இயக்குநர் பாக்யராஜ் சொன்ன கதை.. கோவை எஸ்.பி விளக்கம் !

0

திரைப்பட இயக்குநரும், நடிகருமான கே.பாக்யராஜ் தனது அனுபவங்களை சமூக வலைதளத்தில் நெஞ்சு பொறுக்குதில்லையே என்ற பெயரில் வீடியோக்களாக வெளியிட்டு வருகிறார்.

இயக்குநர் பாக்யராஜ் சொன்ன கதை..  கோவை எஸ்.பி விளக்கம் !
அப்படி வெளியிட்ட ஒரு வீடியோவில், கோவை மாவட்டம் மேட்டுப் பாளையத்தை அடுத்த நெல்லித் துறையில் ஓடும், அம்பராம் பாளையம் ஆற்றில் குளிப்பவர்களை, 

நன்றாக நீச்சல் தெரிந்த சிலர் வேண்டுமென்றே தண்ணீரில் மூழ்கடித்து கொலை செய்வதாகவும், பின்னர் அவர்களே உடலை மீட்க உதவுவதாக கூறி பணம் பெறுவதாகவும் பகீர் தகவலை தெரிவித்தார். 

இது முற்றிலும் வதந்தி என மறுத்த கோவை காவல்துறை, அடிப்படை ஆதாரமற்ற தகவலை பரப்புவது குற்றச் செயல் எனவும் எச்சரிக்கை விடுத்தார்.

சிசேரியன் போது கொடுக்கப்படும் மயக்க மருந்து விளைவுகள் என்ன?

இதனிடையே, பாக்யராஜ் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி காவல் நிலையத்திலும் புகார் அளிக்கப்பட்டது. 

இமாச்சல பிரதேசத்தில், முன்னாள் மேயர் சைதை துரைசாமியின் மகன் ஆற்றில் விழுந்து, உடல் கிடைக்காமல் தேடிக் கொண்டிருந்த நேரத்தில் கே.பாக்யராஜ் வெளியிட்ட வீடியோ பரபரப்பை பற்ற வைத்தது.

இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இது பொதுமக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி யிருந்த நிலையில், கோவை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் இது குறித்து விளக்கம் அளித்துள்ளர். 

இது தொடர்பான அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது, 

திரு,பாக்யராஜ் அவர்களின் குற்றச்சாட்டு அடிப்படை ஆதாரமற்றதாகும். அப்படி சம்பவம் என்று ஒன்றுகூட மேட்டுப்பாளையம் காவல் நிலையத்தில் பதிவாகவில்லை. 

பத்ரகாளியம்மன் கோவில் அருகே உள்ள ஆற்றில் 2022, 2023ல் எவ்வித உயிரிழப்பு சம்பவமும் நடக்கவே இல்லை. 2022ல் பவானி ஆற்றில் எதிர்பாராத வகையில் விபத்து ஏற்பட்டு உயிரிழந்தோரின் எண்ணிக்கை 20 ஆகும். 

இதனை யடுத்து தேசிய, மாநில பேரிடர் மீட்புப்படையால் பயிற்சிபெற்ற 10 காவலர்களை உள்ளடக்கிய, ஒரு காவல் உதவி ஆய்வாளர் தலைமையிலான மேட்டுப் பாளையம் உயிர் காக்கும் காவல் படை 2023 பிப்ரவரியில் உருவாக்கப் பட்டுள்ளது. 

இதன் விளைவாக, 2023ல் பவானி ஆற்றில் மூழ்கி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 6 ஆகக் குறைந்தது. 2024ல் உயிரிழப்புகளே இல்லை. 

இப்படை, ஆற்று வெள்ளப் பெருக்கிலிருந்து 914 பேரை அப்புறப்படுத்திக் காப்பாற்றி யுள்ளது. 13 பேரை தற்கொலை யிலிருந்து காப்பாற்றி, மன நல ஆலோசனை வழங்கி யிருக்கிறது.

பெண்களிடம் அதிகரிக்கும் ஆண்தன்மை! அதிர்ச்சி தரும் நிஜம் !

பவானி ஆற்றங்கரையில் 19 அபாய பகுதிகள் கண்டறியப்பட்டு, எச்சரிக்கைப் பலகைகள், சிசிடிவி கேமரா, ரோந்து ஏற்பாடுகள் நடைமுறையில் உள்ளன. எனவே, மேற்கண்ட தகவல் பொய்யானதும் வதந்தியும் ஆகும். 

இவற்றை உருவாக்குவதும் பரப்புவதும் குற்றச் செயல்கள் ஆகும் என்று தெரிவிக்கப் பட்டுள்ளது.

Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)
Privacy and cookie settings