திருப்பூர் மளிகைக் கடைக்காரர் அநியாயத்துக்கு ஏமாந்து போய் லட்சக்கணக்கில் பணத்தை இழந்திருக்கிறார். என்ன நடந்தது?
திருப்பூர் - பல்லடம் சாலை குப்பாண்ட பாளையத்தை சேர்ந்த தம்பதி சக்திவேல் - சுருதி. சக்திவேலுக்கு 48 வயதாகிறது. சுருதிக்கு 45 வயதாகிறது. இதே பகுதியில் சொந்தமாக மளிகை கடை வைத்து நடத்தி வருகிறார்கள்.
இவர்களுக்கு கடந்த 2 வருடங்களுக்கு முன்பு ரவி என்ற 41 வயது நபர் அறிமுகமாகி யிருக்கிறார். ரவியின் 35 வயது மனைவி துர்கா என்பவரும் சக்திவேல் - சுருதி தம்பதியினரிடம் நெருங்கி பழகி வந்துள்ளார்.
ரவியும், துர்காவும் ஆந்திராவை சேர்ந்தவர்கள். இப்போதைக்கு பல்லடம் பகுதியில் வசித்து வருகிறார்கள்.
இந்நிலையில், கடந்த 4 மாதங்களுக்கு முன்பாக சுருதியிடம் பல்லடம் பகுதியில் தனக்கு தெரிந்த ஆந்திர மாநில தம்பதியினர் குடியிருந்து வருகிறார்கள்.
அவர்களிடம் ஒரு கிலோ தங்க கட்டி இருக்கிறது. அதன் மதிப்பு ரூ.60 லட்சத்திற்கு மேல் இருக்கும். ஆனால், அதனை எப்படி விற்பனை செய்வதென்று தெரியாமல் வீட்டிற்குள்ளேயே வைத்திருக்கிறார் என்று ரவியும் துர்காவும் கூறி யிருக்கிறார்கள்.
இதைக் கேட்டதும் சுருதிக்கு புத்தி தடுமாறியது. அவர்களிடமிருந்து தங்கத்தை குறைந்த விலைக்கு வாங்கி, அதிக லாபத்துக்கு விற்று விடலாம் என்று கணக்கு போட்டார். இந்த பேராசையில், அந்த தங்க கட்டியை தானே வாங்கி கொள்வதாகவும் கூறியுள்ளார்.
அப்துல் கலாம் அவர்களுடைய கனவு என்ன தெரியுமா?
உடனே ரவியும், துர்காவும், மளிகை நடத்தி வரும் ஸ்ருதியையும், சக்திவேலையும் பல்லடம் பகுதியில் குடியிருக்கும் அந்த ஆந்திர மாநில தம்பதியான முனுசாமி ( 38), அவரது மனைவி குமாரி (31) வீட்டிற்கு அழைத்து சென்றார்கள்.
13 லட்சம் தந்து, 2 தங்க கட்டிகளையும் அவர்களிடமிருந்து மளிகை கடை தம்பதி வாங்கி கொண்டார்கள்.
இந்த கட்டிகளை வீட்டிற்கு கொண்டு வந்த மளிகை கடை தம்பதியினர் பரிசோதித்துப் பார்த்த போது, அது நிஜமான தங்கம் கிடையாது என்பதும், தங்கமுலாம் பூசப்பட்ட பித்தளை என்பதும் தெரிய வந்தது.
இதனால் அதிர்ச்சி அடைந்த மளிகை கடை தம்பதியினர், உடனடியாக பல்லடம் சென்று, அந்த தங்கக்கட்டி தந்த ஆந்திரா தம்பதிகளை தேடி பார்த்தனர்.
ஆனால், அதற்குள் அந்த தம்பதி வீட்டை காலி செய்து விட்டு தலைமறைவாகி விட்டிருந்தனர். இதனால், மேலும் அதிர்ச்சி அடைந்த மளிகை கடை தம்பதி, இவர்களை அறிமுகப் படுத்திய ரவி, துர்காவிடம் சென்றார்கள்.
ஆனால் ரவியும், துர்காவும் தலைமறைவாகி யிருந்தார்கள். இதனால் உச்சக்கட்ட ஏமாற்றமடைந்த மளிகை கடை தம்பதி, போலீசில் புகார் தந்தனர்.
இந்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து ஆந்திர மாநில மோசடி தம்பதிகளை தேடி வந்தனர். அத்துடன் அவர்களை பிடிக்க தனிப்படையும் அமைக்கப்பட்டது.
இறுதியில், ரவி - துர்கா மற்றும் முனுசாமி - குமாரி ஆகிய 2 ஜோடிகளையும் கைது செய்தார்கள். அவர்களிடமிருந்து 6 கிலோ போலி தங்க கட்டிகளையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.
சோதனைக் குழாய் குழந்தைகள் உருவாகும் விதம்
பின்னர் இந்த ஜோடிகளிடம் தீவிரமான விசாரணையை முன்னெடுத்தனர். அப்போது தான் இவர்கள், திருப்பூரை சேர்ந்த மேலும் பல பெண்களிடம் போலி தங்க கட்டிகளை கொடுத்து பணமோசடியில் ஈடுபட்டுள்ளது தெரிய வந்தது.
அதாவது, வீட்டில் தனியாக இருக்கும் பெண்களை குறி வைத்து நட்பு கொள்வார்களாம். குடும்பத்தில் ஒருவராக பழகியதுமே, அவர்களிடம் பேச்சுவாக்கில் தங்க கட்டிகள் குறித்தும் ஆசை காட்டுவார்களாம்.
இந்த போலி தங்க கட்டிகளை விற்றே, லட்சக்கணக்கில் பணம் மோசடி செய்து வந்திருப்பதும் இப்போது தெரிய வந்துள்ளது.
இதையடுத்து, பாதிக்கப் பட்டவர்கள் அளிக்கும் புகார்களின் அடிப்படையில், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க போலீசார் தயாராகி வருகிறார்களாம்.
Thanks for Your Comments