பலத்த எதிர்பார்ப்புகளுக்கு இடையே இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் நடிகர் கமல்ஹாசன் நடித்திருக்கும் இந்தியன் 2 படம் திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தி வருகிறது.
சுமார் 28 ஆண்டுகளுக்கு முன்னால் உலகநாயகன் கமல்ஹாசன் பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கர் இணைந்து உருவாக்கிய இந்தியன் படம் வெளியானது.
இதில் சுகன்யா, மனிஷா கொய்ராலா, கவுண்டமணி, செந்தில் என பல நட்சத்திரங்கள் இணைந்திருந்தனர். அந்த காலத்திலேயே பிரம்மாண்ட செட்கள், கிராஃபிக்ஸ் காட்சிகளுடன் வெளியான இந்தப் படம் பெருவெற்றி வெற்றது.
குறிப்பாக இந்தியன் தாத்தா மற்றும் வயதான சுகான்யாவுக்கு மேக்-அப் போடுவதற்கு ஹாலிவுட்டில் இருந்து மேக்கப் கலைஞர்கள் வரவழைக்கப் பட்டிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
ரயிலின் பின்பக்கத்தில் 'X'-ன்னு எழுதபட்டு இருக்கும் - அது ஏன் தெரியுமா?
இந்தியன் படத்திற்கு பிறகு முதல்வன், நண்பன், சிவாஜி, எந்திரன் உள்ளிட்ட பல பிரம்மாண்ட படைப்புகளை சங்கர் கொடுத்திருந்தாலும் கமலஹாசனும் ஷங்கரும் எப்போது இணைவார்கள் என்ற கேள்வி ரசிகர்களிடையே எழுந்தது.
இந்த படத்தில் நடிகர் கமலஹாசன் உடன், எஸ்ஜே சூர்யா, சித்தாத், ரகுல் ப்ரீத் சிங், பிரியா பவானி சங்கர், சமுத்திரக்கனி, டெல்லி கணேஷ்,பாபி சிம்ஹா என பல நட்சத்திர பட்டாளமே இணைந்து இருந்தது.
இதனிடையே இடையே நடிகர் கமலஹாசனின் அரசியல் என்ட்ரி, படப்பிடிப்பின் போது ஏற்பட்ட விபத்து, கொரோனா என பல காரணங்களால் படப்பிடிப்பு தள்ளிப் போனது.
ஒரு வழியாக படம் நிறைவடைந்த நிலையில் இன்று வெளியாகி இருக்கிறது. உலகம் முழுவதும் நானூருக்கும் மேற்பட்ட திரையரங்குகளில் இந்தியன் 2 படம் வெளியாகி இருக்கும் அலையில் ரசிகர்கள் கொண்டாட்டத்தில் ஆழ்ந்துள்ளனர்.
இந்தியன் 2 வெளியாகியுள்ள திரையரங்குகளில் பட்டாசு வெடித்தும், இனிப்புகள் கொடுத்தும் கமலஹாசன் ரசிகர்கள் படத்தை வரவேற்று வருகின்றனர்.
ராஜ்தானி எக்ஸ்பிரஸ் பற்றி அறிந்திராத சுவாரஸ்யங்கள் !
இந்தியன் முதல் பாகத்தில் இருந்த பிரம்மாண்டம் இந்தப் படத்தில் இருக்கும் நிலையில், அழுத்தமான கதை அம்சம் இல்லை என ரசிகர்கள் கூறி வருகின்றனர்.
இந்நிலையில் சென்னையில் இந்தியன் 2 வெளியான தியேட்டரில் பிரபல காமெடி நடிகரான கூல் சுரேஷ் செய்த அலப்பறை தான் தற்போது சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகி வருகிறது.
எந்த படம் ரிலீஸ் ஆனாலும் அந்தப் படத்திற்கு பிரமோஷன் கொடுப்பதற்காக விதவிதமான கெட்டப்புகளில் கூல் சுரேஷ் வருவது வழக்கம். அந்த வகையில் இந்தியன் டு படத்திற்காக இந்தியன் தாத்தா கெட்டப் போட்டு குதிரையில் அமர்ந்து வந்தார் கூல் சுரேஷ்.
தொடர்ந்து செய்தியாளர்கள் அவரை பேட்டி எடுக்க, தாத்தா கதறவிட போறாரு என கூல் சுரேஷ் சொன்னார். அப்போது அருகில் இருந்து ரசிகர்கள் நீங்கள் தான் எங்கள கதற விடுறீங்க என கவுண்டர் கொடுத்தனர்.
இரவு நேரங்களில் உலா வரும் கூர்க்கா கெட்டப்பில் இருக்கிறார் என நெட்டிசன்கள் கிண்டல் செய்து வருகின்றனர்.
Thanks for Your Comments