அரசியலுக்கு வரமாட்டேன்.. KPY பாலா சொன்னதை கேளுங்க !

1 minute read
0

பல்வேறு தரப்பு மக்களுக்கு உதவி செய்து வரும் நடிகர் லாரன்ஸ் மற்றும் கேபிஒய் பாலா ஆகியோர் விரைவில் நடிகர் விஜயின் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைய உள்ளதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன. 

அரசியலுக்கு வரமாட்டேன்.. KPY பாலா சொன்னதை கேளுங்க !
இது பற்றிய கேள்விக்கு கேபிஒய் பாலா அளித்த பதில் அனைவரையும் கவனிக்க வைத்துள்ளது.

நடிகர் லாரன்ஸ் மற்றும் விஜய் டிவியின் கலக்கப் போவது யாரு நிகழ்ச்சி மூலம் புகழ்பெற்று நடிகராக மாறி உள்ள பாலா ஆகியோர் தமிழகத்தில் பல்வேறு தரப்பு மக்களுக்கு உதவி செய்து வருகின்றனர். 

இருவரும் தனித்தனியாகவும், அவ்வப்போது சேர்ந்தும் உதவிகள் செய்து வருகின்றனர். இந்நிலையில் தான் கடந்த 3 நாட்களாக ஒரு செய்தி உலா வருகிறது. 

சுவையான சிக்கன் முட்டை மிளகு சாப்ஸ் செய்வது எப்படி?

அதாவது நடிகர் லாரன்ஸ் மற்றும் கேபிஒய் பாலா ஆகியோர் நடிகர் விஜயின் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைய உள்ளதாக செய்திகள் பரவி வருகிறது.

இத்தகைய சூழலில்தான் சென்னை பல்லாவரத்தில் உள்ள தனியார் கல்லூரியில் அடுக்குமாடி நிறுவனங்களின் கண்காட்சி நடைபெற்றது. 

இந்த கண்காட்சியை ரிப்பன் வெட்டி திறந்து வைத்த சின்னத்திரை பிரபலம் கேபிஒய் பாலா அதன்பிறகு பத்திரிகையாளர்களை சந்தித்தார்.

இந்த வேளையில் அவரிடம், நடிகர் விஜயின் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைகிறீர்களா? நடிகர் விஜய் அழைத்தால் அரசியலுக்குள் நுழைந்து தேர்தலில் போட்டியிடுவீர்களா? என்ற கேள்விகளை கேட்டனர். 

அதற்கு பாலா அளித்த பதில் அனைவரையும் கவனிக்க வைத்துள்ளது. இது தொடர்பாக பாலா கூறுகையில், நான் ஒரு சாதாரண பையன். எனக்கு அரசியல் பற்றி போதிய அறிவு இல்லை. 

எனக்கு அரசியல் தெரியாது. அரசியல் வரும் அளவுக்கு எனக்கு தகுதியில்லை. அங்கு இருக்கிறவர்கள் எல்லாம் லெஜண்ட்ஸ். நான் சாதாரண சேவகன். எனக்கு பதவி எதுவும் தெரியாது. உதவி மட்டுமே தெரியும். 

அரசியலை என் வீட்டில் ஒப்புக் கொள்ள மாட்டார்கள். எனக்கும் அரசியல் தெரியாது என்றார். இதன் மூலம் நடிகர் விஜய் அழைத்தாலும் கூட அரசியலில் இறங்க மாட்டேன் என கேபிஒய் பாலா திட்டவட்டமாக கூறியுள்ளார். 

ஓட்டுனருக்கு தெரிந்திருக்க வேண்டிய விஷயம் !

மேலும் அவர் கூறுகையில், தற்போது உதவி செய்வதற்காக கூடுதலாக உழைத்து வருகிறேன். அதில் கிடைக்கும் பணத்தை வைத்து பிறருக்கு உதவி செய்து வருகிறேன். எனது திருமணத்திற்கு பிறகும் மக்கள் பணி தொடரும்'' என்று கூறினார்.

Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)
Today | 2, April 2025
Privacy and cookie settings