சிவில் சர்வீஸ் தேர்வில் கடந்த 2020-ம் ஆண்டு முதல் முயற்சியிலேயே வெற்றி பெற்றதோடு, தேசிய அளவில் 171-வது இடம் பிடித்து பாராட்டுகளைக் குவித்தவர் அண்ணா கொள்ளுப் பேத்தி பிரித்திகா ராணி.
இந்த நிலையில், மதுரையைச் சேர்ந்த சித்தார்த் பழனிசாமி ஐ.ஏ.எஸ்-ஸை தனது வாழ்க்கைத் துணையாகத் தேர்ந்தெடுத்துள்ளார். இது குறித்து அவரது நெருங்கிய உறவினர்களிடம் பேசியபோது,
அவரது அம்மா, அப்பா, சகோதரி அனைவருமே மருத்துவர்கள். சித்தார்த் பழனிசாமியும் பிரித்திகா ராணியும் சிவில் சர்வீஸ் பயிற்சியின் போது நட்பாகி காதலர்களாகி யிருக்காங்க.
வாஜ்பாய் அப்துல் கலாம் அவர்களின் அணுகுண்டு சோதனை
இப்போ, சித்தார்த் பழனிசாமி ஐ.ஏ.எஸ் ராஜஸ்தானில் பணியாற்றிட்டு இருக்கார். பிரித்திகாவுக்கு ரெண்டு வாரம் லீவு கிடைக்கவே, இரண்டு குடும்பத்தினரும் முடிவு செய்து நிச்சயதார்த்தத்தை நடத்தியிருக்காங்க.
சென்னை கிரீன் பார்க் ஹோட்டலில் நடந்த நிச்சயதார்த்தத்தில் நெருங்கிய உறவினர்களும் நண்பர்கள் மட்டுமே கலந்துக்கிட்டாங்க. வரும் நவம்பர் மாதம் மதுரையில திருமணம் நடக்க இருக்கு என்கிறார்கள்.
சிவில் சர்வீஸ் தேர்வில் பிரித்திகா ராணி வெற்றி பெற்றதும் முதல் ஆளாக வாழ்த்துகளைத் தெரிவித்தவர் முதல்வர் மு.க. ஸ்டாலின். திருமணமும் முதலமைச்சர் தலைமையில் நடக்கலாம் என்று எதிர்பார்க்கப் படுகிறது.
கல்லூரி படிக்கும்போது காந்தி, அம்பேத்கர் புத்தகங்கள் படித்ததால் இந்தச் சமூகத்தைப் பற்றிய தெளிவும் புரிதலும் ஏற்பட்டது.
நீங்கள் ஆரோக்கியசாலியாக இருக்க உணவில் நல்லெண்ணெய் !
அதனால் சமூகத்திற்கு என் பங்களிப்பை கொடுக்கவே சிவில் சர்வீஸ் தேர்வில் பங்கேற்றேன் என்று சிவில் சர்வீஸ் தேர்வில் வெற்றி பெற்றபோது சித்தார்த் பழனிசாமி தெரிவித்திருந்தார்.
Thanks for Your Comments