கடந்த 10 வருடங்களாகவே பிராய்லர் கோழிகளை தொடர்ந்து சாப்பிடலாமா என்னும் கேள்வி பலருக்கும் உண்டு. புரதம் நிறைந்தது கோழி இறைச்சி என்பதை மறுக்க முடியாது.
சேவலுடன் இணையாமலே கோழிகள் முட்டையிடும். கோழிகள் முட்டையிடுவதற்கு சேவல் தேவையில்லை; ஆனால், கோழிகள் குஞ்சு பொரிப்பதற்கு சேவல் தேவை.
கோழிகள், பொதுவாக ஐந்தாறு மாதங்களிலே பருவத்தில் முட்டையிட தொடங்கும். கரு சூழத்தில் இருந்து உயிரற்ற கருக்கள் தொடர்ந்து வெளி வந்து கொண்டே இருக்கும்.
இந்த கருக்கள் தான் கருக்கட்டாத முட்டைகளாக மாறி வெளியே வரும்.
பாலூட்டிகளுக்கு கரு முட்டைகள் உதிரப்போக்கு காலத்தில் குருதியோடு வெளிவருவதைப் போல் கோழிகளுக்கு உயிரற்ற கருக்கள் முட்டைகளாக வெளிவருகின்றன.
இவை கோழி பண்ணைகளில் சேவல் இன்றி முட்டைக்காக லேயர் போன்ற கால்சியம் சத்துக்களை கொடுத்து வளர்க்கும் லேயர் கோழிகள் மூலம் பெறப்படுகிறது.
4G பற்றி நாம் அறிந்து கொள்ள வேண்டியது என்ன?
கருக்கட்டும் முட்டைகளில் உயிரணுக்கள் இருக்கும். கருக்கட்டாத முட்டைகளில் உயிரணுக்கள் இருக்காது. மற்ற எல்லா சத்துக்களும் இரண்டு முட்டைகளிலும் இருக்கும்.
கருக்கட்டாத வெள்ளை முட்டை சாப்பிட்டால் மலட்டுத்தன்மை ஏற்படாது.
கறிக்கோழிகளுக்கு எடை கூடுவதற்காக சில நாடுகளில் கோழி தீவனங்களோடு ஹார்மோன் சத்து கலந்து தருகிறார்கள். இத்தகைய கோழி இறைச்சி தான் மலட்டுத்தன்மையை ஏற்படுத்தும்.
எப்படிச் சாப்பிடுவது தெரியுமா?
அதிலும் எண்ணெயில் பொரித்து எடுத்து சாப்பிடுபவர்களுக்கு கூடுதலாகவே உடலில் கொழுப்பு சேர வாய்ப்புண்டு.
உடலில் இருக்கும் அதிகப்படியான கொழுப்பு இரத்த நாளத்தில் நுழைந்து கொழுப்பை தேக்கி வைக்கிறது.
இவை அடைப்பை உருவாக்கும் போது இரத்த அழுத்தம், இரத்தத்தில் மிகுதியான கெட்ட கொழுப்பு சேர்கிறது.
விரைவில் பூப்படையும் பெண் குழந்தைகள் சிக்கன் மொறு மொறுவென்று சுவைக் கூட்டி தயாரிக்கப்படும் மிருதுவான சிக்கனின் ருசியில் மயங்கி கிடக்கிறார்கள் பெண் குழந்தைகள்.
இந்த அதீத உடல் பருமனால் பாதிக்கப்பட்ட பெண் குழந்தைகள் விரைவிலேயே பூப்படையும் நிலையை அடை கிறார்கள்.
அதாவது 8 வயது நிரம்பாத பெண் குழந்தைகளும் குழந்தை பருவத்திலேயே பூப்படைகிறார்கள். அதன் பிறகு மாதவிடாயிலும் பிரச்சனைகளைச் சந்திக்கிறார்கள்.
இதற்கு முழுக்க முழுக்க கோழி இறைச் சியே காரணம் இல்லை என்றாலும் அதுவும் ஒரு முக்கிய காரணமே என்று சொல்லலாம்.
Thanks for Your Comments