பெங்களூரில் நடிகர் தர்ஷனின் ரசிகர்களின் தொடர் தொல்லையால் அவர்களை போலீசார் விரட்டியடித்து வரும் நிலையில் தற்போது போலீஸ் ஸ்டேஷனையே துணிபோட்டு மூடியுள்ளனர்.
இந்நிலையில் தான் பவித்ரா கவுடாவுக்கு இன்ஸ்டாகிராமில் சித்ரதுர்காவை சேர்ந்த 33 வயது நிரம்பிய ரேணுகாசாமி என்பவர் ஆபாசமாக மெசேஜ் அனுப்பி உள்ளதாக கூறப்படுகிறது.
அதோடு ஆபாசமான படங்களையும் அனுப்பி உள்ளதாக கூறப்படுகிறது. இதுபற்றி பவித்ரா கவுடா, நடிகர் தர்ஷனிடம் தெரிவித்துள்ளார்.
நீரிழிவைக் கட்டுப்படுத்தும் கொய்யா !
இத்தகைய சூழலில் தான் திடீரென்று ரேணுகாசாமி சித்ரதுர்ககாவில் உள்ள வீட்டில் இருந்து மாயமாகி உள்ளார். அவரை குடும்பத்தினர் தேடிவந்தனர்.
இத்தகைய சூழலில் தான் அவரது உடல் பெங்களூர் சும்மன்னஹள்ளியில் கால்வாயில் பிணமாக மீட்கப்பட்டது. உடலை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டனர்.
அப்போது நடிகர் தர்ஷன் மற்றும் அவரது கூட்டாளிகள் ரேணுகாசாமியை கடத்தி பட்டணகெரேயில் உள்ள கார் ஷெட்டில் அடைத்து சித்ரவதை செய்து கொன்று உடலை கால்வாயில் வீசியது தெரியவந்தது.
இதற்காக நடிகர் தர்ஷன் பணம் கொடுத்துள்ளதாக கூறப்பட்டது. இதுதொடர்பாக போலீசார் நடிகர் தர்ஷன், நடிகை பவித்ரா கவுடா உள்பட 13 பேரை அதிரடியாக கைது செய்துள்ளனர்.
இத்தகைய சூழலில் தான் பெங்களூர் போலீசாருக்கு எதிராக நடிகர் தர்ஷனின் ரசிகர்கள் திரும்பி உள்ளனர். நடிகர் தர்ஷனை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என்று அவருக்கு ஆதரவாக வலைதளங்களில் கருத்துகள் பதிவிட்டு வருகின்றனர்.
அது மட்டுமின்றி தர்ஷனிடம் விசாரணை நடத்தப்படும் போலீஸ் நிலையத்தில் தினமும் அவரது ரசிகர்கள் கூடி வருகின்றனர்.
இதனால் போலீஸ் நிலையத்தை சுற்றி 200 மீட்டர் தூரத்துக்கு 144 தடை உத்தரவு போடப்பட்டுள்ளது. ஆனாலும் ரசிகர்கள் தொடர்ந்து அங்கு கூடி வருகின்றனர்.
மாரடைப்புக்கு செயல்முறை மூலம் சிகிச்சை !
இதனால் நேற்றைய தினம் போலீசார் ரசிகர்கள் மீது லேசான தடியடி நடத்தி விரட்டினர். இதற்கிடையே மீடியாக்களும் அங்கு கூடி போலீஸ் நிலையம் தொடர்பான வீடியோக்களை சேனல்களில் வெளியிட்டு வருகின்றன.
இதனால் ரசிகர்கள் மற்றும் மீடியாக்களை சமாளிக்கும் வகையில் பெங்களூர் போலீசார் அன்னபூர்னேஷ்வரி நகர் போலீஸ் நிலையத்தை துணிபோட்டு மூடியுள்ளனர்.
போலீஸ் நிலையத்தில் மீடியா, ரசிகர்கள் குவிவதால் இப்படி போலீஸ் நிலையத்தை துணிப்போட்டு மறைப்பது பெங்களூர் வரலாற்றில் இதுவே முதல் முறையாகும்.
Thanks for Your Comments