ஹாலிவுட் சினிமாவின் வெறுப்பை ஏற்படுத்தும் வித்தியாசமான இயக்குனர்?

0

டாப் 10 இயக்குனர்களில் பட்டியலில் கேஸ்பர் நோ (Gasper Noe) விற்கு ஒரு முக்கியமான இடம் இருக்கும், அர்ஜெண்டினாவில் பிறந்த இவர் பிரென்ச் சினிமாவில் முக்கியமான இயக்குனராக உள்ளார். 

ஹாலிவுட் சினிமாவின் வெறுப்பை ஏற்படுத்தும் வித்தியாசமான இயக்குனர்?
எல்லா இயக்குனர்களுக்கும் ஒரு தனித்துவம் இருக்கும், ஒரு சிலருக்கு ரொம்பவே வித்தியாசமாக இருக்கும். அவர்களின் படைப்பை பார்க்கும் போது கலையை தாண்டி ஏதோ ஒரு புது உணர்வை ஏற்படுத்தும்.

நாம் நடுராத்தியில திடீர்னு எழுந்து ஐந்து நிமிடம் ஒரு படம் பார்த்தாலோ அல்லது ரெண்டு ரவுண்டு சரக்கு அடிச்சிட்டு பார்த்தாலோ உடனே அட இது இந்த இயக்குனர் படமாச்சே என சொல்ற அளவுக்கு வித்தியாசமாக இருக்கும்.

மணி ரத்னம் படங்களில் அதிகம் பேச மாட்டார்கள், கௌதம் மேனன் படங்களில் குப்பை தொட்டி கூட அழகாக தான் தெரியும், மிஷ்கினின் படங்களில் முகத்தை விட கால்கள் தான் அதிகம் காட்டுவார். 

அது மட்டுமில்லாமல் சில சிறப்பம்சங்கள் இருக்கும். அதே போல் ஹாலிவுட் இயக்குனர்களுக்கும் ஒரு சில வித்தியாசமான சிறப்பம்சம் இருக்கும். இது அவர்களின் Signature என சொல்லலாம் அல்லது Stereotype எனவும் சொல்லலாம். 

கண்ணை பறிக்கும் இண்டென்ஸ் கலர் பேலட் காட்சிகள், சாய்வான கேமிரா கோணம், நிலையான நாடித்துடிப்புடன் கலந்த ஃப்ளாஷ் லைட்ஸ், குமட்டலை வரவைக்கும் ஒலியமைப்பு, சகட்டுமேனிக்கு கட் போடுவது, ஒளிரும் தலைப்புகள் இவையெல்லாம் கேஸ்பர் நோ வின் அடையாளங்கள்.

ரொம்ப ரொம்ப யூனிக்கான இயக்குனர். அவர் படங்களை பார்த்தால் கஞ்சா அடிக்காமலே போதை வரும், அவரே தன்னுடைய படங்களை போதையில் பார்ப்பதற்கு தான் சிறப்பாக இருக்கும் எனவும் கூறுகிறார். 

படம் பார்த்த பத்து நாள் கழிச்சு கூட மனதை தொந்தரவு செய்துக்கிட்டு இருக்கும் அவரது படகாட்சிகள். இலகிய மனசு கொண்டவர்கள் பார்த்தால் அவ்வளவு தான் நேரடியாக சொர்க்கத்துக்கு போக வேண்டியது தான்.

அவர் படங்களின் நோக்கம் பார்வையாளர்களை disrupt and disturb செய்வது தான், அதுவும் எக்ட்ரீம்ல இருக்கும். இவ்வளவு சிக்கலான விஷயங்களை ஆர்ட் வடிவில் சொல்வது தான் அவரின் சிறப்பு.

ஸ்கிப்பிங்‬ செய்தால் ஏற்படும் நன்மை ! 

அவர் படஙகளின் சிறப்பம்சங்கள் : 

Drugs, Complex relationship, LGBTQ, Child abuse, Sexual Violence, Pop-culture references, Unorthodox camera movements, tilt Over head-shots, dark color pallets என பார்ப்பதற்கு புது உணர்வை தரும். 

இதுவரை 5 படம் மட்டுமே எடுத்த இவரின் படம் பார்த்தவர்களுக்கு ஒன்று ரொம்ப பிடிக்கும் இல்லை யென்றால் ரொம்ப வெறுப்பை ஏற்படுத்தும்.

இந்த 5 வெவ்வேறு படங்களும் ஒன்றுக்கொன்றின் தொடர்ச்சியாக இருப்பதற்கு ரெபரென்ஸ் மற்றும் காட்சிகளையும் அமைத்திருப்பார். இவரின் படத்தின் முடிவில் பார்வையாளர்கள் பலர் அழுவார்கள். 

சிலர் வெளியே வந்து சிகரெட் புகைப்பார்கள், சிலர் படத்தின் நடுவில் வெளியே சென்று விடுவார்கள். ஒவ்வொரு நபரும் திரைப்படம் ஏதோ ஒரு வகையில் பாதிக்கும்.

I stand alone (1998)

ஹாலிவுட் சினிமாவின் வெறுப்பை ஏற்படுத்தும் வித்தியாசமான இயக்குனர்?

இது சுமார் 81 நிமிடங்கள் ஓடக்கூடிய படம், பார்வையாளர்கள் இதனை தாக்கு புடிக்க முடியுமா என்று எனக்குத் தெரியவில்லை. ஆரம்பத்தில் இருந்து இறுதி வரை இது மிகவும் வன்முறை நம்மை விரட்டும்.

சிறுவர் துஷ்பிரயோகத்தால் (Child abuse) பாதிக்கப்பட்ட கதாநாயகன் ஆபத்தான உளவியல் பிரமைகளால் இந்த சமூகத்தில் சந்திக்கும் பிரச்சனைகளால் வெளிப்படும் விருப்புகள் / வெறுப்புகள் தான் கதை. 

கதாநாயகன் தன்னுடைய மனைவியை கொடூரமாக தாக்குவது, தன் மகளுக்கு செக்ஸ் டார்ச்சர் கொடுப்பது, கொலை செய்வது போன்ற காட்சிகள் நம்மை உறைய வைக்கும்.

கிளைமாக்ஸ் முன்னர் ஆடியன்ஸ்கு வார்னிங் திரையில் காட்டப்பட்ட படம்.

குண்டாக இருந்தால் குழந்தை பெற்றுக்கொள்ள முடியாதா?

Irréversible (2002)

ஹாலிவுட் சினிமாவின் வெறுப்பை ஏற்படுத்தும் வித்தியாசமான இயக்குனர்?

வெறும் 97 நிமிடங்களே ஓடக்கூடிய படத்தின் திரைக்கதை தலைகீழாக ஓடும். நோலனின் மெமெண்டோவில் இன்ஸ்பையர் ஆன திரைக்கதை. படத்தில் 14 காட்சிகளே கிளைமாக்ஸ்ல் ஆரம்பித்து ஆரம்பப் புள்ளியில் முடியும். 

ஒரு கொலைக்கான தீர்வோடு தொடங்கி அதன் தோற்றத்திற்கு பின்னோக்கி சென்று அதற்கான காரணம் துரோகம் என முடியும் கதை. இதற்கிடையில் காதல், காமம், வன்முறை, போதை என அனைத்தையும் கலந்திருப்பார் இயக்குனர்.

ஒரு பெண் நீண்ட இடைவிடாத நிமிடங்களுக்கு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு தாக்கப்படும் காட்சி, மேலும் ஒரு மனிதன் முகத்தை ஒருவன் தாக்கி நசுக்கி உடைப்பது அவன் இறந்த பின்னும் முகத்தை நொறுக்குவது போன்ற வன்முறையின் உட்சப்பட்ச காட்சியெல்லாம் கொண்ட படம்.

Enter the void (2009)

ஹாலிவுட் சினிமாவின் வெறுப்பை ஏற்படுத்தும் வித்தியாசமான இயக்குனர்?

டோக்கியோவில் வசிக்கும் ஒரு அமெரிக்க போதைப்பொருள் வியாபாரி தனது சிறந்த நண்பரால் காட்டிக் கொடுக்கப்பட்டு போதைப்பொருள் ஒப்பந்தத்தில் கொல்லப் படுகிறார். 

அவரது ஆத்மா, அவரது மரணத்தின் விளைவுகளை கவனித்து, உயிர்த்தெழுதலை நாடுவது தான் கதை. ஒவ்வொரு Perspective லும் கதை சொல்லப் பட்டிருக்கும்.

இது நரகத்திற்கு வெளியேயும் ஒரு அழகான மாயத்தோற்றம் கொண்ட பயணம் உள்ளது போன்ற உணர்வை ஏற்படுத்தும், போதைப்பொருள், முழுமையாக உணரப்பட்ட ஆபாச அழகியலை கனவாக காட்சிப் படுத்தியிருப்பார்.

(getCard) #type=(post) #title=(You might Like)

Love (2015)

ஹாலிவுட் சினிமாவின் வெறுப்பை ஏற்படுத்தும் வித்தியாசமான இயக்குனர்?

இது ஒரு இடியாப்பம் சிக்கலான காதல் கதை. confused emotions கலவை மற்றும் அதனால் வரும் பிரச்சனைகளை கூறுவது. பல வித்தியசமான பாலியல் காட்சிகள் கொண்ட படம்.

இந்தப் படம் 3டி எடுக்கப்பட்டது, வழக்கமான 3டி படங்களில் துப்பாக்கி குண்டுகள் நம்மை நோக்கி வரும், ஐஸ்கிரீம் கொடுப்பது, கண்ணில் விரலால் குத்துவது போன்ற காட்சிகள் தான் பார்த்திருப்போம். 

ஆனால் இந்தப் படத்தில் ஒரு நிமிர்ந்த ஆண்குறி சிஜிஐ (CGI) விந்து வெளியேற்றப் படுவதற்கு முன்பு கேமராவில் நேரடியாகத் தள்ளப்படும், கிட்டதட்ட நம் முகத்தில் தள்ளப்படுவது போன்ற உணர்வை ஏற்படுத்தும்.

சீயக்காயை பயன்படுத்துவதால் ஏற்படும் நன்மைகள் !

Climax (2018)

ஹாலிவுட் சினிமாவின் வெறுப்பை ஏற்படுத்தும் வித்தியாசமான இயக்குனர்?
பிரஞ்சு நடனக் கலைஞர்கள் வெற்று பள்ளி கட்டிடத்தில் கூடி ஒத்திகை பார்ப்பார்கள், அப்போது எல்.எஸ்.டி போதைப் பொருளை உடன் எடுத்துக் கொள்ளும் போது ஒரு மாயைக் கனவாக மாறுவது தான் கதை. 

அப்புறம் செக்ஸ் வெட்டு குத்து தான் படம். உரையாடல் இல்லாமல் செல்லும் காட்சியில் நடனக் கலைஞர் கதாபாத்திரத்தை உணர முடியும். ஒவ்வொன்றையும் நாம் வேறுபடுத்திப் பார்க்க முடியும்.

Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)
Privacy and cookie settings