மோகன்லாலுக்கு நான் பலமுறை சமைத்துக் கொடுத்திருக்கிறேன். ஆனால் அவனுக்கு நன்றியே கிடையாது. என்ன இப்படி பேசுகிறேன் என்று யாரும் தவறாக நினைக்க வேண்டாம்.
இன்றைய காலகட்டத்தில், படப்பிடிப்பில் ஒரு காட்சிக்காக அவ்வளவு தூரம் மேலே ஏறி, யாரும் கேமராவை வைத்து ரிஸ்க் எடுக்க மாட்டார்கள். ஆனால் வில்லியம்ஸ் அன்றே அப்படிப்பட்ட ரிஸ்கை எல்லாம் எடுத்தார்.
இன்று அதனையெல்லாம் கிரேன்கள் செய்து கொண்டிருக்கின்றன. என்ன வில்லியம்ஸூக்கு கொஞ்சம் முன்கோபம் அதிகம். ஆனால் அவர் தொழிலில் அவ்வளவு நேர்த்தியாக இருப்பார்.
தோலுக்கு மினு மினுப்பை தரும் சைவ உணவுகள் !
எங்களுடைய இரண்டாவது திரைப்படம் ஹலோ மெட்ராஸ் கேர்ள். அந்த திரைப்படத்தில் மோகன்லால் வில்லனாக நடித்தார். அந்த படத்தில் பூர்ணிமா பாக்யராஜும், ஊர்வசியும் கதாநாயகிகளாக நடித்தார்கள்.
எங்களுடைய சொந்த வீட்டிற்கு பக்கத்தில் ஒரு மலையாளத் திரைப்படத்தின் ஷூட்டிங் நடந்து கொண்டிருந்தது.
அதில் அவர் நடித்தார். அப்போதெல்லாம், எங்கள் வீட்டிற்கு அடிக்கடி வரும் அவர், மிகவும் உரிமையாக சாப்பிடுவதற்கு மீன் இருக்கிறதா? என்று கேட்டு வாங்கி, ருசியாக சாப்பிடுவார்.
அப்படி அன்போடும், அரவணைப்போடும் இருந்த மோகன்லால், என்னுடைய கணவர் இறந்த போது, அவரின் இறுதிச் சடங்கிற்கு கூட வரவில்லை.
ஆகையால், எனக்கு மோகன்லால் பிடிக்கவே பிடிக்காது. உலகத்திற்கெல்லாம் அவரை மிகவும் பிடித்திருக்கலாம் ஆனால் எனக்கு பிடிக்காது. காரணம் என்ன வென்றால் வில்லியம்ஸ் என்பவர், இவரை வைத்து நான்கு படங்களை செய்தார்.
ஆஸ்ப்ரின் என்னும் அருமருந்து - சர்வரோக நிவாரணி !
அப்போதெல்லாம், அவருடைய வாயிலிருந்து லால் என்ற வார்த்தையை தவிர வேறு வார்த்தையே வராது. அப்படி அரவணைப்போடு வில்லியம்ஸ் இவரை வைத்து வேலை வாங்கினார். அவருக்கு நாங்கள் அப்போது 60,000 கொடுக்க வேண்டும்.
அதைப்பார்த்த அவர், என்னை பார்த்து சேச்சி நீங்கள் இவ்வளவு கஷ்டப்பட்டு இதைக் கொண்டு வர வேண்டுமா என்று கேட்டான்.
ஆனால் என்னை ஒரு முறை விமான நிலையத்தில் பார்த்த பொழுது, அவன் தலை தெறிக்க ஓடினான். இவனுக்கு என்றைக்குமே என்னிடத்தில் மரியாதை என்பதே கிடையாது என்று பேசினார்.
Thanks for Your Comments