அமெரிக்காவில் மளிகை கடைகளில் துப்பாக்கி குண்டுகள் விற்பனை செய்யப்படுகிறது. ஏடிஎம்மில் பணம் எடுப்பது போல் துப்பாக்கி குண்டு எடுக்கும் வசதி மளிகை கடைகளில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
சட்டப் பூர்வமாகவும், சட்டவிரோதமாக அங்கு துப்பாக்கிளை வெகு எளிதாக வாங்க முடியும். அத்துடன் டிரைவிங் லைசென்ஸ் போல் அங்கு துப்பாக்கி வைத்திருக்க லைசென்ஸ் பெறுவது கட்டயமாக உள்ளது.
கிட்டத்தட்ட அமெரிக்கர்கள் பலருமே லைசென்ஸ் உடன் துப்பாக்கி வைத்துள்ளார்கள். இவர்களுக்கு வேண்டிய துப்பாக்கி குண்டினை வாங்க இனி அலைய வேண்டியதே இல்லை.
அதற்கான புதிய திட்டத்தை அமெரிக்காவில் உள்ள 3 மாநிலங்கள் அறிமுகம் செய்துள்ளன. துப்பாக்கி குண்டுகளை மளிகை கடைகளில் விற்பனை செய்யும் திட்டம் தொடங்கப் பட்டுள்ளது.
வெறும் வயிற்றில் தண்ணீர் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள் !
இதற்காக மளிகை கடைகளில் காசு கொடுத்தால் துப்பாக்கி குண்டுகளை தரும் ஏடிஎம் இயந்தியரங்களை நிறுவி உள்ளார்கள்.
நம்மூரில் மதுபானங்களை எப்படி காசு கொடுத்து எடுத்து கொள்ளும் வகையில் ஏடிஎம் இயந்திரங்களை அறிமுகம் செய்தார்களோ, அதே பாணியில் தான் குண்டுகளை தரும் இயந்திரங்களை அமெரிக்காவில் அறிமுகம் செய்துள்ளார்கள்.
இந்த துப்பாக்கி குண்டு வெண்டிங் மிஷினில் குண்டு வேண்டும் என்போர், தங்கள் துப்பாக்கியின் லைசென்ஸ் ஐடியை ஸ்கேன் செய்து, உரிய பணம் செலுத்தி தங்கள் துப்பாக்கிக்கான தோட்டாக்களை எடுத்துக் கொள்ளலாம் என்று அறிவிக்கப் பட்டுள்ளது.
அமெரிக்கன் ரவுண்ட்ஸ் என்ற நிறுவனத்தால் தயாரிக்கப்பட்ட இந்த துப்பாக்கி குண்டு வெண்டிங் இயந்திரங்கள் ஏடிஎம் போல் செயல்படும் என்றும், 24 மணி நேரமும் துப்பாக்கி குண்டுகளை எடுக்க முடியும் எனறும் கூறப்படுகிறது.
வெறும் வயிற்றில் பச்சை முட்டை ஆரோக்கியமா?
இந்த துப்பாக்கி குண்டு வெண்டிங் இயந்திரங்கள் எவ்வாறு வேலை செய்கின்றன?
இந்த தோட்டாக்கள் விற்பனை செய்யும் இயந்திரங்கள் வாங்குபவரின் துப்பாக்கியின் லைசென்ஸ் ஐடியை முகத்துடன் ஒத்துப் போகிறதா என்பதை கண்டுபிடிக்க AI தொழில்நுட்பம் பயன்படுத்தப் படுகிறது.
அத்துடன் அட்டையை ஸ்கேனிங் திறன்கள் ஸ்கேன் செய்யும் மற்றும் முகத்தை அடையாளம் காணும் மென்பொருளும் இருக்கிறது. இதன் மூலம் தோட்டா வாங்குபவர் 18 வயதுக்கு மேற்பட்டவர் என்பதையும் இது உறுதி செய்கிறது.
அதன் பிறகு அவர்கள் விற்பனை இயந்திரத்தின் அடிப்பகுதியில் உள்ள துளையிலிருந்து பணம் போல் வரும் தோட்டாக்களை எடுத்துக் கொள்ளலாம்.
தொப்பை போட வைக்கும் செயற்கை குளிர்பானங்கள்
லூசியானா மற்றும் கொலராடோ போன்ற துப்பாகி பயன்பாடு அதிகம் உள்ள பகுதிகளில் இது போன்ற பல கியோஸ்க்களைத் (குண்டு வெண்டிங் இயந்திரங்கள்) தொடர்ந்து அறிமுகம் செய்வோம் என்று அமெரிக்கன் ரவுண்ட்ஸ் நிறுவனம் கூறியுள்ளது.
அமெரிக்காவில் தேசிய சுகாதார புள்ளியியல் மையத்தின் அண்மையில் வெளியிடப்படட் தரவுகளின்படி, அலபாமா என்ற பகுதி தான் அமெரிக்காவில் நான்காவது அதிக துப்பாக்கி இறப்பு விகிதம் உள்ள மாநிலம் ஆகும்.
Thanks for Your Comments