விஜயகாந்த் மறைவிற்கு கூட செல்லாத உத்தம புத்திரன் தனுஷ் !

0

சிறந்த நடிகராக உயர்ந்து இருக்கும் தனுஷ் அவர்கள் தான் சமீப காலமாக மரியாதை இழந்து வருகின்றார். தனுஷ் சினிமாவில் நல்ல நடிகர். நிஜ வாழ்க்கையிலும் கூட நல்ல நடிகராகவே வாழ்பவர் தனுஷ். 

விஜயகாந்த் மறைவிற்கு கூட செல்லாத உத்தம புத்திரன் தனுஷ் !
அப்துல் கலாம் மறைவிற்கு கூட வராமல் தனது பிறந்த நாளுக்கு பார்ட்டி வைத்து கொண்டாடி மகிழ்ந்த உத்தம புத்திரன் இவர்!

சமீபத்தில் நிறைய நடிகர்கள் மறைந்தார்கள். குறிப்பாக புரட்சி கலைஞர் விஜயகாந்த் மறைவிற்கு கூட தனுஷ் அவர்கள் நேரிலும் செல்லவில்லை. சமாதிக்கும் செல்லவில்லை. 

விஜயகாந்த் அவர்களின் வீட்டிற்கு சென்று இரங்கலும் தெரிவிக்கவில்லை. அப்துல் கலாம் அவர்களின் மறைவிற்கே செல்லாதவர் ஆயிற்றே!!

நொச்சி இலைகளின் மருத்துவக் குணங்கள் !

கஸ்தூரி ராஜா, விஜயகாந்த் அவர்களுக்கு நல்ல நண்பர். தனுஷ் அவர்களின் சகோதரி கார்த்திகா அவர்களுக்கு தனியார் மருத்துவ கல்லூரியில் சேர்த்து விட்டவர் விஜயகாந்த் அவர்கள் தான். 

அன்று விஜயகாந்த் இல்லை என்றால் கார்த்திகா, இன்று மருத்துவம் படித்து மருத்துவராக பணிபுரிய வாய்ப்பே இல்லை. இதனை டிவி நேர்காணலில் கஸ்தூரி ராஜாவே தெரிவித்து இருந்தார்.

திரைமறைவில் செய்வது எல்லாம் மன்மத ராசா வேலை. ஆனால் மேடையில் கையில் மைக் கிடைத்தால் போதும், புத்தர் ஆக மாறி தத்துவங்களை அள்ளி வீசுவார் தனுஷ். 

மூத்த நடிகர், முன்னாள் நடிகர் சங்க தலைவர், தனது சகோதரியின் மருத்துவர் கனவை நிறைவேற்றிய மாமனிதரின் மறைவிற்கு நேரில் சென்று இறுதி அஞ்சலி செலுத்துவதற்கு நேரமில்லை. 

நடிகர் சங்கம் விஜயகாந்த் அவர்களின் இரங்கல் கூட்டத்திற்கு கூட தனுஷ் செல்லவில்லை. ஆனால் கலைஞர் நூற்றாண்டு விழாவிற்கு மட்டும் செல்ல மட்டும் நேரம் இருக்கு! 

அயோத்தி ராமர் கோயிலுக்கு குடும்பத்துடன் செல்ல நேரம் இருக்கு. கேப்டன் மில்லர் பட விழாவிற்கு செல்ல நேரம் இருக்கு. 

கேப்டன் மில்லர் படவிழாவில் விஜயகாந்த் பட பாடல் பாடி மவுன அஞ்சலி செலுத்துவது யாருடைய பெருமைக்கு என்று தெரியவில்லை. இவரெல்லாம் கருத்து சொல்ல தகுதி இருக்கிறது என்று தெரியவில்லை??

இந்தியன் டாய்லெட் vs வெஸ்டர்ன் டாய்லெட் !

தனுஷ் அவர்களின் நடிப்பிற்கு தேசிய விருது தாண்டி இன்னும் பெரிய விருது கொடுக்கலாம். நல்ல நடிகர் என்பதை தாண்டி நல்ல மனிதர் என்ற பெயரை இழந்து விட்டார் தனுஷ்

Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)
Privacy and cookie settings