காலை 9.10 மணிக்கு இந்திரா காந்தி வெளியே வந்த போது வெயில் அதிகமாக இருந்தது. வெயிலில் இருந்து அவரைப் பாதுகாக்க, நாராயண் சிங் என்ற பாதுகாவலர் அவருக்குப் பக்கத்தில் கருப்புக் குடையுடன் நடந்து வந்தார்.
இதற்கிடையில், உஸ்தினோவுக்குத் தேநீர் வழங்க ஒரு டீ-செட்டுடன் ஒரு ஊழியர் கடந்து சென்றார். இந்திரா அவரை அழைத்து, உஸ்தினோவுக்கு வேறு ஒரு டீ-செட்டைப் பயன்படுத்துமாறு கூறினார்.
தவானுடன் பேசிக் கொண்டே, அக்பர் சாலையை இணைக்கும் விக்கெட் கேட்டை இந்திரா காந்தி அடைந்தார்.
ஏமன் சென்றிருந்த குடியரசுத் தலைவர் கியானி ஜைல் சிங்குக்கு, பிரிட்டன் இளவரசி ஆனுடனான விருந்தில் தான் கலந்து கொள்ளும் வகையில்,
பாலம் விமான நிலையத்தில் 7 மணிக்குத் தரையிறங்க வேண்டும் என்ற இந்திராவின் உத்தரவுக்கேற்ப, செய்தி அனுப்பியதாக அவரிடம் கூறிக்கொண்டிருந்தார்.
கால் மணி நேரத்தில் உருவான டாடா உப்பு.. எப்படி தெரியுமா?
திடீரென அங்கு பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த பியாந்த் சிங், தனது ரிவால்வரை எடுத்து இந்திரா காந்தியை நோக்கித் துப்பாக்கியால் சுட்டான். தோட்டா அவரது வயிற்றில் தாக்கியது.
இந்திரா தனது முகத்தைப் பாதுகாக்க எண்ணித் தனது வலது கையை உயர்த்தினார், ஆனால் பியாந்த், பின்னர் நேருக்கு நேராக, மேலும் இரண்டு முறை சுட்டான். இந்தத் தோட்டாக்கள் அவரது பக்கவாட்டு, மார்பு மற்றும் இடுப்பில் நுழைந்தன.
அங்கிருந்து ஐந்து அடி தூரத்தில் தனது தாம்சன் தானியங்கி கார்பைனுடன் நின்றிருந்த சத்வந்த் சிங், இந்திரா காந்தி விழுவதைக் கண்டு அதிர்ந்து செயலற்று நின்று விட்டார்.
அப்போது பியாந்த் அவரை நோக்கி சுடு சுடு என்று கத்தினார். சத்வந்த் உடனடியாக தனது தானியங்கி கார்பைனின் 25 தோட்டாக்களையும் இந்திரா காந்தியின் உடலுக்குள் பாய்ச்சினான்.
பியாந்த் சிங்கின் முதல் துப்பாக்கிச் சூட்டில் இருந்து 25 விநாடிகள் கடந்தும் அங்கு நிறுத்தப் பட்டிருந்த பாதுகாப்புப் படையினரிடமிருந்து எந்த எதிர்வினையும் இல்லை.
ஆனால் அவர் இந்திரா காந்தியை நெருங்கும் நேரத்தில், சத்வந்த் சுட்ட தோட்டாக்கள் அவரது தொடை மற்றும் காலில் தாக்கி, அவர் அங்கேயே சுருண்டு விழுந்தார்.
இந்திரா காந்தியின் உதவியாளர்கள் அவரது சிதைந்த உடலைப் பார்த்து ஒருவருக் கொருவர் கட்டளையிடத் தொடங்கினர். என்ன சத்தம் என்று பார்ப்பதற்காக ஒரு போலீஸ் அதிகாரி தினேஷ் குமார் பட் அக்பர் சாலையில் இருந்து வெளியே வந்தார்.
அதே நேரத்தில் பியாந்த் சிங் மற்றும் சத்வந்த் சிங் இருவரும் தங்கள் ஆயுதங்களைக் கீழே போட்டனர். பியாந்த் சிங், நாங்கள் செய்ய வேண்டியதை நாங்கள் செய்து விட்டோம்.
இப்போது நீங்கள் என்ன செய்ய விரும்புகிறீர்களோ அதைச் செய்யுங்கள் என்றார். அப்போது நாராயண் சிங் முன்னோக்கிப் பாய்ந்து பியாந்த் சிங்கை தரையில் சாய்த்தார்.
நண்பர்கள் செய்த துரோகத்தால் உடைந்து போன விஜயகாந்த் !
ITBP வீரர்கள் அருகில் இருந்த காவலர் அறையிலிருந்து ஓடி வந்து சத்வந்த் சிங்கையும் தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டு வந்தனர். ஆம்புலன்ஸ் ஒன்றும் எப்போதும் அங்கே நின்று கொண்டிருக்கும். ஆனால் அன்று அதன் டிரைவரைக் காணவில்லை.
இந்திரா காந்தியை ஆர்.கே.தவான் மற்றும் பாதுகாவலர் தினேஷ் பட் ஆகியோர் மைதானத்தில் இருந்து அழைத்து வந்து வெள்ளை நிற அம்பாசிடர் காரின் பின் இருக்கையில் அமர வைத்தனர்.
தவான், போத்தேதார் மற்றும் டிரைவர் முன் இருக்கையில் அமர்ந்தனர். கார் நகரத் தொடங்கியதும், சோனியா காந்தி வெறுங்காலுடன், டிரஸ்ஸிங் கவுனில், அம்மா, அம்மா என்று அலறியபடி ஓடி வந்தார்.
இந்திரா காந்தியின் நிலையைப் பார்த்து, அதே நிலையில் காரின் பின் இருக்கையில் அமர்ந்தார். இந்திரா காந்தியின் இரத்தம் தோய்ந்த தலையை மடியில் கிடத்திக் கொண்டார்.
கார் மிக வேகமாக எய்ம்ஸ் நோக்கி நகர்ந்தது. நான்கு கிலோ மீட்டர் பயணத்தின் போது யாரும் எதுவும் பேசவில்லை. சோனியாவின் கவுன் இந்திராவின் ரத்தத்தால் நனைந்திருந்தது.
தாகத்துக்கும் தேகத்துக்கும் உகந்த தர்பூசணி !
கார் காலை 9.32 மணிக்கு எய்ம்ஸ் சென்றடைந்தது. இந்திராவின் இரத்த வகையான O Rh நெகட்டிவ் போதுமான அளவு கையிருப்பில் இருந்தது.
ஆனால் சப்தர்ஜங் சாலையில் இருந்து எய்ம்ஸ் மருத்துவமனைக்கு இந்திரா காந்தி படுகாயமடைந்த நிலையில் கொண்டு வரப்படுகிறார் என்று யாரும் தெரிவிக்கவில்லை.
எமர்ஜென்சி வார்டு கேட்டைத் திறந்து, இந்திராவை காரிலிருந்து இறக்க மூன்று நிமிடம் ஆனது. ஒரு ஸ்ட்ரெச்சர் கூட இல்லை.
எப்படியோ ஒரு சக்கரத்துடன் கூடிய ஸ்ட்ரெச்சர் ஏற்பாடு செய்யப்பட்டது. அவரை காரில் இருந்து இறக்கிய போது, இந்திராவை அந்த நிலையில் பார்த்து, அங்கிருந்த மருத்துவர்கள் அச்சமடைந்தனர்.
அவர்கள் உடனடியாக எய்ம்ஸ்-ன் மூத்த இருதயநோய் நிபுணரை அழைத்துத் தகவல் தெரிவித்தார். சில நிமிடங்களில் டாக்டர் குலேரியா, டாக்டர் எம்.எம்.கபூர் மற்றும் டாக்டர் எஸ்.பலராம் ஆகியோர் அங்கு வந்தனர்.
எலக்ட்ரோ கார்டியோகிராம் இந்திராவின் இதயத்தின் சிறிய அசைவைக் காட்டியது, ஆனால் துடிப்பு இல்லை.
ஆக்சிஜன் நுரையீரலை அடைந்து மூளையை உயிர்ப்புடன் வைத்திருக்க ஒரு மருத்துவர் அவரது வாய் வழியாக ஒரு குழாயை அவரது மூச்சுக்குழாயில் செருகினார்.
இந்திராவுக்கு 80 பாட்டில் இரத்தம் செலுத்தப்பட்டது, இது அவரது உடலின் சாதாரண இரத்த அளவை விட ஐந்து மடங்கு அதிகம்.
டாக்டர் குலேரியா கூறுகிறார், அவர் இவ்வுலகை விட்டுப் பிரிந்துவிட்டார் என்ற எண்ணம் எனக்கு ஏற்பட்டது. அதன்பிறகு அதை உறுதிசெய்ய ECG எடுத்தோம். பிறகு அங்கு இருந்த சுகாதாரத்துறை அமைச்சர் சங்கரானந்திடம் நான், இப்போது என்ன செய்வது? இறந்துவிட்டதாக அறிவிக்க முடியுமா? என்று கேட்டேன். அவர், வேண்டாம் என்றார். பிறகு ஆபரேஷன் தியேட்டருக்கு அழைத்துச் சென்றோம்.
இதயம் மட்டுமே பாதுகாப்பாக இருந்தது
மருத்துவர்கள் அவரது உடலை இதயம் மற்றும் நுரையீரல் இயந்திரத்துடன் இணைத்தனர், இது அவரது இரத்தத்தை சுத்தம் செய்யத் தொடங்கியது, இதன் காரணமாக அவரது இரத்த வெப்பநிலை சாதாரண 37 டிகிரியில் இருந்து 31 டிகிரிக்கு குறைந்தது.
அவரது கல்லீரலின் வலது பக்கத்தில் தோட்டாக்கள் துளைத்திருப்பதையும், அவரது பெருங்குடலில் குறைந்தது பன்னிரண்டு துளைகள் செய்யப் பட்டிருப்பதையும், சிறுகுடலும் கடுமையாக சேதமடைந்ததையும் மருத்துவர்கள் கவனித்தனர்.
தோட்டாக்கள் தாக்கியதில் அவரது நுரையீரல் ஒன்றும் சுடப்பட்டு, முதுகுத் தண்டும் உடைந்தது. அவரது இதயம் மட்டும் அப்படியே இருந்தது.
இந்திரா காந்தி தனது மெய்ப்பாதுகாவலர்களால் சுடப்பட்டு கிட்டத்தட்ட நான்கு மணி நேரத்திற்குப் பிறகு பிற்பகல் 2:23 மணிக்கு அவர் இறந்து விட்டார் என்று அறிவிக்கப்பட்டது.
நண்டு சாப்பிட்டால் கிடைக்கும் நன்மைகள் !
ஆனால் அரசு சார்பு ஊடகங்கள், மாலை 6 மணி வரை அதை அறிவிக்கவில்லை.
இந்திரா காந்தியின் வாழ்க்கை வரலாற்றை எழுதிய இந்தர் மல்ஹோத்ரா, இந்திரா காந்தி மீது இதுபோன்ற தாக்குதல் நடக்கலாம் என்று உளவுத்துறையினர் அச்சம் தெரிவித்ததாகக் கூறினார்.
ஆனால் அந்தக் கோப்பு இந்திராவைச் சென்றடைந்ததும், "நாம் மதச்சார்பற்றவர்கள் இல்லையா? என்று கோபத்துடன் மூன்று வார்த்தைகளை எழுதினார்.
அதன்பிறகு, அவருக்கு அருகில் ஒரே இடத்தில் இரண்டு சீக்கிய பாதுகாப்புப் பணியாளர்கள் பணியில் அமர்த்தப் படுவதில்லை என்று முடிவு செய்யப்பட்டது.
அக்டோபர் 31 அன்று, சத்வந்த் சிங் தனக்கு வயிற்றில் வலி இருப்பதாகவும் கழிப்பறைக்கு அருகில் தனக்குப் பணி வழங்கப்பட வேண்டும் என்றும் கோரியிருந்தார்.
அதனால் பியாந்த் மற்றும் சத்வந்த் இருவரும் ஒன்றாக நிறுத்தப்பட்டனர். அவர்கள் இந்திரா காந்தியை ஆபரேஷன் ப்ளூஸ்டாருக்கு பழிவாங்கினார்கள்.
Thanks for Your Comments