புதுச்சேரியை அடுத்த சஞ்சீவி நகரைச் சேர்ந்த ரத்தினம் என்கிற கோபி, இவரது மனைவி முத்தாலம்மன்.
ஏலச் சீட்டின் மொத்தத் தொகை இரண்டரை லட்சம் என்றும், மாதந்தோறும் 5 ஆயிரம் ரூபாய் செலுத்த வேண்டும் என்றும் 100 பேரை சேர்த்துள்ளனர்.
மேலும், ஏலச் சீட்டுகளுக்கு மாதம் 4 முறை அதாவது 5, 7, 10, 15 ஆகிய தேதிகளில் பணம் செலுத்த வேண்டும் என்றும் தெரிவித்தனர்.
2021ம் ஆண்டு முதல் ஏலம் நடத்தி வரும் கோபி, ஒரு சிலருக்கு மட்டும் முறையான முறையில் பணம் கொடுத்துள்ளார்.
உடல் எடையை குறைக்கும் போது செய்யக்கூடாத 7 செயல்கள்!
ஆனால், மாதாமாதம் செலுத்தி ஏலம் எடுத்தவர்களுக்கு பணத்தை வழங்காமல் கோபி இழுத்தடித்து வந்ததாக தெரிகிறது. ஏலம் எடுத்தவர்கள் பலமுறை பணம் கேட்டும், கடந்த ஓராண்டாக கோபி பணம் கொடுக்கவில்லை.
இதனால் ஆத்திரமடைந்த அவர்கள் தன்வந்திரி காவல் நிலையத்தில் கோபி மீது புகார் அளித்தனர். இந்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
இதனையடுத்து அவர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர். மாதம் 5 ஆயிரம் ரூபாய் என 100 பேருக்கு ஏலச்சீட்டு நடத்தி 1 கோடியே 31 லட்சத்தை ஏமாற்றிய சம்பவம் புதுச்சேரியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி யுள்ளது.
Thanks for Your Comments