வாட்ஸ்அப் தளத்தில் மெட்டா ஏஐ மாடலை அந்நிறுவனம் அறிமுகப்படுத்திய நிலையில், வாட்ஸ்அப் க்ரூப்களிலும் மெட்டா ஏஐ மாடலை பயன்படுத்தலாம் என்பது பலருக்கும் தனியுரிமை சார்ந்த கேள்விகளை எழுப்பியுள்ளது.
அதை கிளிக் செய்தால் போதும். மெட்டா ஏஐ உடனான சாட் ஓபன் ஆகும், அதில் கண்டிஷன்களை ஓகே சொன்னால் போதும். அதன் பிறகு மற்றவர்களுடன் சாட் செய்வது போல நார்மலாக சாட் செய்யலாம்.
மெட்டா ஏஐ அதற்கு பதில் அளிக்கும். இதற்கிடையே மெட்டா ஏஐ வசதி தனிப்பட்ட சாட் மட்டுமின்றி க்ரூப் சாட்களிலும் இருக்கிறது.
மிரண்டு போன இரயில்வே துறை... இவரது மகன் அமைச்சரா?
எது க்ரூப் சாட்டிலா. இந்த வசதியை எப்படிப் பயன்படுத்த வேண்டும். க்ரூப்பில் வரும் எல்லா மெசேஜ்களையும் மெட்டா ஏஐ படிக்குமா எனப் பல சந்தேகங்கள் வரும்.
முதலில் வாட்ஸ்அப் க்ரூப்பில் மெட்டா ஏஐ எப்படிப் பயன்படுத்த வேண்டும் என்பதைப் பார்க்கலாம். நீங்கள் எந்த க்ரூப்பில் மெட்டா ஏஐ பயன்படுத்த வேண்டுமோ. அதை ஓபன் செய்து வைத்துக் கொள்ளுங்கள்.
அதை கிளிக் செய்யுங்கள். முதல்முறை கிளிக் செய்த உடன் பாலிசி எல்லாம் ஓகேவா என கேட்கும். அதை ஓகே கொடுத்தால் போதும் அவ்வளவுதான்.
அதன் பிறகு நீங்கள் என்ன கேட்க வேண்டுமா. அதை வழக்கம் போல டைப் செய்து கேட்கலாம். ஆனால் அந்த மெசேஜ்ஜில் @ கிளிக் செய்து மெட்டாவை டேக் செய்ய வேண்டும்.
அப்படிச் செய்தால் அதற்கான பதிலை மெட்டா அளிக்கும். அதேபோல மெட்டா ஏஐ மாடலுக்கு ரிப்ளை செய்ய வேண்டும் என நினைத்தால். வழக்கமாக ரிப்ளை செய்வது போலக் குறிப்பிட்ட மெசேஜை வலது புறம் ஸ்வைப் செய்யுங்கள் போதும்.
தானாகவே அது மெட்டா ஏஐ-க்கு டேக் ஆகி விடும். அப்போது நீங்கள் அனுப்பும் ரிப்ளையை படித்து அது பதில் அளிக்கும். அதே நேரம் இது போல க்ரூப்பில் கூட மெட்டா ஏஐ இருப்பது பலருக்கும் தனியுரிமை சார்ந்த கேள்விகளை எழுப்பலாம்.
உயிர் வாழும் வரை ஆரோக்கியமாக இருக்க நீங்கள் செய்ய வேண்டியவை !
பலரும் இது குறித்து கேள்விகளை எழுப்புவார்கள் என்பதைத் தெரிந்தே மெட்டா நிறுவனம் இதற்கான விளக்கத்தையும் கொடுத்துள்ளது. அதாவது க்ரூப் மெசேஜ் அனைத்தையும் மெட்டா ஏஐ மாடலால் படிக்க முடியாது.
எந்த மெசேஜ்ஜை மெட்டாவுக்கு @ கொடுத்து டேக் செய்கிறோமோ, அதை மட்டுமே படிக்க முடியும். டேக் செய்யாமல் அனுப்பப்படும் மற்ற மெசேஜ்களை மெட்டா ஏஐ மாடலால் படிக்கவே முடியாது என்று அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.
மேலும், வாட்ஸ் அப் நிறுவனம் எப்போதும் மெசேஜ் மற்றும் கால்களுக்கு என்ட்-டு-என்ட் என்க்ரிப்ட் வழங்குவதால்.. மற்ற மெசேஜ்களை வாட்ஸ்அப் அல்லது மெட்டா நிறுவனத்தால் கூட படிக்க முடியாது என்றே கூறப்பட்டுள்ளது.
Thanks for Your Comments