கேரள மாநிலம், கோழிக்கோடு நாதாபுரத்தில் வசித்து வருபவர் ஸைனா. 5-ம் வகுப்பு வரை படித்துள்ள ஸைனா, தன் தந்தையின் சகோதரி மகனான அஹம்மது குஞ்ஞஹம்மது என்பவரை சிறுவயதிலேயே திருமணம் செய்து கொண்டார்.
ஆரம்பத்தில் சென்னையில் பிசினஸ் செய்து வந்த அஹம்மது குஞ்ஞகம்மது, பின்னர் கத்தார் நாட்டில் பெட்ரோலியம் கம்பெனியில் வேலைக்குச் சென்றார்.
மகள்களையும் அழைத்துக் கொண்டு கணவருடன் கத்தர் நாட்டுக்குச் சென்று வசித்தார் ஸைனா. அஹம்மது குஞ்ஞகம்மதும், ஸைனாவும் தங்களுக்கு ஆறு பெண் குழந்தைகள் பிறந்துவிட்டதாக ஒருபோதும் கவலையடைந்ததே இல்லை.
மகள்களை மருத்துவர்கள் ஆக்க வேண்டும் என ஸைனாவும் அவரின் கணவரும் முடிவெடுத்தனர். அது மட்டுமல்லாது, தங்கள் மகள்களை திருமணம் செய்ய வரதட்சணை கேட்கும் வரனை புறக்கணிப்பது எனவும் உறுதியுடன் இருந்தனர்.
பித்தப்பை கற்கள் ஏன் உண்டாகிறது? எப்படி?
வரதட்சணை கேட்காமல் திருமணம் செய்பவருக்கே மகள்களைத் திருமணம் செய்து கொடுப்பது என்று தீர்க்கமாக முடிவெடுத்தனர்.
30 ஆண்டுகள் கத்தாரில் வேலை செய்துவிட்டு அஹம்மது குஞ்ஞகம்மதும் ஸைனாவும் ஊருக்கு வந்த போது, இரண்டு மகள்கள் டாக்டராகி யிருந்தனர். மூன்றாவது, நான்காவது மகள்கள் எம்.பி.பி.எஸ் படித்துக் கொண்டிருந்தனர்.
ஊருக்கு வந்த இரண்டு ஆண்டுகளில் இரண்டு மகள்களுக்கும் திருமணம் செய்து வைத்தனர். இதற்கிடையே, மாரடைப்பு காரணமாக அஹம்மது குஞ்ஞகம்மது மரணமடைந்தார்.
ஆனாலும், மனம் தளராமல் மகள்கள் அனைவரையும் டாக்டர்கள் ஆக்கும் முயற்சியில் இறங்கினார் ஸைனா. 5 மகள்களையும் மருத்துவம் படிக்க வைத்து டாக்டராக ஆக்கி திருமணம் செய்து கொடுத்து விட்டார்.
கடந்த ஏப்ரல் 14-ம் தேதி 5-வது மகள் ரஹ்னாஸ்-க்கு திருமணம் நடத்தி வைத்திருக்கிறார். மகள்களுக்கு வரதட்சணை கொடுத்து திருமணம் முடிக்கக் கூடாது என்ற தன் கொள்கை முடிவிலும் வெற்றி யடைந்துள்ளார்.
நிறைய படிக்க வேண்டும் என எனக்கு ஆசை இருந்தது. பெற்றோர் நிச்சயித்தபடி திருமணம் நடந்தது. இது பற்றி நான் என் கணவரிடம் அடிக்கடி சொல்லுவேன்.
அதற்கு, நம் குழந்தைகளை நன்றாகப் படிக்க வைக்கலாம் எனச் சொல்லுவார். அதுதான், என் மகள்களை நன்றாகப் படிக்க வைப்பதற்கான உத்வேகமாக மாறியது.
சிறுநீரக செயலிழப்பை கண்டறிவது எப்படி?
6 பெண் குழந்தைகளை எப்படி வளர்க்கப் போகிறார்களோ என ஊரில் உள்ளவர்கள் சொல்லுவார்கள். நாங்கள், அவர்கள் அனைவரையும் மருத்துவர்கள் ஆக்கி யிருக்கிறோம்.
முன்பு, நாதாபுரத்தில் குஞ்ஞாலிக்குட்டி என்ற ஒரு டாக்டர் இருந்தார். அவருக்கு ஊரில் நல்ல மரியாதை இருந்தது. அதனால், டாக்டர் படிப்பு மீது எனக்கு ஒரு ஈர்ப்பு இருந்தது.
எனவே, என் மகள்கள் அனைவரையும் டாக்டர் ஆக்க வேண்டும் என முடிவு செய்தேன். மூத்த மகள் எம்.பி.பி.எஸ் படித்ததும், அவள் மூலம் கிடைத்த வழிகாட்டல் மற்றும் உந்துதலால், அடுத்தடுத்த மகள்களும் டாக்டர் படிப்பை தேர்ந்தெடுத்தனர்.
பாட புத்தகங்கள் மட்டும் அல்லாது பொது அறிவை வளர்க்கும் புத்தகங்களை வாசிக்கும் பழக்கத்தை மகள்களிடம் ஏற்படுத்தினார் என் கணவர். மகள்களுடைய படிப்பு முடிந்த பிறகு, ஊருக்கு வரலாம் எனக் கணவர் சொன்னார்.
சொந்த ஊரில் வசிக்க வேண்டும் என நான் சொன்னதால், இங்கு வந்தோம். ஊருக்கு வந்த இரண்டு ஆண்டுகளில், ஒருநாள் நெஞ்சு வலிக்கிறது எனச் சொல்லி சரிந்தவர், எங்களை விட்டு விட்டு போய் விட்டார்.
அதன் பின்னர், மகள்களைத் தொடர்ந்து டாக்டருக்கு படிக்க வைத்தேன். கடைசி மகள் அமீரா, மங்களூரில் தற்போது எம்.பி.பி.எஸ் படித்துக் கொண்டிருக்கிறார். மற்ற 5 மகள்களுக்கும் திருமணம் ஆகிவிட்டது.
மூத்த மகள் பாத்திமா, அபுதாபியில் அரசு மருத்துவராக உள்ளார். இரண்டாவது மகள் ஹாஜரா, யு.ஏ.இ-யில் உள்ளார். மூன்றாவது மகள் ஆயிஷா, நான்காவது மகள் ஃபாயிஷா ஆகியோர் துபாயில் டாக்டராக உள்ளனர்.
ஆட்டிஸம் (Autism) என்பது நோயல்ல, அது ஒரு குறைபாடே !
ஐந்தாவது மகள் ரஹ்னாஸ், வடகரா அரசு மருத்துவமனையில் டாக்டராக உள்ளார்" என்கிறார் பெருமிதம் கொள்ளாமல். மன உறுதியுடன் 6 மகள்களை டாக்டர் ஆக்கிய தாயை கேரளமே கொண்டாடி வருகிறது.
Thanks for Your Comments