கோவையில் வேட்புமனு தாக்கல் செய்த பாஜக தலைவர் அண்ணாமலையின் சொத்து மதிப்பு வெளியாகி உள்ளது. கோவை தொகுதி பாஜக வேட்பாளராக அண்ணாமலை அறிவிக்கப்பட்டு உள்ளார்.
கோவையில் வேட்புமனு தாக்கல் செய்த பாஜக தலைவர் அண்ணாமலையின் சொத்து மதிப்பு வெளியாகி உள்ளது. அசையும் சொத்து 36 லட்சத்து 4100 ரூபாய் உள்ளது என்று அண்ணாமலை குறிப்பிட்டு இருக்கிறார்.
அதே சமயம் தன்னிடம் அசையா சொத்து 1 கோடியே 12 லட்ச ரூபாய் உள்ளது என்றும் அவர் குறிப்பிட்டு உள்ளார்.
வலுவான எலும்புகளுக்கு சாப்பிட வெண்டியது
மனைவி அகிலாவிடம் அசையும் சொத்துக்களாக 2 கோடியே 3 லட்சத்து 12 ஆயிரத்து 77 ரூபாய் உள்ளது என்று கூறி உள்ளார். 53 லட்ச ரூபாய் அசையா சொத்து அகிலாவிடம் உள்ளது என்று குறிப்பிட்டு உள்ளார்.
ஹோண்டா சிட்டி கார் உள்ளது. இதன் மதிப்பு 5 லட்சம் ரூபாய் என்று கூறியுள்ளார்.
முன்னதாக 2021 சட்டசபை தேர்தலில் அரவக்குறிச்சி தொகுதி சட்டசபை தேர்தலில் அவர் தாக்கல் செய்த வேட்புமனுவில் காட்டப்பட்ட சொத்து மதிப்பு இதை விட அதிகம் இருந்தது.
தன்னுடைய மனைவியின் அசையும் சொத்து மதிப்பு 94 லட்சம் ரூபாய் என்று குறிப்பிட்டுள்ளார். அனால் மனைவியின் அசையும் சொத்து மட்டும் 100% அதிகரித்து உள்ளது.
3 வருடங்களில் 100 சதவிகிதம் மனைவியின் அசையும் சொத்து அதிகரித்துள்ளது. கடந்த முறை அசையா சொத்துக்களாக பூர்வீக நிலமாக 76 ஏக்கர் நிலம் உட்பட பல நிலங்களை பட்டியலிட்டு உள்ளார்.
1 கோடி ரூபாய் மதிப்பிற்கு இவர் நிலங்களை பட்டிய லிட்டுள்ளார். தன்னிடம் அசையா சொத்து 1 கோடியே 12 லட்ச ரூபாய் உள்ளது என்றும் அவர் குறிப்பிட்டு உள்ளார்.
அதே சமயம் இவரின் மனைவிக்கு 50 லட்சம் ரூபாயில் அசையா சொத்து உள்ளதாக கடந்த முறை கூறி இருந்தார். இந்த முறை 53 லட்ச ரூபாய் அசையா சொத்து அகிலாவிடம் உள்ளது என்று குறிப்பிட்டு உள்ளார்.
நேற்று கோவையில் செய்தியாளர்களை சந்தித்த அண்ணாமலை, நாங்க 2002-ல் கோவைக்கு வந்தப்ப.. அவங்க அப்பா (அதிமுக வேட்பாளர் சிங்கை ராமச்சந்திரனின் அப்பா) ஒரு எம்.எல்.ஏ.
மூட்டு வலி, முழங்கால் வலி நீங்க மருத்துவம்
எங்கப்பா வேட்டி கட்டிகிட்டு கிராமத்தில் இருந்து 2 தகர டப்பாவை எடுத்து கிட்டு 3 பேருந்து மாறி 2002-ல் கோவைக்கு வந்தேன். இது 22 ஆண்டுகளுக்கு முன்பு. அன்னைக்கு எனக்கு வயது 17.
காந்திபுரம் பஸ் ஸ்டாண்டில் பேருந்தை பிடித்து 2 தகரப் பெட்டியோடு பீளமேடு போய் இறங்குறேன். பீளமேட்டில் பிஎஸ்ஜி பொறியல் கல்லூரி முன்னாடி நானும் என்னுடைய தந்தையும் 2 தகரப் பெட்டியை வைத்து கொண்டு நின்றோம்.
பிஎஸ்ஜி பொறியியல் கல்லூரியில் படிக்க வாய்ப்பு கிடைத்தது. எம்.எல்.ஏ. கோட்டாவில் இல்லை. அப்பா பெயரை வைத்து நான் படிக்கவில்லை.
தனி மனிதனாக உழைத்து இந்த மண்ணில் நீங்கள் எல்லாம் உழைத்து தனிமனிதராக இருக்கிறீர்களோ அதே போல உழைத்து 2 தகரப் பெட்டியோடு கோவைக்கு வந்தேன்., என்று அண்ணாமலை குறிப்பிட்டு இருந்தார்.
Thanks for Your Comments