விவசாயிக்கு அனுமதி மறுப்பு.. ஷாப்பிங் மாலை மூட உத்தரவு !

0

பெங்களூரில் ஷாப்பிங் மாலிற்கு வேஷ்டி சட்டை அணிந்து கொண்டு வந்த முதியவருக்கு அனுமதி மறுக்கப்பட்ட நிலையில் அந்த மாலை ஒரு வாரத்திற்கு மூடுவதற்கு கர்நாடகா அரசு உத்தர விட்டுள்ளது. பெங்களூர் ஜிடி மாலில் தான் இந்த சம்பவம் நடந்துள்ளது. 

விவசாயிக்கு அனுமதி மறுப்பு.. ஷாப்பிங் மாலை மூட உத்தரவு !
பெங்களூரில் ஜிடி மால் என்ற ஒரு வணிக வளாகம் உள்ளது. இங்கு விவசாயியான முதியவர் ஒருவர் தனது மகனுடன் வந்திருந்தார். அங்குள்ள தியேட்டரில் படம் பார்ப்பதற்காக அவருடைய மகன் டிக்கெட்டை முன் பதிவு செய்திருந்தார். 

இந்த நிலையில் நேற்று முன் தினம் படம் பார்க்க வந்த போது விவசாயியான முதியவர் வேட்டி சட்டையில் வந்திருந்தார். அப்போது மாலுக்குள் நுழைய முயன்ற முதியவரை பாதுகாவலர்கள் அனுமதிக்க வில்லை. 

அவருடைய மகன் எவ்வளவோ பேசியும் வேஷ்டி கட்டி வந்தால் மாலுக்குள் அனுமதிக்க முடியாது என்றும் வேட்டியை மாற்றி விட்டு வேறு உடையில் வந்தால் அனுமதிப்பதாக அவர்கள் தெரிவித்தனர்.

மூளையை கணிணியோடு இனணக்கும் சிப்... இனி நாமும் பொருத்திக் கொள்ளலாம் !

நீண்ட தூரத்தில் இருந்து பெங்களூர் வந்திருப்பதால் உடனே போய் ஆடையை மாற்றிக் கொண்டு வர முடியாது என அந்த முதியவரும் அவருடைய மகனும் கூறியும் அவர்கள் ஏற்க மறுத்து, அவர்களை மாலை விட்டு வெளியே அனுப்பி விட்டனர். 

இதனால் வேறு வழியில்லாமல் அவர்களும் மாலை விட்டு வெளியேறினர். இந்த சம்பவம் தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது. இதையடுத்து இந்த சம்பவம் விவசாயிகளுக்கு எதிரானது என கூறி அரசை கடுமையாக சாடினர். 

இதையடுத்து கன்னட ஆதரவாளர்களும் கன்னட விவசாயிகளும் இந்த சம்பவத்தை கண்டித்து வேஷ்டி அணிந்து மாலுக்குள் நுழையும் போராட்டத்தை நடத்தினர்.

இந்த சம்பவத்திற்கு கண்டனங்கள் எழுந்த நிலையில் அந்த மால் ஒரு வாரத்திற்கு செயல்பட கூடாது என கூறி மூடுவதற்கு அரசு உத்தரவிட்டுள்ளது.

விவசாயிக்கு அனுமதி மறுப்பு.. ஷாப்பிங் மாலை மூட உத்தரவு !
இந்த சம்பவம் ட்விட்டர்வாசி ஒருவர் முதல்வர் சித்தராமையா, அமைச்சர் டி.கே. சிவக்குமார், ராகுல் காந்தி ஆகியோரை டேக் செய்து அவர் கூறியிருப்பதாவது: 

வேட்டி கட்டிய விவசாயியை ஷாப்பிங் மாலுக்குள் விடாதது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி யுள்ளது. முதல்வர் சித்தராமையா அடுத்ததாக நீங்கள் கூட வேட்டி கட்டியிருப்பதால் தடுத்து நிறுத்தப் படுவீர்கள். 

கொப்புளங்கள் ஏற்படக காரணங்கள் என்ன?

இது தான் விவசாயிகளின் முன்னேற்றத்திற்கு நீங்கள் செய்துள்ள திட்டமா என கேட்டுள்ளார். பெங்களூர் மாநகராட்சியும் அந்த ஷாப்பிங் மாலுக்கு வந்து ஆய்வு நடத்தியது. 

இதைத் தொடர்ந்து தான் அந்த மாலை ஒரு வாரத்திற்கு மூட கர்நாடகா அரசு உத்தரவிட்டுள்ளது.

Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)
Privacy and cookie settings