கணவன் - மனைவி வாக்குவாதம்.. போலீஸ் கூறும் அதிர்ச்சி சம்பவம் !

1 minute read
0

தெலங்கானாவில் மனைவியின் சமீபகால நடவடிக்கைகளால் கணவன் செய்த கொடூர செயல் போலீஸாரால் தற்போது வெளிச்சத்துக்கு வந்திருக்கிறது. 

கணவன் - மனைவி வாக்குவாதம்.. போலீஸ் கூறும் அதிர்ச்சி சம்பவம் !
இந்த சம்பவம் தொடர்பாக போலீஸ் தரப்பில் வெளியான தகவலின்படி, பிரதீப் போலோ (32) என்பவர் தன்னுடைய மனைவி மதுஸ்மிதா பிரதான் மற்றும் இரண்டு வயது பெண் குழந்தையுடன் ஒடிசாவிலிருந்து சில மாதங்களுக்கு ஹைதராபாத்துக்கு குடியேறினார். 

உப்பல் பகுதியில் பாரத் நகரில் மூவரும் வாடகை வீட்டில் ஒன்றாக வசித்து வந்தனர். கணவன் பிரதீப் அதே பகுதியில் ஹோட்டல் ஒன்றில் வேலை செய்து வந்தார்.

இவ்வாறிருக்க, கடந்த வாரம் பிரதீப்புக்கும், அவரின் மனைவிக்கும் இடையே இரவு சண்டை ஏற்பட்டிருக்கிறது. இதில் பிரதீப் ஒருகட்டத்தில் ஆத்திரமடைந்து, சப்பாத்தி கட்டையால் மனைவியின் தலையில் பலமாகத் தாக்கினார். 

அடிவயிற்றில் உள்ள கொழுப்பை குறைக்க 10 வழிகள் !

இதனால், மனைவி மதுஸ்மிதா சம்பவ இடத்திலேயே உயிரிழக்க, சடலத்தை ஒரு கோணிப்பையில் அடைத்து வைத்து குழந்தையுடன் வீட்டிலிருந்து வெளியேறினார் பிரதீப். 

அதன் பிறகு வீட்டுக்கு வரவேயில்லை. இப்படியிருக்க, கடந்த வெள்ளிக்கிழமை அந்த வீட்டிலிருந்து துர்நாற்றம் வருவதை உணர்ந்த அக்கம் பக்கத்தினர், உடனடியாக போலீஸுக்கு தகவல் தெரிவித்தனர். 

அதையடுத்து அங்கு வந்த போலீஸார், அக்கம் பக்கத்தினரை விசாரித்து பிரதீப்பைத் தேட ஆரம்பித்தனர். ஒரு வழியாக, சனிக்கிழமை இரவு பிரதீப் கைது செய்யப்பட்டார்.

பின்னர், இந்த சம்பவம் குறித்து நேற்று பேசிய உப்பல் இன்ஸ்பெக்டர் என்.எலக்ஷன் ரெட்டி, கொல்லப்பட்ட அந்தப் பெண் சமீபத்தில் தனது பெற்றோர் வீட்டுக்குச் சென்று, ஒடிசாவின் கேந்திரபாரா போலீஸிடம் தன் கணவர்மீது குடும்ப வன்முறை பிரிவில் புகார் அளித்தார். 

அதையடுத்து, குடும்பப் பெரியவர்கள் கணவன் மனைவி இருவருக்கும் அறிவுரை கூறியதையடுத்து, இருவரும் ஒன்றாக வாழத் தொடங்கினர். இருப்பினும், இருவருக்குள்ளும் பிரச்னைகள் மீண்டும் எழுந்தன. 

ஜூலை 4-ம் தேதி அன்று இருவருக்குள்ளும் ஏற்பட்ட வாக்குவாதத்தைத் தொடர்ந்து, மனைவி சமைப்பதை நிறுத்த பிரதீப் வெளியில் சாப்பிடத் தொடங்கினார்.

இவ்வாறிருக்க, ஜூலை 7-ம் தேதி வேலை முடிந்து இரவு வீட்டுக்குத் திரும்பிய பிரதீப்புக்கும், அவரின் மனைவிக்கும் மீண்டும் வாக்குவாதம் ஏற்பட்டிருக்கிறது. 

அப்போது, பிரதீப் தன்னுடைய மனைவியின் கழுத்தை துணியால் நெரித்து, சப்பாத்தி கட்டையால் தலையில் தாக்க அங்கேயே அவர் சுருண்டு விழுந்து உயிரிழந்தார். 

பின்னர், பிரதீப் தனது மனைவியின் உடலை ஒரு கோணிப் பையில் அடைத்து வைத்து விட்டுத் தப்பி விட்டார். 

அதோடு, தனது மகளை செகந்திராபாத் ரயில் நிலையத்தில் விட்டு விட்டு சோமாஜி குடாவிலுள்ள ஒரு ஹோட்டலில் அவர் வேலை செய்யத் தொடங்கினார். 

தற்போது கைது செய்யப் பட்டிருக்கும் அவர் நீதிமன்ற காவலில் வைக்கப் பட்டிருக்கிறார் என்று தெரிவித்தார்.

Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)
Today | 1, April 2025
Privacy and cookie settings