மலை போல் சோறு.. அண்டாவில் ஆட்டுக் கறி.. புதுக்கோட்டையில்?

0

புதுக்கோட்டை மாவட்டம் அரியமடக்காடு கிராமத்தில் 3 ஆண்டுக்கு ஒரு முறை நடைபெறும் முனீஸ்வரர் கோவில் திருவிழாவில் 100க்கும் மேற்பட்ட செங்கிடாய்களை வெட்டி ஆயிரக்கணக்கான பக்தர்களுக்கு அன்னதான விருந்து நடைபெற்றது. 

மலை போல் சோறு.. அண்டாவில் ஆட்டுக் கறி.. புதுக்கோட்டையில்?
மலையாய் மலையாய் சோறு சமைக்கப்பட்டு அங்கு வந்திருந்த பக்தர்களுக்கு கறிவிருந்து நடைபெற்றது. தென் மாவட்டங்கள் பொதுவாக திருவிழா என்றாலே அது கறிவிருந்துடன் மட்டுமே நடைபெறும். 

குறிப்பாக இரவு நேரத்தில் நடைபெறும் வினோத திருவிழாக்களில் ஆண்கள் மட்டுமே கலந்து கொள்ளும் வகையில் நடத்தப் படுகின்றன.

அப்படி பார்க்கையில் திருப்பரங்குன்றம் அருகே உள்ள உச்சிக் கருப்பண்ணசாமி கோயில், மேலூர் அருகே மழை பெய்து விவசாயம் செழிக்க வேண்டி, 

ஆண்கள் மட்டுமே நடத்தும் திருவிழாவில் 70 க்கும் மேற்பட்ட ஆடுகள் மற்றும் 500-க்கும் மேற்பட்ட சேவல்கள் பலியிடப்பட்டு மண்பானையில் வேப்பிலை வைத்து சமைத்து பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்படுகிறது.

போர் விமானி ஆக ஆசைபட்ட அப்துல் கலாம்.. நடந்தது?

இதேபோல் ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே முதல்நாடு கிராமத்தில் ஒவ்வொரு ஆண்டும் புரட்டாசி மாதம் இரண்டாவது வாரத்தில் எல்லை பிடரி அம்மன் கன்னிப்பெண் குலதெய்வத்தை ஆண்கள் மட்டுமே கூடி வழிபாடு செய்வது வழக்கம். 

இப்படி நிறைய இடங்களில் ஆண்கள் மட்டுமே கலந்து கொள்ளும் திருவிழாக்கள் பிரபலம். அப்படி ஒரு கோவில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் உண்டு.

அப்படி ஒரு கோவில் தான் புதுக்கோட்டை மாவட்டம் அரியமடக்காடு கிராமத்தில் உள்ள குழந்தை முனீஸ்வரர் கோவில். பழமையான இந்த கோவிலில் ஆனி மாதம் ஞாயிற்றுக்கிழமையன்று திருவிழா நடத்தப்படுவது வழக்கம். 

குழந்தை முனீஸ்வரர் கோவிலில் விவசாயிகள் வளர்த்த செங்கிடாய்களை மட்டும் வெட்டி பூஜை செய்து வணங்குவதால் நல்ல மழை பெய்து விவசாயம் செழிப்பாகவும், நல்ல விளைச்சலும், விளை பொருட்களுக்கு நல்ல விலை கிடைப்பதாக கிராம மக்கள் நம்பிக்கை கொண்டுள்ளனர்.

இந்நிலையில் இந்த ஆண்டு குழந்தை முனீஸ்வரர் கோயில் ஆனித் திருவிழா தொடங்கி நடைபெற்றது. 

திருவிழாவை முன்னிட்டு பக்தர்களால் வழங்கப்பட்ட 500 ஆட்டு கிடாய்கள் மற்றும் 300 கோழிகள் முனீஸ்வரருக்கு பலி கொடுக்கப்பட்டது. அதிகாலை 3 மணிமுதல் கிடாய் மற்றும் கோழிகள் வெட்டப்பட்டது. 

மலை போல் சோறு.. அண்டாவில் ஆட்டுக் கறி.. புதுக்கோட்டையில்?
பின்னர் பத்தாயிரம் பக்தர்களுக்கு வெட்டப்பட்ட ஆடு மற்றும் கோழி இறைச்சிகளை, இருபதுக்கும் மேற்பட்ட சமையல் கலைஞர்களை கொண்டு பெரிய அளவிலான பாத்திரங்களை பயன்டுத்தி உணவுகள் தயார் செய்யப்பட்டன.

தொடர்ந்து சமைக்கப்பட்ட உணவுகளை, குழந்தை முனீஸ்வரருக்கு படையல் வைத்து சிறப்பு பூஜை செய்யப்பட்டு, தொடர்ந்து ஆயிரக்கணக்கான பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. 

எந்த பிரச்னைகளுக்கு ரிட் மனு தாக்கல் செய்யலாம்?

இந்த நிகழ்ச்சியில் புதுக்கோட்டை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த ஏராளமான ஆண்கள் வயது பேதமின்றி கறி விருந்தை மகிழ்ச்சியுடன் உண்டனர். 

இந்த விருந்தில் மீதமான உணவுகளை வீட்டுக் கூட எடுத்துச் செல்லக் கூடாது. ஒரு வேளை மீந்து விட்டால் கூட அதனை குழி தோண்டி புதைத்து விடுவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)
Privacy and cookie settings