நடிகர் அஜித்தின் காதுக்கும், மூளைக்கும் செல்லும் நரம்பில் இருந்த வீக்கம் அறுவை சிகிச்சை மூலம் நேற்று சரி செய்யப் பட்டுள்ளது. இந்நிலையில் தான் தற்போது நடிகர் அஜித்தின் உடல் நலம் எப்படி உள்ளது?
இந்த திரைப்படத்தை இயக்குனர் மகிழ் திருமேனி இயக்கி வருகிறார். இந்நிலையில் தான் நேற்று காலையில் அஜித் குமார் சென்னை அப்போலோ மருத்துவ மனையில் அனுமதிக்கப் பட்டார்.
வழக்கமான பரிசோதனைகளுக்காக அவர் மருத்துவ மனையில் அனுமதிக்கப் பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகின. ஆனால் இரவில் வேறு தகவல் வெளியானது.
அதாவத மருத்துவ மனையில் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையின் அவரின் காது-மூளைக்கு இடையே செல்லும் நரம்பில் வீக்கம் இருந்ததாகவும், அதற்காக அவருக்கு அறுவை சிகிச்சை மேற்கொள்ளப் பட்டதாகவும் தகவல்கள் வெளியாகின.
மனிதர்களை விட சொகுசான வாழ்க்கை வாழுது பாருங்க
மேலும் அப்போலோ மருத்துவ மனையில் டாக்டர் பெரியகருப்பன் தலைமையில் நடிகர் அஜித்திற்கு அறுவைசிகிச்சை மேற்கொண்டு நரம்பில் இருந்த வீக்கம் என்பது சரி செய்யப் பட்டுள்ளதாக தகவல்கள் வெளியானது.
இந்நிலையில் தான் நடிகர் அஜித்தின் உடல்நலம் குறித்த முக்கிய அப்டேட் வெளியாகி உள்ளது. அதாவது நடிகர் அஜித்தின்
காதுக்கும், மூளைக்கும் செல்லும் நரம்பில் இருந்த வீக்கம் அறுவை சிகிச்சை மூலம் சரி செய்யப்பட்டது. இதையடுத்து அவர் ஐசியூ எனும் தீவிர சிகிச்சை பிரிவில் மருத்துவர் கண்காணிப்பில் இருந்தார்.
தற்போது அவரது உடல்நலனில் எந்த பிரச்சனையும் இல்லை. அவர் நலமாக உள்ளார். உடல்நலம் சீராக உள்ளது. இதனால் சாதாரண சிகிச்சை பிரிவுக்கு அவர் மாற்றம் செய்யப் பட்டுள்ளார்.
இந்நிலையில் தான் இன்று அல்லது நாளை அவர் டிஸ்சார்ஜ் செய்யப்பட உள்ளதாகவும் மருத்துவமனை சார்பில் தெரிவிக்கப் பட்டுள்ளது. மேலும் நடிகர் அஜித் வரும் 15ம் தேதி அஜர் பைஜானில் விடாமுயற்சி படப்பிடிப்பில் பங்கேற்க ஏற்கனவே திட்டமிடப்பட்டு இருந்தது.
நீண்ட ஆயுள் வாழ வேண்டுமா? இந்த கனியை சாப்பிடுங்கள் !
இந்நிலையில் தான் நடிகர் அஜித்தின் உடல்நலம் வேகமாக சீராகி விடுவதால் திட்டமிட்டபடி வரும் 15ம் தேதி அஜர்பைஜானில் நடக்கும் விடாமுயற்சி படப்பிடிப்பில் அவர் பங்கேற்க உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.
Thanks for Your Comments