ரேஸ் கார்களுக்கு எரிபொருள் உருவாக்கிய இந்தியன் ஆயில் !

0

இந்தியன் ஆயில் நிறுவனம் ரேஸ்களுக்காக பயன்படுத்தப்படும் கார் மற்றும் பைக்குகளுக்கான தனித்துவமான எரிபொருளை உருவாக்கி யுள்ளது. இந்த எரிபொருளுக்கு ஸ்டிரோம் எக்ஸ் என இந்நிறுவனம் பெயர் வைத்துள்ளது. 

ரேஸ் கார்களுக்கு எரிபொருள் உருவாக்கிய இந்தியன் ஆயில் !
இனி இந்த எரிபொருளை இந்தியா மட்டுமல்லாமல் உலகம் முழுவதும் உள்ள ரேஸ் நடக்கும் மையங்களுக்கு விற்பனை செய்ய முடிவு செய்துள்ளது. இது குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.

இந்தியன் ஆயில் நிறுவனம் இந்தியாவில் பெட்ரோல், டீசல் தயாரிக்கும் மிக முக்கியமான நிறுவனங்களில் ஒன்றாக இருக்கிறது. 

இந்நிறுவனம் இந்தியா முழுவதும் விற்பனை மையங்களை அமைத்து பெட்ரோல்களை விற்பனை செய்து வருகிறது. இந்நிலையில் இந்திய நிறுவனம் அதிக ஆக்டைன் கொண்ட பெட்ரோலை உருவாக்கி உள்ளது. 

இதை வைத்து ரேஸ் கார்கள் மற்றும் ரேஸ் பைக்குகளை மிக வேகமாக ஓட்டுவதற்கு முடியும். ஃபார்முலா 1 என்ற கார் ரேஸ் போட்டிகளை இந்த எரிபொருளை பயன்படுத்த முடியும். 

பல வருஷ கனவு... இசைஞானியாக உருவெடுத்த இளையராஜா

இந்தியன் ஆயில் நிறுவனம் ஒடிசாவில் உள்ள தனது கச்சா எண்ணெய் சுத்திகரிப்பு ஆலையில் இந்த அதிக ஆக்டேன் கொண்ட ஸ்டோம் எக்ஸ் என்ற பெட்ரோலை உருவாக்கியுள்ளது. 

உருவாக்கப்பட்ட முதல் பெட்ரோல் சென்னை இன்டர்நேஷனல் சர்க்யூட்டிற்கு அனுப்பி வைக்கப் பட்டுள்ளது அங்குள்ள ரேஸ் கார்களில் இது பயன்படுத்தப்படும் என எதிர்பார்க்கப் படுகிறது.

இந்தியா மட்டுமல்லாமல் சர்வதேச அளவில் நடக்கும் கார்,பைக் ரேஸ் பந்தயத்திற்கு இந்த ஸ்டோம் எக்ஸ் ரக பெட்ரோல், விற்பனை செய்யப்படும். 

இது போக இந்தியன் ஆயில் நிறுவனம் தற்போது ஃபெடரேஷன் ஆப் இன்டர்நேஷனல் டி மோட்டாரைஷேஷன் மற்றும் ஏசியா ரோடு ரேஸிங் சாம்பியன்ஷிப் ஆகிய இரண்டு கார்,பைக்ரேஸ் நடத்தும் ஒருங்கிணைப் பாளர்களுடன் ஒப்பந்தம் செய்துள்ளது. 

இந்த இரு போட்டிகளுக்கும் அடுத்த மூன்று ஆண்டுக்கான எரிபொருள் இந்தியன் ஆயில் நிறுவனம் தான் வழங்கப்போகிறது.

இந்தியன் ஆயில் நிறுவனம் இந்த ஸ்ட்ரோம் எக்ஸ் என்ற பெட்ரோலை அதிக ஆக்டேன் கொண்ட பெட்ரோலாக உருவாக்கி யுள்ளது. 

இதற்கு நவீன தொழில்நுட்பங்களை பயன்படுத்தி பல முக்கியமான கலவைகளை மேற்கொண்டுள்ளது. முக்கியமாக இதில் 2ஜி எத்தனால் கலக்கப்பட்டுள்ளது. 

இந்த ஸ்டோம் எக்ஸ் எரிபொருளை துபாயை சேர்ந்த பீரோ வெரிடாஸ் என்ற நிறுவனம் சோதனை செய்து, இது அதிக ஆக்டைன் கொண்ட எரிபொருள் என்ற சான்றை வழங்கியுள்ளது.

சென்னையில் மெட்ராஸ் மோட்டார் ஸ்போர்ட்ஸ் கிளப் நடத்தும் இந்தியன் நேஷனல் ரேஸிங் சாம்பியன்ஷிப் போட்டியின் மூன்று மற்றும் நான்காவது சுற்றுகள் இந்த ஆண்டு நடக்க உள்ளது. 

ஒரு கோடியாக இருந்தாலும் நடிக்க மாட்டேன்.. விஜயகாந்த்

இந்த போட்டிகளுக்கான எரிபொருள் இந்தியன் ஆயில் நிறுவனத்தில் இருந்து தான் பெறப்பட்டு பயன்படுத்தப் படுகிறது. 

இதற்காக 50 பேரல் கொண்ட ஸ்டோம் எக்ஸ் அதிக ஆக்டைன் கொண்ட எரிபொருளை ஏற்கனவே அந்நிறுவனம் டெலிவரி செய்து விட்டது.

ஆக்டேன் என்பது எரிபொருளின் திறமையாகும். நூறு என்பது முழுமையாக அனைத்து விஷயங்களையும் எரிக்கும் திறன் கொண்ட எரிபொருள் தான் 100 ஆக்டேன் கொண்ட எரிபொருளாகும். 

90 ஆக்டேன் என்றால் உள்ளே செலுத்தும் பெட்ரோலில் 90 சதவீதம் மட்டுமே எரியும். மீதி 10 சதவீதம் எறியாமல் கசிவாகி விடும். அதிக ஆக்டேன் கொண்ட எரிபொருள் என்றால் அதிக பவரை இன்ஜினிற்கு வழங்கும்.

ரேஸ் கார்களுக்கு எரிபொருள் உருவாக்கிய இந்தியன் ஆயில் !

இந்தியன் ஆயில் நிறுவனத்தை பொறுத்தவரை இந்தியாவில் பெட்ரோல் டீசல் தயாரித்து விற்பனை செய்து வருகிறது. இந்நிறுவனம் அடிப்படையில் இரண்டு வகையான பெட்ரோல்களை விற்பனை செய்து வருகிறது. 

ரெகுலரான பெட்ரோல் மற்றும் பிரீமியமான பெட்ரோல் என பிரிக்கப் படுகிறது. ரெகுலரான பெட்ரோல் 87 ஆக்டேன் கொண்டதாக வழங்கப் படுகிறது.

ஒரு வேளை உணவு கூட இல்லாமல் கஷ்டப்பட்ட நடிகர் கவுண்டமணி !

இதுவே பிரீமியம் எரிபொருளை பொருத்தவரை இரண்டு வகையில் இது வழங்கப் படுகிறது. 95 ஆக்டைன் கொண்ட பெட்ரோல் எச்பி 95 என்ற பெயரிலும், 100 ஆக்டேன் கொண்ட பெட்ரோல் எச்பி 100 என்ற பெயரிலும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. 

இது போக 91 ஆக்டேன் கொண்ட பெட்ரோலும் சாதாரணமாக பிரிமியம் பெட்ரோல் என்ற பெயரில் விற்பனையாகி வருகிறது.

Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)
Privacy and cookie settings