குஷ்பு போட்ட ட்வீட்.. தீ.. போன்று பற்றிய சர்ச்சை !

0

இந்தியாவிற்கு ஓட்டு போடுங்கள் என்று பாஜக பிரமுகரும் நடிகையுமான குஷ்பு, ஓட்டு போட்ட கையோடு போட்ட ட்வீட் பதிவு சமூக வலைதளங்களில் அனல் பறக்கும் விவாதத்திற்கு வித்திட்டுள்ளது.

குஷ்பு போட்ட ட்வீட்.. தீ.. போன்று பற்றிய சர்ச்சை !
பாஜக நிர்வாகியும், தேசிய மகளிர் நல ஆணைய உறுப்பினருமான நடிகை குஷ்பு சென்னை பட்டினம் பாக்கத்தில் உள்ள வாக்குச் சாவடிக்கு சென்று வாக்களித்தார். 

நடிகை குஷ்பு உடன் அவரது கணவர் சுந்தர் சி மற்றும் மகள்களும் சென்றும் வாக்களித்தார்கள். பின்னர் தேர்தல் ஆணையம் வைத்திருந்தா ஓட்டு போடுங்க. 

போட்டோ எடுங்க, போஸ்ட் போடுங்க என்ற செல்பி ஸ்டாண்டில் குஷ்பு தனது கணவருடன் போட்டோ எடுத்தார். பின்னர் நடிகையும் பாஜக நிர்வாகியுமான குஷ்பு தான் வாக்களித்த புகைப்படங்களை சமூக வலைதளங்களில் பதிவிட்டார். 

அந்த பதிவில் குஷ்புவும் சுந்தர்சியும் வாக்களித்த புகைப்படங்கள் இருந்தன. இந்த புகைப்படத்தில் குஷ்பு போட்ட ஹேஷ்டேக் பெரிய விவாதத்தையே ஏற்படுத்தி உள்ளது.

சிறுநீரின் நிறத்தை கொண்டு இதை கண்டுபிடிக்கலாம்?

நடிகை குஷ்பு #Vote4INDIA என்ற ஹேஷ்டேக் போட்டிருக்கிறார். அதே போல் #VoteFor400Paar என்ற ஹேஷ்டேக் போட்டிருக்கிறது. இதில் #Vote4INDIA என்ற ஹேஷ்டேக் போட்டது தான் விமர்சனத்துக்கு உள்ளாகி உள்ளது. 

பாஜக நிர்வாகியாக உள்ள குஷ்பு எதற்காக #Vote4INDIA என்று போட வேண்டும். 

இந்தியா கூட்டணியினர் தான் #Vote4INDIA என்ற ஹேஷ்டேக்கை கடந்த ஒரு வாரமாக பயன்படுத்தி வரும் நிலையில், அந்த ஹேஷ்டேக்கை எதற்காக போட வேண்டும் என்று கேள்வி எழுப்பி உள்ளார்கள் பாஜக ஆதரவாளர்கள்.

பலர் நடிகை குஷ்புவை விமர்சித்து ட்வீட் போட்டு வருகிறார்கள். நடிகை குஷ்பு ஏற்கனவே உடல் நிலையை காரணம் காட்டி தமிழ்நாடு முழுக்க பாஜக வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம் செய்யவில்லை. 

குஷ்புவின் கணவர் சுந்தர் சி தான், வேலூர் பாஜக கூட்டணி வேட்பாளர் ஏசி சண்முகத்தை ஆதரித்து பிரச்சாரம் செய்தார். நடிகை குஷ்பு பிரச்சாரத்திற்கு வராத போதே பல்வேறு விமர்சனங்கள் எழுந்தன.

இந்நிலையில் #Vote4INDIA என்ற ஹேஷ்டேக் காரணமாக குஷ்பு வேறு கட்சிக்கு தாவ போகிறாரா என்று சிலர் அவரது பதிவிற்கு கீழ் கேள்வி எழுப்பி வருகிறார்கள். 

இந்தியாவை காக்க பாஜக வை தூக்கி எறிந்த அக்கா குஷ்புக்கு வாழ்த்துக்கள் என்று காங்கிரஸ் திமுக ஆதரவாளர்கள் அவருக்கு நன்றி தெரிவித்து வருகிறார்கள்.

தாமிரம் ஏன்? எதற்கு? எவ்வளவு?

அதே நேரம் குஷ்பு இதுவரை எந்த விளக்கமும் அளிக்கவில்லை. இந்தியர்கள் அனைவரும் வாக்களிக்க வேண்டும் என்று அப்படி போட்டாரா அல்லது என்ன காரணம் என்பதை குஷ்பு தான் விளக்கம் அளிக்க வேண்டும். 

அப்போது தான் உண்மை தெரியும் என்கிறார்கள் சில நெட்டிசன்கள்....

Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)
Privacy and cookie settings