50 பேரை ஏமாற்றிய தாராபுரம் கல்யாண ராணி சத்யா.. பரபரப்பு தகவல் !

0

மருதமலை படத்தின் போலீஸ் ஸ்டேஷன் காமெடியை மறு உருவாக்கம் செய்தால் எப்படி இருக்கும்... அப்படி ஒரு காட்சி நிஜத்தில் அரங்கேறி இருக்கிறது. 

50 பேரை ஏமாற்றிய தாராபுரம் கல்யாண ராணி சத்யா.. பரபரப்பு தகவல் !
திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் இளைஞரை திருமணம் செய்து பண மோசடி செய்த கல்யாண ராணி சத்யாவை போலீசார் புதுச்சேரியில் கைது செய்தனர். 

அவரது செல்போன் சிக்னலை கண்காணித்து போலீசார் இந்த கைது நடவடிக்கையை எடுத்துள்ளனர். 

இந்நிலையில் தான் கைதான சத்யா 50 ஆண்களை ஏமாற்றி மோசடி செய்துள்ளதாக கூறப்படும் நிலையில் அதுபற்றிய பரபரப்பான தகவல் வெளியாகி உள்ளது. 

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் பகுதியை சேர்ந்தவர் மகேஷ் அரவிந்த் (29). மாட்டு தீவன விற்பனை நிலையம் வைத்து உள்ளார். 

மகேஷ் அரவிந்துக்கு கடந்த 5 மாதங்களுக்கு முன்பு செல்போன் ஆப் ஒன்று மூலம் ஈரோடு மாவட்டம் கொடுமுடியை சேர்ந்த சத்யா (30) என்பவர் அறிமுகமானார். 

இதையடுத்து அவர்கள் 2 பேரும் செல்போன் எண்களை மாற்றி பேச தொடங்கினர். இந்த பேச்சு பழக்கம் இருவருக்கும் காதலாக மாறியது. அடிக்கடி இருவரும் சந்திக்க தொடங்கினர். 

இவர்கள் லுங்கி, பணியன் அணிய கூடாது தெரியுமா?

இந்த வேளையில் இந்த வேளையில் சத்யாவின் உறவினர் என தமிழ்ச்செல்வி என்பவரும் மகேஷ் அரவிந்துக்கு அறிமுகமானார். இதையடுத்து இருவரும் பல்வேறு காரணங்களை கூறி சத்யாவிடம் பணம் வாங்கி உள்ளனர். 

காதல் மோகத்தில் இருந்த மகேஷ் அரவிந்த அவர்களுக்கு பணம் வழங்கி வந்துள்ளார். இதற்கிடையே தான் கடந்த மாதம் 21ம் தேதி தொப்பம்பட்டியில் மகேஷ் அரவிந்த் - சத்யா ஆகியோர் திருமணம் செய்து கொண்டனர். 

இவர்களின் திருமணத்தை தமிழ்ச்செல்வி தான் நடத்தி வைத்துள்ளார். இதையடுத்து மகேஷ் அரவிந்த், சத்யாவை தனது வீட்டுக்கு அழைத்து சென்றுள்ளார். 

அப்போது அவரது உறவினர்கள் தாலி உள்பட 12 பவுன் நகையை சத்யாவிடம் வழங்கி உள்ளனர். இதற்கிடையே தான் சத்யா வீட்டில் இருந்து அடிக்கடி செல்போனில் பேசி வந்துள்ளார். 

இது மகேஷ் அரவிந்துக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியது. மகேஷ் அரவிந்த் தீவிரமாக தனது மனைவி சத்யாவை கண்காணிக்க தொடங்கினார். அப்போது அவர் அடிக்கடி பல ஆண்களுடன் செல்போனில் பேசியது தெரியவந்தது. 

அதோடு அவர் பல ஆண்களுடன் நெருக்கமாக இருந்த போட்டோக்களை செல்போனில் வைத்திருந்தார். இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த மகேஷ் அரவிந்த் அவரை கண்டித்தார். 

இதனால் இருவருக்கும் இடையே பிரச்சனை ஏற்பட்டது. இதற்கிடையே தான் திடீரென்று சத்யா மாயமானார். இதனால் அதிர்ச்சியடைந்த மகேஷ் அரவிந்த் இது குறித்து தாராபுரம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் ஒரு புகார் கொடுத்தார். 

அதில், சத்யா தன்னை திருமணம் செய்து ரூ.50 ஆயிரம் மற்றும் 12 பவுன் நகைகளை மோசடி செய்ததாகவும், பலபேரை இதுபோல் ஏமாற்றி திருமணம் செய்துள்ளார். மொத்தம் 15 பேரை திருமணம் செய்துள்ளார். 

அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறியிருந்தார். இந்த புகாரை தொடர்ந்து போலீசார் வழக்குப்பதிவு செய்து சத்யாவை தீவிரமாக தேடிவந்தனர். 

ரத்தக் குழாய் நோய்களால் ஏற்படக்கூடிய உயிரிழப்பு ?

மேலும் அவரது செல்போன் எண்ணின் சிக்னலை வைத்து போலீசார் கண்காணித்தனர். அப்போது சத்யா புதுச்சேரியில் பதுங்கி யிருப்பது தெரியவந்தது. 

இதையடுத்து அங்கு விரைந்த தனிப்படை போலீசார் சத்யாவை கைது செய்துள்ளனர். இதுபற்றி போலீசார் கூறுகையில், செல்போன் சிக்னலை வைத்து சத்யாவை கைது செய்துள்ளோம். 

50 பேரை ஏமாற்றிய தாராபுரம் கல்யாண ராணி சத்யா.. பரபரப்பு தகவல் !
மகேஷ் அரவிந்த் கொடுத்த புகாரின் அடிப்படையில் இந்த நடவடிக்கை எடுக்கப் பட்டுள்ளது. சத்யா பலரை காதல், திருமணம் செய்து மோசடி செய்துள்ளதாக குற்றச்சாட்டு உள்ளது. 

ஆனால் இதுவரை யாரும் புகார் அளிக்கவில்லை. புகார் அளித்தால் அதன் மீதும் விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கப்படும் என்றனர். 

தற்போது கைதாகி உள்ள சத்யா 15 பேரை திருமணம் செய்துள்ளதாகவும், மேலும் 30க்கும் மேற்பட்டவர்களிடம் காதலிப்பது போல் பேசி பணமோசடி செய்ததாக சமூக வலைதளங்களில் செய்திகள் பரவி வருகின்றன. 

இந்நிலையில் தான் அதுபற்றிய கேள்விக்கு போலீசார் மேற்கூறியவாறு பதிலளித்துள்ளனர்.

Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)
Privacy and cookie settings