மாதம் பிறந்ததும் ரூ.1000.. மாணவர்களுக்கான பணிகளை தொடங்கிய அரசு !

0

தமிழ் புதல்வன் திட்டம் பணிகள் தொடங்கப் பட்டுள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது. மேலும் இந்த திட்டத்தில் பயன்பெற தகுதியான மாணவர்களுக்கு ஆதார் எண் கட்டாயம் என்றும், 

மாதம் பிறந்ததும் ரூ.1000.. மாணவர்களுக்கான பணிகளை தொடங்கிய அரசு !
எனவே, மாணவர்கள் ஆதார் எண் வைத்திருக்கும் வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கல்வி நிறுவனங்களுக்கு தமிழக அரசு அறிவுறுத்தி யுள்ளது.

அரசு பள்ளிகளில் படிக்கும் 6 முதல் 12 ஆம் வகுப்பு வரை பயின்ற மாணவிகளுக்கு மாதம் 1,000 ரூபாய் உதவித்தொகை வழங்கப்படுகிறது. 

அவர்கள் இளங்கலை படிப்பு படித்து முடிக்கும் வரை இந்த தொகை வழங்கப்படும். மாணவிகள் இதற்காக எங்கும் செல்ல வேண்டியது இல்லை. நேரடியாக அவர்களின் வங்கி கணக்குகளில் இதற்கான தொகை செலுத்தப்படும்.

நடந்த உண்மை சம்பவம்.. இந்தியாவின் முதல் பெண் உளவாளி

புதுமைப்பெண் திட்டம் என்று இந்த திட்டத்துக்கு பெயர் வைக்கப் பட்டுள்ளது. இந்த திட்டத்தின் தொடக்க விழாதான் கடந்த வருடம் நடந்து 1 வருடமாக பணம் கொடுக்கப் படுகிறது. 

இந்த நிலையில் தான் புதுமைப்பெண் திட்டம் போல, மாணவர்களுக்கு 1,000 ரூபாய் வழங்கும் தமிழ் புதல்வன் திட்டம் வரும் ஆகஸ்ட் மாதம் தொடங்கப்படும் என்று தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.

இந்த திட்டத்தின் கீழ், 6 முதல் 12 ஆம் வகுப்பு வரை அரசுப் பள்ளிகளில் பயின்று உயர் கல்வி சேரும் மாணவர்கள் பாடப் புத்தகங்கள், பொது அறிவு நூல்கள் மற்றும் 

இதழ்களை வாங்கி அவர்களது கல்வியை மெருகேற்றிட உதவும் வகையில், மாதந்தோறும் ஆயிரம் ரூபாய் அவர்களின் வங்கிக் கணக்கில் நேரடியாகச் செலுத்தப்படும்.

இந்த திட்டம் வரும் ஆகஸ்ட் மாதம் முதல் செயல்படுத்தப்பட உள்ள நிலையில் அதற்கான பணிகளை தமிழக அரசு தற்போது தொடங்கி யுள்ளது. தமிழ் புதல்வன் திட்டத்தில் பயன்பெற தகுதியான மாணவர்களுக்கு ஆதார் எண் கட்டாயம் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது. 

எனவே, மாணவர்கள் ஆதார் எண் வைத்திருக்கும் வகையில் நடவடிக்கை எடுக்க கல்வி நிறுவனங்களுக்கு தமிழக அரசு அறிவுறுத்தியுள்ளது. 

இந்த தகவலை மாணவர்களுக்கு தெரியும் வகையில் கல்வி நிறுவனங்கள் விளம்பரப் படுத்தவும் தமிழக அரசு அறிவுறுத்தி யுள்ளது. புதுமைப்பெண் திட்டம் கடந்த 2022 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. 

குண்டு உடலை குறைக்க எளிய முறையில் !

இதன்படி, தமிழ்நாட்டில் 6 ஆம் வகுப்பு முதல் 12 வகுப்பு வரை அரசுப் பள்ளிகளில் பயின்று கல்லூரிகளில் சேரும் மாணவிகளுக்கு, மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கப்பட்டு வருகிறது. 

இந்த திட்டம் மூலம் ஆண்டுக்கு 30,000 மாணவிகள் கூடுதலாக உயர்கல்வியில் சேர்ந்துள்ளதாக தமிழக அரசு தரப்பில் தெரிவிக்கப் பட்டுள்ளது.

புதுமைப்பெண் திட்டத்தின் மூலம் 20-25% கல்லூரி பெண்களின் எண்ணிக்கை அதிகரித்த நிலையில், இதன் தொடர்ச்சியாக மாணவர்கள் உயர் கல்வி கற்பதை அதிகரிக்கும் விதமாக, தமிழ் புதல்வன் திட்டம் தொடங்கப்பட இருக்கிறது. 

உயர் கல்விக்கு செல்லும் மாணவர்கள், பாடப் புத்தகங்கள், பொது அறிவு நூல்கள், இதழ்களை உள்ளிட்டவற்றை வாங்கி அவர்களது கல்வியை மெருகேற்றிடும் விதமாக 

மாதம் தோறும் 1000 ரூபாய் மாணவர்களின் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படும் எனவும் இந்த திட்டத்தை நிறைவேற்ற நடப்பு நிதியாண்டில் ரூ.360 கோடி நிதியையும் தமிழ்நாடு அரசு ஒதுக்கி இருக்கிறது.

Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)
Privacy and cookie settings