குணா குகைக்கு சென்ற மஞ்சும்மெல் பாய்ஸ்... என்ன நடந்தது?

0

900 அடி ஆழம், மிகவும் குறுகலான குகைகள், வழுக்கும் பாறைகள், தடுக்கி விழுந்தால் மரணம் இது தான் கொடைக்கானலின் மதிகெட்டான் சோலையில் உள்ள 'குணா குகைகளின்' அறிமுகம். இந்த குகைளில் இதுவரை எத்தனயோ பேர் விழுந்து இறந்துள்ளனர். 

குணா குகைக்கு சென்ற மஞ்சும்மெல் பாய்ஸ்... என்ன நடந்தது?
ஆனால் இதில் விழுந்து உயிரோடு திரும்பிய 'சுபாஷ்' என்கிற கேரள நபரை மையமாக வைத்து எடுக்கப்பட்ட மஞ்சும்மெல் பாய்ஸ் என்கிற திரைப்படம் சமீபத்தில் வெளியாகி தென்னிந்தியா முழுக்க பெரும் வரவேற்பை பெற்று வருகிறது. 

இந்நிலையில் 18 வருடம் கழித்து உண்மையான மஞ்சும்மெல் பாய்ஸ் குணா குகைகளுக்கு திரும்பி போட்டோ மற்றும் வீடியோ பதிவிட்டது அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது!

உண்மைச் சம்பவங்களை அடிப்படையாகக் கொண்ட படங்கள் எப்போதுமே ஒரு தனி வசீகரம் கொண்டவை. 

அந்த வகையில் சமீபத்தில் வெளியான மஞ்சும்மெல் பாய்ஸ் படமும் தமிழகத்தில் நடந்த உண்மை சம்பவத்தை மையமாக வைத்து எடுக்கப் பட்டுள்ளது. 

ஒரு கோடியாக இருந்தாலும் அந்த விளம்பரத்தில் நடிக்க மாட்டேன்.. விஜயகாந்த்

மலையாளத்தில் எடுக்கப்பட்ட இப்படம் தமிழ்நாட்டிலும் ஏகோபித்த வரவேற்பை பெற்று வருகிறது. கொடைக்கானல் தமிழ்நாட்டின் புகழ்பெற்ற மலைவாசஸ்தலம் மற்றும் சுற்றுலா தலமாகவும் உள்ளது. 

இங்குள்ள பிக்னிக் ஸ்பாட்களில் குணா குகையும் ஒன்று. 1991 ஆம் ஆண்டு கமல்ஹாசன் நடித்த குணா திரைப்படம் அங்கு படமாக்கப் பட்டதால் இதற்கு குணா குகை என்று பெயர் வந்தது. 

அதுவரை டெவில்ஸ் கிச்சன் என்று அழைக்கப்பட்டது. குகைகளின் ஆழமான குறுகிய பள்ளத்தாக்குகள் பல உயிர்களை காவு வாங்கியதாக கூறப்படுகிறது. 

குகைக்குள் நுழைய முயன்ற 13 பெரியவர்கள் இறந்துள்ளனர் என்று தகவல்கள் கூறுகின்றன, ஆனால் உண்மையில் 50 க்கும் மேற்பட்டோர் குகைக்குள் தவறி விழுந்து இறந்துள்ளனர் என்று உள்ளூர் மக்கள் கூறுகின்றனர். 

அதனால் குணா குகைகள் முழுக்க வேலிகளும் தடுப்புகளும் போடப்பட்டு பாதுகாக்கப்பட்டு வருகின்றன.

சிதம்பரம் என்கிற இயக்குனர் இயக்க கேரள நட்சத்திரங்கள் நடித்து வெளியான மஞ்சும்மெல் பாய்ஸ் திரைப்படத்தை மலையாளம், தமிழ் திரைப்பட ரசிகர்கள் மிகவும் கொண்டாட ஆரம்பித்தனர். காரணம் இது ஒரு உண்மையான சம்பவம் என்பதால் தான். 

இந்த திரைப்படம் வெளிவந்த நாள் முதல் இன்ஸ்டாகிராம், பேஸ்புக், வாட்ஸ்அப் என எந்த சமூக வலைத்தளத்தை திறந்தாலும் 'கண்மணி அன்போடு காதலன்' என்கிற கமல்ஹாசன் நடித்த குணா திரைப்பட பாடல் தான் நம் காதுகளை கிழிக்கிறது.

அதுமட்டுமல்லாமல், சுற்றுலாப் பயணிகள் அனைவரும் குணா குகைகளை காண படையெடுத்து வந்த வண்ணம் இருப்பதால் கொடைக்கானல் சுற்றுலாப் பயணிகளால் நிரம்பி வழிகிறது எனலாம்.

குளிர் காலத்தில் நாம் உண்ணும் உணவு முறைகள் !

குணா குகைக்கு தமிழகம் மற்றும் கேரளாவில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். 

அந்த வகையில் கடந்த 2006ம் ஆண்டு கேரளாவின் மஞ்சுமேல் பகுதியை சேர்ந்த நண்பர்கள் சிலர் சுற்றுலாவாக கொடைக்கானலுக்கு வந்த போது அங்குள்ள குணா குகைக்கு சென்றனர்.

அப்போது அவர்களில் ஒருவர் மட்டும் குணா குகையில் உள்ள குழியில் வழுக்கி விழுகிறார். அவருடைய நண்பர்கள் ரிஸ்க் எடுத்து அவரைக் காப்பாற்றுகிறார்கள். 

குணா குகைக்கு சென்ற மஞ்சும்மெல் பாய்ஸ்... என்ன நடந்தது?
அதை மையமாக வைத்து எடுக்கப்பட்ட படம் மஞ்சும்மெல் பாய்ஸ் படம் வந்ததையடுத்து கொடைக்கானலில் உள்ள குணா குகையை காண சுற்றுலா பயணிகள் குவிந்து வருகின்றனர். 

இந்நிலையில் நேற்று திடீரென கொடைக்கானலில் உள்ள குணா குகைக்கு ரியல் மஞ்சுமெல் பாய்ஸ் திடீர் விசிட் செய்தனர்.

சம்பவம் நடந்து 18 ஆண்டுகளுக்குப் பிறகு, அவர்கள் அனைவரும் மலரும் நினைவுகளைப் பகிர்ந்து கொள்ள குடும்பத்துடன் குணா குகைக்குச் சென்றனர். 

மோசன் சிக்னஸ் என்றால் என்ன?

அங்கே ஒன்றாக அமர்ந்து படமெடுத்து கண்மணி அன்போடு காதலன் பாடலைப் பாடி மகிழ்ந்தனர். அப்போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)
Privacy and cookie settings