் இருந்து தப்பித்த பயங்கரமான கைதிகள்?

2015ல் ஆங்கிலின் சகோதரர்களது கையெழுத்திட்ட ஒரு கிறிஸ்துமஸ் வாழ்த்து அட்டை வந்ததாக தெரிகிறது. அதோடு அவர்கள் மூவரும் பாதுகாவலர்களுக்கான படகில் அனைத்தையும் ஏற்றி. 

தப்பித்த தாகவும் அப்படகை பார்த்ததாகவும் ஒருவர் கூறியிருந்தார். எப்படி என்றாலும் இந்த வழக்கை அவர்களுக்கு 99 வயது ஆகும் வரை உயிர்ப்புடன் வைத்திருப்பதென்று எஃப் பின் ஐ முடிவு செய்தது.

அப்போது அப்படி இருந்தவர்கள் இப்போது இப்படி இருக்கலாம்.உயிரோடு இருந்தால் சொல்லுங்கள் மக்களே!!

கொசுறு . :

அடுத்த ஆண்டே இந்த சிறைச்சாலை பல்வேறு காரணங்களால் மூடப்பட்டது. இப்போது இது மிகவும் புகழ் பெற்ற சுற்றுலாத்தலம். உள்ளே சென்றால் விளையாட்டாக சிறையில் அடைப்பார்கள். 

தப்பிப்பது எப்படி என்றும் வழிகாட்டுதல் இருக்கும். மாட்டிக் கொண்டால் உதவ ஆங்காங்கே பாதுகாப்புக்கு ஆபத்துதவிகள் என களை கட்டியுள்ளது இந்த இடம்.

Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)
Privacy and cookie settings