அவரது அப்பா மூலமாகத் தான் திலீப் என்ற ரகுமானுக்கு மிகச் சிறு வயதிலேயே இசையிலும் இசைப்பதிவு நுட்பத்திலும் தணியாத ஆர்வம் ஏற்பட்டது.
அதேபோன்ற பிரச்சனைகள் மீண்டும் மீண்டும் தங்கள் குடும்பத்தினரைத் தாக்கினால் எப்படிச் சமாளிப்பது என்கிற இனம் புரியாத பயம் அந்த இளம் பிஞ்சுகளை அப்போது ஆட்கொண்டது.
அந்த மறக்க முடியாத நாட்களைப் பற்றி நினைவு கூர்கிறார் ரகுமானின் தாய் கரிமா. புள்ளைங்க எல்லாம் ஸ்கூலுக்கு போய்க்கிட்டு இருக்குதுங்க. திடீர்னு அவங்க அப்பா படுத்த படுக்கையாகி விட்டார்.
லாட்ஜில் ரெயில்வே ஊழியர் கொடூர கொலை - கள்ள காதலன் கைது !
எனக்கு உலகமே இருண்டுருச்சி. அவரைக் கவனிப்பேனா… பிள்ளைங்களைக் கவனிப்பேனே? ஆஸ்பத்திரிக்கும் வீட்டுக்கும் அலைவேன். காரணமே புரியாம ரொம்ப நாள் ஆஸ்பத்திரியில இருந்தவர் ஒரு நாள் இறந்து போயிட்டாரு.
நாங்க இடிஞ்சு போய்ட்டோம். எந்த நேரமும் ஹார்மோனியமும் கையுமாக இருந்த ரகுமானுக்கு அப்பா இறந்ததில் ரொம்பவே பாதிப்பு. ஸ்கூல் படிப்பைக் கூட அதால சரியா படிக்க முடியல.
சின்னப் பிள்ளைய ஸ்டூடியோ வேலைக்கு அனுப்பியே ஆகணும்னு கட்டாயம். ஆனா, அதுக்கெல்லாம் ஒரு விடிவுக்காலம் வரும்னு நான் மனதார நம்பினேன்.
நோயின் தீவிரம் கடுமையான கால கட்டத்தில் வேலூர் சி.எம்.சி மருத்துவமனையில் ஆர்.கே.சேகர் அனுமதிக்கப்பட்ட போது, திலீப்பும், சகோதரிகளும் அடிக்கடி போய்ப் பார்ப்பார்கள்.
உடல்நலம் வாட்டிய போதும் குழந்தைகளிடம் அதை மறைத்துக் கொண்டு அப்பா புன்னகைப்பார். நல்லாப் படிக்கணும். ஸ்கூலுக்கு லீவு போடக் கூடாது. அம்மா சொல்றபடி நடக்கணும் என்றெல்லாம் அறிவுரைகள் சொல்வார்.
ரஹ்மானின் மூத்த சகோதரியான இசையமைப்பாளர் ரைஹானா சொல்கிறார், கல்யாணமான புதுசுல எங்க அப்பாகிட்ட யாரோ ஒருத்தர் உங்களுக்கு ஒரு மகன் பிறப்பான்.
அவன் பெரிய புகழை அடைவான்னு என்று சொல்லி இருக்காரு. அப்பாவும் அதை எதிர்பார்த்து ரொம்ப ஆவலா காத்திருந்தார். ஆனா முதல்ல நான் பிறந்தேன்.
என்கிட்ட அவர் ரொம்பப் பாசமா இருந்தாலும் அவர் மனசுக்குள்ள அந்தக் குறை இருந்து கொண்டே இருந்தது. அடுத்ததாக திலீப் பிறந்ததும் அவரால சந்தோஷத்தைத் தாங்க முடியல…
வாழ்வில் அற்புதங்கள் நிகழும், அது கடவுள் மூலமாக நடக்கும் என்கிற நம்பிக்கை ரஹ்மானின் குடும்பத்தில் ஒவ்வொருவரிடமும் இருக்கிறது.
ஒவ்வொரு கட்டத்திலும் யாரோ ஒருவர் வந்து, சில எதிர்காலச் செய்திகளைச் சொல்லி வாழ்த்திவிட்டுப் போனதாகச் சொல்கிறார்கள்.
பக்ரீத்தை இப்படி கொண்டாடிய வியாபாரி - நெகிழ்ச்சி தருணம் !
சேகர் இறந்து போன அறை இருந்த இடத்தில் இசைப்பதிவுக் கூடத்தைக் கட்டச் சொல்லி ஆசீர்வதித்து விட்டுப் போனாராம் ஒரு இஸ்லாமிய குரு. அங்கே தான் பஞ்சதன் ஸ்டூடியோ கட்டப்பட்டது.
ரோஜா அங்கே தான் முதன் முதலில் மலர்ந்தது. ரஹ்மான் ஒரு ப்ளூ பேபியாகத்தான் பிறந்தார். குழந்தை உயிர் பிழைக்குமாங்கிறதே பெரிய கேள்வியா இருந்தது. அப்பா அப்ப ரொம்ப டென்ஷனாக இருந்தார்.
எப்படியோ, குழந்தை உயிர் பிழைச்சது. அப்பா முகத்துல பெரிய நிம்மதி. குழந்தை வளர வளர அதுகிட்ட பெரிய இசைத் திறமை இருந்ததைப் பார்த்தவர் ரொம்ப உற்சாகமானார்.
ஆனால், எந்தப் பாரபட்சமும் காட்டாமல் என்னையும் ரஹ்மானையும் ஒரே நேரம் பியானோ, கிடார் வகுப்புகளில் பைலட் எட்வின், தன்ராஜ் மாஸ்டரிடம் சேர்த்து விட்டார்.
குழந்தைகளுக்கு இலவச இதய அறுவை சிகிச்சை செய்யும் நடிகர் !
நாங்க வாசிப்பதையும் பாடுவதையும் ரொம்ப ரசிச்சுக் கேட்பார். அப்போதெல்லாம் பாட்டும் கூத்துமா எங்க குடும்பமே ரொம்ப ஜாலியா இருப்போம். எங்க எல்லாருக்குமே அப்பான்னா ரொம்பப் பிரியம்.
அவர் தந்தது தானே எல்லாமே! எவ்வளவு அற்புதமான வாழ்க்கை. அப்பா திடீர்னு இறந்து போனதும் ஸ்தம்பிச்சுப் போய்ட்டோம் என்று அந்த நினைவலைகளில் ஆழ்கிறார் ரைஹானா.
Thanks for Your Comments