2017ஆம் ஆண்டு, ஏப்ரல் 13ஆம் தேதி, ஹரியாணா மாநிலத்தின் குர்கானில் ஒரு 30 வயது இளைஞர் தனது நண்பர்களுடன் ஒரு பப்புக்கு சென்றுள்ளார். அங்கு மெனுவில் இருந்த ஒரு காக்டெய்ல் பானம் அவரது கவனத்தை ஈர்த்துள்ளது.
சற்று நேரத்தில் மூச்சுத் திணறல் மற்றும் அடிவயிற்றில் வலி உள்ளிட்ட சில அசௌகரியங்கள் ஏற்பட்ட போதிலும், ஆர்வ மிகுதியால் மீண்டும் ஒரு கோப்பை பானத்தை வாங்கி பருகியுள்ளார்.
சில நிமிடங்களுக்குப் பிறகு, அவரது வயிறு வீங்கித் தொடங்கி, கடுமையான வலி ஏற்பட்டுள்ளது. அருகிலிருந்த மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட அவர், தீவிர சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்பட்டார்.
அவரது அடிவயிற்றில் ஒரு துளை உருவாகியிருந்தது சிடி ஸ்கேன் மூலம் கண்டுபிடிக்கப் பட்டது. அறுவை சிகிச்சைக்குப் பிறகு, அவரது உடல் இயல்பு நிலைக்கு திரும்ப 10 நாட்கள் தேவைப்பட்டது.
ஸ்டெம் செல்களில் இருந்து உயிரணு கரு முட்டைகள் தயாரித்தல் !
காக்டெய்ல் பானத்தில் கலக்கப்பட்டிருந்த திரவ நைட்ரஜன் ஆவியாவதற்கு முன்பாகவே, அதைப் பருகியுள்ளார் அந்த இளைஞர். அதுவே வயிற்றில் ஏற்பட்ட துளைக்கு காரணம்.
இந்த சம்பவத்திற்கு பிறகு திரவ நைட்ரஜன் கலந்த உணவுகள், பானங்களை தடை செய்தது ஹரியாணா அரசு.
கடந்த சில தினங்களுக்கு முன்பாக கர்நாடகாவில் சிறுவன் ஒருவன் திரவ நைட்ரஜன் கலந்த ஸ்மோக் பிஸ்கட்டை சாப்பிட்டதும் மூச்சுவிட முடியாமல் வலியால் துடித்த காணொளி சமூக ஊடகங்களில் வைரலானது.
இந்த சம்பவத்தின் எதிரொலியாக திரவ நைட்ரஜனை நேரடியாக எடுத்துக் கொள்ளும் உணவுகள் மற்றும் பானங்களில் கலக்கக்கூடாது என சென்னை உணவுப் பாதுகாப்புத்துறை சார்பாக உத்தரவு பிறப்பிக்கப் பட்டுள்ளது.
திரவ நைட்ரஜன் என்றால் என்ன? அதை ஏன் உணவுகள், பானங்களில் பயன்படுத்துகிறார்கள்? அது உடலில் ஏற்படுத்தும் பாதிப்புகள் என்ன?
இந்த மிகக் குறைந்த வெப்பநிலையால் தான், உணவுகளை உறைய வைக்க, கெட்டுப் போகாமல் பாதுகாக்க இதைப் பயன்படுத்துகிறார்கள் என்கிறார் சென்னை கிறித்துவக் கல்லூரியின் வேதியியல் துறை உதவிப் பேராசிரியர் ஞானமணி சிமியோன்.
தொடர்ந்து பேசிய அவர், நம்முடைய வளிமண்டலத்தில் 78 சதவீதம் நைட்ரஜன் வாயுவே உள்ளது. இதற்கு நிறமும் இல்லை, மணமும் இல்லை.
இந்த வாயுவை, -150 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையில் கிரையோஜெனிக் செயல்முறை மூலம் திரவமாக மாற்றுவார்கள். இந்த திரவ நைட்ரஜன் தீப்பற்றக்கூடிய ஒரு ரசாயனம் அல்ல.
காரணம் இயற்கையாகவே நைட்ரஜன் எதனுடனும் எதிர்வினை புரியாது, இதில் நச்சுத்தன்மையும் இல்லை. ஆனால் நைட்ரஜன் அதன் முழு திரவ நிலையில் இருக்கும் போது, மிகவும் கவனமாக கையாள வேண்டும்.
காரணம் -196 டிகிரி செல்சியஸ் என்பது மிகவும் குறைவான ஒரு வெப்பநிலை. எனவே ஒரு குறிப்பிட்ட நேரத்திற்கு பாதுகாப்பு உபகரணங்கள் இல்லாமல் திரவ நைட்ரஜனை கையாண்டால் அது உடலின் செல்களை உறைந்துப் போகச் செய்யும். என்றார்.
அதே வேளையில் திரவ நைட்ரஜன் என்பது சாதாரண வெப்பநிலையில் எளிதில் ஆவியாகக் கூடிய ஒரு திரவம் தான் என்கிறார் அவர்.
அவ்வாறு ஆவியாகி வரும் புகையைத் தான் நாம் திரவ நைட்ரஜன் கலந்த உணவுகளில் பார்க்கிறோம். அதை அதிகமாக சுவாசிக்கும் போது மூச்சுத் திணறல் உட்பட சில பிரச்னைகள் ஏற்படும்.
காரணம் நைட்ரஜன் வாயு ஒரு இடத்தில் இருக்கும் ஆக்சிஜன் வாயுவை உடனடியாக வெளியேற்றி விடும் என்றார் பேராசிரியர் ஞானமணி.
திரவ நைட்ரஜன் எதற்கு பயன்படுகிறது?
முக்கியமாக இறைச்சி வகைகள், மீன் வகைகளை பதப்படுத்த இது பயன்படுகிறது என்கிறார் எம்ஜிஎம் ஹெல்த்கேர் மருத்துவமனையின் தலைமை உணவியல் நிபுணர் விஜயஸ்ரீ.
உதாரணமாக பெருமளவு மீன்களைப் பிடித்தவுடன் அல்லது இறைச்சியை தோல் நீக்கி வெட்டியவுடன் அதை உடனடியாக பதப்படுத்த இதைப் பயன்படுத்துவார்கள்.
இதுவும் சட்டென்று இறைச்சியை உறைய வைத்து விடும். -18 டிகிரி செல்சியஸ் வெப்பநிலைக்கு கீழ் தான் உணவில் இருக்கும் நுண்ணுயிரிகள் உறைந்த நிலையில் இருக்கும், எனவே உணவும் கெட்டுப் போகாது.
அப்படி பயன்படுத்தும் போது கூட அரசு கூறியுள்ள விதிகளின் படி தான் திரவ நைட்ரஜன் உபயோகிக்க வேண்டும்.
குழந்தைகளுக்கு இலவச இதய அறுவை சிகிச்சை செய்யும் நடிகர் !
இன்னொரு முக்கியமான விஷயம், இவ்வாறு உறைய வைக்கப்பட்ட உணவுகளை உடனடியாக சமைக்கக் கூடாது, சிறிது நேரம் சாதாரண வெப்பநிலையில் வைத்திருக்க வேண்டும்.
காரணம், அதிலிருக்கும் திரவ நைட்ரஜன் முழுவதும் ஆவியாகி விடும் என்பதால் தான். பிறகு தான் அதை உயர் வெப்பத்தில் சமைத்து உண்ண வேண்டும்.
இப்படி யிருக்க நேரடியாக திரவ நைட்ரஜனை ஒரு போதும் உணவுடன் எடுத்துக் கொள்ளக் கூடாது என்கிறார் உணவியல் நிபுணர் விஜயஸ்ரீ. சிறிது காலத்திற்கு முன்பு ‘ஸ்மோக் பீடா’ என்ற ஒன்று பிரபலமானது.
பார்த்தவுடன் புரிந்து விட்டது அதில் திரவ நைட்ரஜன் உள்ளது என அதை வாயில் போட்டு புகை விடுவது ஒரு கேளிக்கையாக பார்க்கப்பட்டது. எவ்வளவு ஆபத்தான விஷயங்களை நாம் விளையாட்டாக கடந்து போகிறோம் என வருத்தமாக இருந்தது.
ஏனென்றால், அதிகமான திரவ நைட்ரஜன் உடலின் உள்ளே செல்லும் போது, அது உங்கள் உடலின் செல்களை உறைந்து போகச் செய்யும்.
ஒருவர் உடலில் இருந்து உயிர் பிரிந்தால் மட்டுமே நடக்க வேண்டிய ஒன்று, உயிருடன் இருக்கும் போதே நடந்தால் என்னவாகும். அதைத் தான் திரவ நைட்ரஜன் செய்கிறது என்கிறார்.
தொடர்ந்து பேசிய அவர், திரவ நைட்ரஜன் முக்கியமாக வயிறு சார்ந்த கோளாறுகளை ஏற்படுத்தும். சில சமயங்களில் இந்த திரவம் வயிற்றில் துளை கூட போட்டு விடும், குடலையும் இது பாதிக்கும்.
அத்தகைய சூழ்நிலைகளில் உயிருக்கே ஆபத்தாக முடியும். செல்கள் உறைந்து விடுவதால், நம் உடலில் வழக்கமாக நடக்கும் செயல்கள் அனைத்தும் பாதிக்கப்படும்.
வேறேதும் வாயுவாக இருந்தால், அதற்கு ஒரு மணம் இருக்கும். எனவே அதைச் சுவாசிக்கும் போது ஒரு அசௌகரியம் ஏற்பட்டு அந்த இடத்திலிருந்து சென்று விடுவோம்.
ஆனால் இந்த வாயுவை சுவாசித்து, மூச்சுப் பிரச்னை ஏற்படும் போது மட்டும் தான் ஏதோ சிக்கல் என்று புரியும். திரவ நைட்ரஜன் முழுவதுமாக ஆவியாகி விட்டால், அந்த உணவை எடுத்துக் கொள்ளலாம்.
குடலியக்கத்தால் புற்று நோய் வராமல் இருக்க சில வழி !
ஆனால் மக்கள் உண்பதே, அந்த வெள்ளைப் புகையின் அழகுக்காக தானே. அதன் ஆபத்தை மக்கள் உணர வேண்டும். எனவே இது குறித்து கொண்டு வரப்பட்டுள்ள கட்டுப்பாடுகள் நல்லது தான் என்று கூறினார் உணவியல் நிபுணர் விஜயஸ்ரீ.
Thanks for Your Comments