ரஷ்ய ராணுவத்தில் பணியாற்றும் வீரர்கள், அனைத்து விதமான தட்பவெப்ப நிலையும் தாங்கும் திறன் கொண்ட பிரத்யேக ஷூக்கள் பயன்படுத்துகிறார்கள்.
ரஷ்யாவுக்கும் இந்தியாவுக்கும் நீண்ட காலமாக நல்லுறவு உள்ளது. சமீபத்தில் பிரதமர் மோடி ரஷ்யாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு அந்நாட்டு அதிபர் புதினை சந்தித்து பேசியிருந்தார்.
இந்த சந்திப்பின் போது இந்தியா - ரஷ்யா இடையே பல்வேறு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. இரு நாடுகளுக்கு இடையேயான வலுவான நல்லுறவை வெளிபடுத்தும் விதமாக அமைந்து இருந்தது.
ரஷ்யாவை பொறுத்தவரை சர்வதேச அளவில் சக்தி வாய்ந்த நாடுகளில் ஒன்றாக உள்ளது. கச்சா எண்னெய் ஏற்றுமதி, இயற்கை எரிவாயு என பல்வேறு பொருட்களை ஏற்றுமதி செய்வதில் ரஷ்யா முன்னிலையில் உள்ளது.
எனினும், ரஷ்ய ராணுவத்திற்கு இந்தியாவின் பீகாரில் உள்ள ஒரு நிறுவனத்தில் இருந்து காலணிகள் தயாரித்து அனுப்பப்படுகிறது என்ற தகவல் வெளியாகியுள்ளது. இது பற்றிய விவரம் வருமாறு:-
Competence Exports என்ற தனியார் நிறுவனம் தான் ரஷ்யாவில் உள்ள கம்பெனிகளுக்கும், ஐரோப்பிய சந்தைகளுக்கும் ஷூக்களை ஏற்றுமதி செய்து வருகிறது.
ஒரு உயிரினத்தின் 🐘 வயதை கண்டுபிடிப்பது எப்படி? கண்டிப்பாக பாருங்க
இது தொடர்பாக நிறுவனத்தின் பொது மேலாளர் ஷாயிப் குமார் ராய் கூறியதாவது:-
ஹஜிபூர் தொழிற்சாலையை நாங்கள் 2018-ல் ஆரம்பித்தோம். பாதுகாப்பான ஷூக்களை தயாரித்து ரஷ்யாவிற்கு ஏற்றுமதி செய்கிறோம்.
வீரர்கள் அதை அணிந்து செல்லும் போது கால் வழுக்காமல் இருக்காத வகையிலும் பிரத்யேகமாக வடிவமைக்கப் பட்டுள்ளது. லைட் வெயிட் மற்றும் கடுமையான தட்பவெப்ப நிலையிலும் நீடித்து உழைக்க கூடிய வகையில் இந்த ஷூக்கள் தயாரிக்கப் பட்டுள்ளன.
ரஷியாவில் 40 டிகிரி செல்சியஸ் வரை குளிர் நிலவும் என்பதால் இதை எல்லாம் கவனத்தில் கொண்டு தான் ஷூக்களை தயாரித்துள்ளோம்.
இதன் மதிப்பு ரூ.100 கோடியாகும். இதை இரு மடங்கு ஆக்குவதே எங்களின் இலக்கு. பீகாரில் உள்கட்டமைப்புகளை மேம்படுத்த வேண்டியுள்ளது.
ஒரு கோடியாக இருந்தாலும் நடிக்க மாட்டேன்.. விஜயகாந்த்
தொலைத் தொடர்பும் மேம்படுத்தப்பட வேண்டும் ரஷ்யா மட்டும் இன்றி ஐரோப்பிய நாடுகளின் சந்தைகளுக்கும் இந்த நிறுவனத்தின் ஷூக்கள் ஏற்றுமதி செய்யப் படுகின்றன.
Thanks for Your Comments