பாகிஸ்தான் கிரிக்கெட் அணியால் தலைகுனிவை சந்தித்த பாக். ராணுவம் !

0

பாகிஸ்தான் கிரிக்கெட் அணி டி20 உலகக் கோப்பை தொடரில் குரூப் சுற்றுடன் வெளியேறி இருக்கும் நிலையில் அந்த நாட்டின் இராணுவம் கேலி, கிண்டலுக்கு ஆளாகி தலை குனிவை சந்தித்து இருக்கிறது.

பாகிஸ்தான் கிரிக்கெட் அணியால் தலைகுனிவை சந்தித்த பாக். ராணுவம் !
2024 டி20 உலகக் கோப்பை தொடரிலிருந்து பாகிஸ்தான் அணி குரூப் சுற்றுடன் வெளியேறி உள்ளது. 

தான் ஆடிய மூன்று போட்டிகளில் அமெரிக்கா மற்றும் இந்திய அணியிடம் தோல்விகளை சந்தித்த பாகிஸ்தான், கனடா அணிக்கு எதிராக போராடி வெற்றி பெற்றது. 

இந்த நிலையில் இந்தியா மற்றும் அமெரிக்க அணிகள் அதிக புள்ளிகளை பெற்று குரூப் சுற்றில் தங்கள் பிரிவில் முதல் இரண்டு இடங்களில் இடம் பிடித்துள்ளன. அதன் மூலம் சூப்பர் 8 சுற்றுக்கு இந்த இரண்டு அணிகளும் தகுதி பெற்று விட்டன.

சிறுவயதில் வறுமை மரபணுக்களில் தெரியும் !

பாகிஸ்தான் அணியால் அதிகபட்சமாக மூன்றாவது இடத்தை மட்டுமே பிடிக்க முடியும் என்பதால் அந்த அணி குரூப் சுற்றுடன் வெளியேறுவது உறுதியாகி இருக்கிறது. 

பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் இந்த மோசமான தோல்வியால் கடந்த சில மாதங்கள் முன்பு பாகிஸ்தான் வீரர்களுக்கு பயிற்சி அளித்த அந்த நாட்டின் ராணுவமும் கேலி, கிண்டலை சந்திக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டு இருக்கிறது. 

2023 ஒருநாள் போட்டி உலகக்கோப்பையில் பாகிஸ்தான் அணி குரூப் சுற்றுடன் வெளியேறியது. 

அப்போது பாகிஸ்தான் வீரர்களுக்கு உடற்தகுதி இல்லை எனக் கூறி அவர்களை பாகிஸ்தான் ராணுவத்துடன் பயிற்சி மேற்கொள்ள வைத்தது அந்நாட்டின் கிரிக்கெட் அமைப்பு. 

பாகிஸ்தான் வீரர்களும் ஒரு வாரம் ராணுவத்தினரோடு சேர்ந்து தீவிரமான பயிற்சியில் ஈடுபட்டு இருந்தனர். அப்படி தீவிரமான பயிற்சிகளை மேற்கொண்ட போதும் பாகிஸ்தான் அணி டி20 உலகக் கோப்பையில் மோசமாக தோற்று வெளியேறி உள்ளது. 

இந்த அடுத்து பலரும் பாகிஸ்தான் ராணுவம் எப்படி சரணடைய வேண்டும்? என பயிற்சி அளித்து இருக்கிறது. 

144 மற்றும் ஊரடங்கு உத்தரவு - ஒரு அலசல்

அதைத்தான் பாகிஸ்தான் வீரர்கள் அமெரிக்கா மற்றும் இந்திய அணிகளிடம் செய்திருக்கிறார்கள் என கிண்டல் செய்து வருகிறார்கள். பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் மோசமான செயல்பாட்டால் அந்த நாட்டின் ராணுவம் தலைகுனிவை சந்தித்து உள்ளது.

Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)
Privacy and cookie settings