10 வருஷங்களா குப்பைகளுக்கு நடுவே வாழ்ந்த பெண்கள் !

0

கோவை ராம் நகர் பகுதியில் உள்ள  தனியார் அடுக்குமாடி குடியிருப்பு ஒன்று வசித்து வருபவர் ருக்மணி (75) . அவரது மகள் திவ்யா (45). இருவரும் சுமார் 10 ஆண்டுகளாக வீட்டை விட்டு வெளியே வராமல் வாழ்ந்து வருகின்றனர்.

10 வருஷங்களா குப்பைகளுக்கு நடுவே வாழ்ந்த பெண்கள் !
அக்கம் பக்கத்திலும் யாருடனும் பேசாமல் வெளிஉலக தொடர்பே இல்லாமல் இருந்துள்ளனர். வீட்டையும் சுத்தம் செய்யாமல், குவிந்து கிடந்த குப்பைகளுக்கு நடுவில் வாழ்ந்து வந்துள்ளனர்.

இது குறித்து அக்கம் பக்கத்தினர் மூலம் சமூக ஆர்வலர் ஒருவருக்கு தகவல் தெரிவிக்கப் பட்டுள்ளது. அவர் அங்கு சென்று பெண்களுடன் உரையாடி அவர்களின் நிலையை வீடியோவாக எடுத்து அதிகாரிகளின் கவனத்துக்கு கொண்டு சென்றார். 

ஒரு ரூபாய்க்கு சாப்பாடு.. ஈரோட்டில் அதிசய மனிதர் !

அப்போது சுகாதாரமற்ற உணவு மற்றும் தண்ணீரைக் குடித்து வாழ்ந்து வந்ததும் தெரிய வந்துள்ளது. வெளி உலக தொடர்பே இல்லாமல் இருப்பதால் அவர்கள் மனநிலை பாதிக்கப் பட்டிருக்கலாம் என்றும் தகவல் வெளியாகி யுள்ளது.

10 வருஷங்களா குப்பைகளுக்கு நடுவே வாழ்ந்த பெண்கள் !
வீட்டின் சில அறைகளில் மின்விளக்கு கூட இல்லை. சில இடங்களில் மின்கசிவால் தீயும் பற்றியுள்ளது. இருந்த போதும் இருவரும் வெளியில் சொல்லவில்லை. 

அவர்களின் வீட்டை சுத்தம் செய்து, இரண்டு பெண்களுக்கும் மனநல ஆலோசனை வழங்க குடியிருப்பு வாசிகள் கோரிக்கை வைத்தனர்.

இதையடுத்து மாநகராட்சி ஊழியர்கள் இன்று அவர்களின் வீட்டுக்கு சென்று குப்பைகளை அப்புறப்படுத்தும் பணியை தொடங்கியுள்ளனர். அவர்களின் வீடுகளில் இருந்து 2 டன் கழிவுகள் அகற்றப் பட்டுள்ளன. 

இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி யுள்ளது.

Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)
Privacy and cookie settings