சென்னையில் மிகக் கொடூரமான முறையில் வெட்டி படுகொலை செய்யப்பட்ட பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் பல அதிர்ச்சி தகவல்கள் வெளியாகி இருக்கிறது.
பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழ்நாடு தலைவர் ஆம்ஸ்ட்ராங் கடந்த 5ஆம் தேதி வீட்டு அருகே நின்று கொண்டிருந்த போது ஆறு பேர் கொண்ட மர்மகும்பல் அவரை கொடூரமாக வெட்டி சாய்த்து விட்டு தப்பியது.
தனியார் மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இதை அடுத்து அவரது உடல் சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவ மனையில் உடற்கூறு ஆய்வுக்காக வைக்கப்பட்டு, பின்னர் பெரம்பூர் அரசு பள்ளியில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது.
சாதாரண வேலை தான் பார்க்கிறேன் என்று சொன்ன அமைச்சர்
அவரது உடலுக்கு அரசியல் கட்சி தலைவர் உள்ளிட்ட பலர் கண்ணீர் அஞ்சலி செலுத்தினர். இதனையடுத்து அவரது உடல் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு அடக்கம் செய்யப்பட்டது.
இந்நிலையில் இந்த கொலை சம்பவம் தொடர்பாக தனிப்படை அமைத்து போலீசார் விசாரணை நடத்தி வந்த நிலையில் கொலையாளிகளாக சரணடைந்த வர்களிடம் தனித்தனியாக விசாரணை நடத்தி சிறையில் அடைத்தனர்.
கொலைக்கு மூளையாக ஆற்காடு சுரேஷின் தம்பி பாலு செயல் பட்டதாகவும் போலீசார் கூறினர். இதையடுத்து கைது செய்யப்பட்ட அனைவரும் நீதிமன்றத்தில் ஆச்சரியப்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.
இதனிடையே அவர்களிடம் சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். விசாரணையில் பல அதிர்ச்சி தரும் தகவல்கள் வெளியாகி இருக்கிறது.
ஆம்ஸ்ட்ராங் அரசியல் கட்சி தலைவர் என்பதோடு வழக்கறிஞர் என்பதால் எப்போதும் அவரை சுற்றி ஆட்கள் இருப்பார்கள்.
எனவே ஆட்கள் இல்லாத நேரம் பார்த்து அவரை கொலை செய்ய பெரம்பூர் பகுதியில் உள்ள ஒயின்ஷாப்பில் பல நாட்களாக திட்டம் தீட்டப்பட்டு இருக்கிறது.
அது மட்டுமல்லாமல் அவர் துப்பாக்கி வைத்திருப்பார் என்பதால் எடுத்த எடுப்பிலேயே அவர் நிலைகுலையும் அளவுக்கு தாக்குதல் இருக்க வேண்டும் என கொலையாளிகள் திட்டமிட்டு இருக்கின்றனர்.
இதற்காக பத்து நாட்களுக்கு மேலாக அவரை நெருக்கமாக கொலை கும்பல் நோட்டமிட்டு இருக்கிறது.
இந்நிலையில் மேலும் கொலை நடக்கும் இடத்திற்கு 45 நிமிடங்களுக்கு முன்பே வந்த கொலையாளிகள் ஒவ்வொரு அசைவையும் கண்காணித்தி ருக்கின்றனர்.
தெருவில் சாதாரணமாக பேசிக் கொண்டிருந்த போது அருகே சென்ற கொலையாளிகளில் ஒரு இளைஞன் ஜெய் பீம் எனக் கூற அவரை அருகில் அழைத்து பேச தொடங்கி இருக்கிறார் ஆம்ஸ்ட்ராங்.
அப்போது அவர் கழுத்தில் வெட்டி இருக்கிறார். தொடர்ந்து மற்றவர்கள் ஆம்ஸ்ட்ராங்கை சரமாரியாக வெட்டி கொலை செய்து விட்டு 5 இரு சக்கர வாகனங்களில் தப்பி சென்றுள்ளனர்.
கொலைக்கு மேலும் பலர் பின்னணியில் இருந்து செயல்பட்டு இருக்கலாம் எனக் கூறப்படுவதால் எவ்வளவு பணம் கைமாறியது?
யார் யாருக்கு பணம் கொடுக்கப்பட்டது? என்பது குறித்தும் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். குறிப்பாக ஆர்காடு சுரேஷின் தம்பி பாலுவின் வங்கி பரிவர்த்தனைகளை போலீசார் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.
வெறும் வயிற்றில் தண்ணீர் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள் !
அவரது ஆறு மாத வங்கி கணக்கு பரிவர்த்தனைகளை வங்கிகளிடம் இருந்து கேட்டு பெற்றுள்ளதாகவும் கூறப்படுகிறது .இதனால் இந்த கொலை வழக்கில் மேலும் சிலர் சிக்கலாம் எனவும் கூறப்படுகிறது.
Thanks for Your Comments