எவ்வளவு உயர்ந்தாலும் அடக்கமான நடிகர்.. பிரேம் நஸீர் !

0

ஒரு நாளில் 16 மணி நேரம், மூன்று ஷிப்டுகளிலாக நஸீர் நடித்துக் கொண்டிருந்த காலம். நஸீர் பணத்திற்காக அப்படி நடிக்கவில்லை. அவர் தான் உச்ச நட்சத்திரம். 

எவ்வளவு உயர்ந்தாலும் அடக்கமான நடிகர்.. பிரேம் நஸீர் !
ஆனால் ஒரு படம் ஓடவில்லை என்றால் தயாரிப்பாளருக்கு அடுத்த படம் இலவசம். படம் ஓடும் வரை இலவசம். நண்பர்களுக்கு இலவசமாக நடித்துக் கொடுத்தார். 

நஸீரால் ஒரு காலத்தில் மலையாள சினிமாவுலகமே வாழ்ந்தது. ஒரு காலையில் படப்பிடிப்பு. மதியம் 12.30 -க்கு நஸீர் அடுத்த படப்பிடிப்புக்குச் செல்ல வேண்டும். நஸீரை கைது செய்து விசாரிக்கும் காட்சி. 

கைவிலங்கு போட்டு நஸீர் சம்பந்தமான காட்சிகளை எடுக்கிறார்கள். அன்று மின்றும் கைவிலங்கில் டம்மி என்பதே இல்லை. அசல் விலங்கு தான். அதை பூட்டினால் சாவி இருந்தால் மட்டுமே திறக்க முடியும். 

உடைக்கவே முடியாது. வெல்டிங் ராடால் கூட உருக்க முடியாது. படப்பிடிப்பு முடிந்து நஸீர் கிளம்பத் தயாரான போது தெரிய வருகிறது, கலை இயக்குநர் அந்த விலங்கின் சாவியுடன் எங்கோ போய் விட்டார். 

பாகிஸ்தானை மிரள வைத்த இந்தியா.. எப்படி தெரியுமா?

எங்கே என தெரியாது. ஏதோ வாங்கச் சென்றிருந்தார். என்ன செய்வதென்று தெரியவில்லை. பதறி குழம்பி ஒரு வழியாக இயக்குநரே நஸீரிடம் விஷயத்தைச் சொன்னார். நஸீர் கோபப்படும் வழக்கம் இல்லை. 

பரவாயில்லை மாஸே, மனிதன் தவறு செய்பவன் தானே நான் இப்படியே வீட்டுக்கு செல்கிறேன். சாவி கிடைத்தால் கொடுத்தனுப்புங்கள்.

நஸீர் கைவிலங்குடன் காரிலேறி வீட்டுக்குச் சென்றார். ஒரு மணி நேரம் கழித்து கலை இயக்குநர் வந்தார். குழுவே அவரை அடிக்க பாய்ந்தது. அவர் பதறி விட்டார். அப்படியே செத்து விடலாமா என நினைக்குமளவுக்கு. 

அழுகை, புலம்பல். நீ போய் அவர் காலில் விழுந்து மன்னிப்பு கேள் என்றார் இயக்குநர். கலை இயக்குநர் நஸீரின் வீட்டுக்குச் சென்றார். வீட்டில் சோபாவில் நஸீர் கைவிலங்குடன் அமர்ந்திருந்தார். 

சென்றதுமே அவர் காலில் விழப்போனார் கலை இயக்குநர். சேச்சே, மனிதன் காலில் மனிதன் விழக்கூடாது. பூட்டை திற என்றார் நஸீர். பூட்டை திறந்து விட்டு கலை இயக்குநர் கண்ணீருடன் நின்றார். ஏன் அழுகிறாய்?

எவ்வளவு உயர்ந்தாலும் அடக்கமான நடிகர்.. பிரேம் நஸீர் !

என்னை திட்டுங்கள், என்னை அடியுங்கள்… நான் தவறு செய்து விட்டேன். நீ என் நண்பன்… நான் உனக்கு நன்றி சொல்ல வேண்டும் என்று நஸீர் கலை இயக்குநரின் கையைப் பற்றிக் குலுக்கினார். 

அவர் திகைத்தார். என் மனைவி தேனிலவு நாட்களில் எனக்கு சோறு ஊட்டி விட்டிருக்கிறாள். இத்தனை ஆண்டுகளுக்குப் பின் இப்போது தான் மீண்டும் ஊட்டி விட்டாள்… அது உன்னால் தான். நீ என் நண்பன், உனக்கு நன்றி என்றார் நஸீர்.

திடீரென்று உடல் பாகங்கள் ஏன் மரத்துப் போகிறது?

எவ்வளவு உயர்ந்தாலும் ஒரு மனிதனின் அடக்கமான செயலே அவனை உச்சிக்கு கொண்டு செல்கிறது என்பதை உணர்த்திய நடிகர் இவரும் தமிழ் திரையுலகில் நடிகர் ஜெய்சங்கர் அவர்களும் தான்.

Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)
Privacy and cookie settings