மலையாள மக்கள் ஆட்டோ மொபைல் வாகனங்கள் மீது கூடுதல் ஆர்வம் கொண்டவர்கள். இதன் காரணமாகவே, புது, புது கார் & பைக்குகளை வாங்குவதை அவர்கள் எப்போதும் மறந்தது இல்லை.
இந்த வரிசையில் கேரளாவை சேர்ந்த ஒரு சினிமா நட்சத்திர தம்பதியினர் புதியதாக, கம்பீரமான லக்சரி எஸ்யூவி கார் ஒன்றை வாங்கியுள்ளனர்.
யார் அவர்கள் என்பதையும், அவர்கள் வாங்கியுள்ள லக்சரி காரை பற்றியும் இனி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
கேரள நடிகை சிப்பியை பற்றி உங்களில் சிலர் கேள்விப்பட்டு இருப்பீர்கள் என நினைக்கிறேன். விஜய் டிவியில் ஒளிப்பரப்பப்பட்ட மௌன ராகம் சீரியலில் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்தவர்.
போர் விமானி ஆக ஆசைபட்ட அப்துல் கலாம்.. நடந்தது?
இதன் மூலமாக நம் தமிழ் இல்லத்தரசிகளின் மனதில் இடம்பிடித்த சிப்பி 1990ஆம் காலக்கட்டத்தில் கேரளாவில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர்.
1993- 2000ஆம் காலக்கட்டத்தில் மலையாளத்தில் 30க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ள நடிகை சிப்பி கன்னட மொழியிலும் 15க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார்.
நம் தமிழில் 1998ஆம் ஆண்டில் நடிகர் விஜய்காந்தின் நடிப்பில் வெளிவந்த தர்மா திரைப்படத்தில் இவரை காண முடியும்.
இருப்பினும், அவ்வப்போது மலையாள, தமிழ் சீரியல்களில் நடித்துவரும் நடிகை சிப்பி புதியதாக லேண்ட் ரோவர் டிஃபெண்டர் கார் ஒன்றை வாங்கியுள்ளார்.
கணவர் மற்றும் மகளுடன் குடும்பமாக ஷோரூமுக்கு சென்று தனது புதிய காரை நடிகை சிப்பி டெலிவிரி எடுக்கும் படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.
லேண்ட் ரோவர் குடும்பத்தில் நடிகை சிப்பி மற்றும் தயாரிப்பாளர் ரெஞ்சித் இணைந்ததற்கு சம்பந்தப்பட்ட லேண்ட் ரோவர் கார் டீலர்ஷிப் ஷோரூம் மையம் தனது சமூக வலைத்தளத்தில் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளது.
சிப்பி- ரெஞ்சித் தம்பதியின் 23ஆம் ஆண்டு திருமண நாளை முன்னிட்டு இந்த கார் வாங்கப்பட்டுள்ளது. சிப்பி வாங்கியிருப்பது லேண்ட் ரோவர் டிஃபெண்டர் 110 எச்.எஸ்.இ காரை ஆகும்.
டாஸ்மன் நீல நிறத்தில் இந்த லேண்ட் ரோவர் காரை இவர் வாங்கியுள்ளார். இதற்கேற்ப, காருக்கு மேட்ச்சிங்காக நீல நிற ஆடையில் ஷோரூமுக்கு நடிகை சிப்பி வந்துள்ளார்.
இவரது குடும்பம் புதியதாக வாங்கியிருக்கும் லேண்ட் ரோவர் டிஃபெண்டர் 110 காரை பற்றி சொல்ல வேண்டுமென்றால், இந்தியாவில் லேண்ட் ரோவர் டிஃபெண்டர் கார்கள் 90, 110 மற்றும் 130 என மொத்த 3 விதமான வீல்பேஸ் வெர்சன்களில் விற்பனை செய்யப்படுகின்றன.
மனிதர்களை விட சொகுசான வாழ்க்கை வாழுது பாருங்க
இதில், 110 வெர்சனை நடிகை சிப்பி வாங்கியுள்ளார். இந்தியாவில் டிஃபெண்டர் 110 கார் 3.0 லிட்டர் பெட்ரோல், 3.0 லிட்டர் டீசல், 2.0 லிட்டர் பெட்ரோல் மற்றும் 5.0 லிட்டர் பெட்ரோல் என பல்வேறு விதமான என்ஜின் ஆப்ஷன்களில் விற்பனை செய்யப்படுகிறது.
இதில் எந்த என்ஜின் உடன் டிஃபெண்டர் 110 காரை சிப்பி குடும்பத்தினர் வாங்கி யுள்ளனர் என்பது தெரியவில்லை.
ஆனால், இதில் எந்த என்ஜின் உடன் வாங்கினாலும் டிஃபெண்டர் காரின் ஆன்-ரோடு விலை ரூ.1 கோடியை தாண்டிவிடும். அதாவது, நடிகை சிப்பி இந்த காரை ரூ.1 கோடிக்கும் அதிகமான விலையில் வாங்கி யுள்ளார்.
12.3-இன்ச் டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டர், ஆட்டோமேட்டிக் க்ளைமேட் கண்ட்ரோல் மற்றும் ஹெட்-அப் டிஸ்பிளே, வயர்லெஸ் போன் சார்ஜர், கனெக்டட் கார் தொழிற்நுட்ப வசதிகள்,
ஜெர்மனியில் ஜார்ஜ் செய்ய ஹைப்ரிட் ஹைவே
மெரிடியனின் பிரீமியம் ஸ்பீக்கர் சிஸ்டம், எலக்ட்ரிக் மூலமாக அட்ஜெஸ்ட் செய்யக்கூடிய முன் இருக்கைகள் உள்ளிட்டவை டிஃபெண்டர் கார்களில் இடம் பெறுகின்றன.
Thanks for Your Comments