உடனே போட்டோ அனுப்புங்க.. இரவோடு இரவா வீடுகளுக்கு மின் வாரியம் அதிரடி !

0

தமிழ்நாடு மின்சார வாரியம் சார்பாக பயனாளிகளுக்கு முக்கியமான கோரிக்கை ஒன்று விடுக்கப்பட்டு உள்ளது. மக்கள் புகைப்படம் எடுத்து அனுப்ப வேண்டும் என்று இதில் கோரிக்கை வைக்கப்பட்டு உள்ளது.

உடனே போட்டோ அனுப்புங்க.. இரவோடு இரவா வீடுகளுக்கு மின் வாரியம் அதிரடி !
தமிழ்நாடு மின்சார வாரியம் இது தொடர்பாக வெளியிட்டுள்ள செய்தியில், எங்க வீட்ல RCD இருக்கு உங்க வீட்டில் RCD பொருத்திய புகைப்படங்களை எடுத்து, Twitter-ல் #TANGEDCO_RCD_Safety என்ற ஹேஷ்டேக்குடன் பதிவேற்றவும்.

தமிழ்நாடு மின்சார வாரியம் (TANGEDCO) மின்சார பாதுகாப்பை மேம்படுத்தும் நடவடிக்கையாக, அனைத்து வீடுகளிலும் RCD பொருத்துவதை கட்டாயமாக்கி யுள்ளது. 

உங்கள் வீட்டில் RCD இன்னும் பொருத்தவில்லை என்றால், உடனடியாக பொருத்துங்கள். நம் அன்பானவர்களின் உயிரைக் காப்போம், என்று கூறி உள்ளது.

வீடுகளில் சிறிய பாதுகாப்பு கருவி ஒன்றை பொறுத்த வேண்டும் என்று தமிழ்நாடு மின்சார வாரியம் Tangedco சார்பாக கோரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.

ரத்தக் குழாய் நோய்களால் ஏற்படக்கூடிய உயிரிழப்பு ?

அதன்படி நம் வீடுகளில் RCD பொருத்துவது, நமது அன்புக்குரியவர்களின் உயிர்களைக் காப்பாற்றுகிறது! இந்த சிறிய அக்கறை மின்சார வீடுகளில் மின் விபத்துகளைத் தடுக்கும். 

வீடு நமது அன்பின் கூடு, அதனை RCD-யுடன் பாதுகாப்போம், என்று தமிழ்நாடு மின்சார வாரியம் Tangedco சார்பாக கோரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.

அதெல்லாம் சரி அது என்ன ஆர்சிடி கருவி.. சின்ன வயதில் எஸ்பிடி எமர்ஜென்சி கேள்வி பட்டு இருக்கிறோம்.. இது என்ன கருவி என்று நினைக்கிறீர்களா. விளக்கம் இதோ

ஆர்சிடி என்றால் என்ன? ஏன் பொறுத்த வேண்டும்?: எஞ்சிய மின்னோட்டம் சாதனம் (ஆர்சிடி) என்பது ஒரு பாதுகாப்பு சாதனம் ஆகும். 

இது மின்சார ஓட்டத்தில் ஏதேனும் தவறு இருந்தால் தானாகவே மின்சாரத்தை அணைக்கும் திறன் கொண்டது ஆகும். RCDகள் சாதாரண உருகிகள் மற்றும் சர்க்யூட் பிரேக்கர்களை விட அதிக உணர்திறன் கொண்டவை. 

அதாவது வீட்டில்தான் பியூஸ் இருக்கிறேதே என்று சொல்ல வேண்டாம். இது பியூஸை விட வேகமானது. அதோடு திறன் கொண்டது. மின்சார அதிர்ச்சிக்கு எதிராக கூடுதல் பாதுகாப்பை வழங்குகின்றன. 

இதனால் உங்களுக்கு ஷாக் அடிப்பதை தவிர்க்கலாம் ஒரு RCD மூலம் கூடுதல் பாதுகாப்பு வழங்கப்பட்டு மின்சார ஓட்டம் தவறான நேரங்களில் தடுக்கப்பட்டு உயிர்காக்க முடியும்.

RCD கருவி பொதுவாக மின்சார சர்க்யூய்ட் எனப்படும் சுற்றுடன் பாயும் மின்சாரத்தை தொடர்ந்து கண்காணிக்கும்.

உதாரணமாக.. 

உடனே போட்டோ அனுப்புங்க.. இரவோடு இரவா வீடுகளுக்கு மின் வாரியம் அதிரடி !
நீங்கள் மின்சார வயரை தொடுகிறீர்கள் என்று வைத்துக் கொள்வோம். நேரடியாக மின்சார பகுதியை தொட்ட நபரின் வழியாக, திட்டமிடப்படாத பாதையில் மின்சாரம் பாய்வதைக் கண்டறிந்தால், அது மின்சுற்றை மிக விரைவாக அணைத்து விடும். 

இதனால் இறப்பு அல்லது கடுமையான காயம் ஏற்படும் அபாயத்தைக் கணிசமாகக் ஆர்சிடி குறைக்கிறது. ஈரமான நிலையில் மின்சாரத்தைப் பயன்படுத்துவது மின்சார அதிர்ச்சியின் அபாயத்தை கணிசமாக அதிகரிக்கிறது. 

நீங்கள் ஈரமாகவும், தரையுடன் தொடர்பு கொண்டவராகவும் இருந்தால், அது உங்கள் வழியாக மின்சாரம் பாய்வதை எளிதாக்குகிறது. 

மிரண்டு போன இரயில்வே துறை... அமைச்சரின் தாயா இவர்

நீங்கள் ஈரமாக இருக்கும் குளியலறைகள் மற்றும் தோட்டங்கள் போன்ற பகுதிகளில் மின்சார அதிர்ச்சியிலிருந்து உங்களைப் பாதுகாக்க RCDகள் உதவும். 

மின்சார உபகரணங்களை வெளியில் பயன்படுத்தும் போது RCD பாதுகாப்பு இருப்பது முக்கியம்.

Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)
Privacy and cookie settings