தொழிலதிபர் முகேஷ் அம்பானியின் இளைய மகன் ஆனந்த் அம்பானி மற்றும் ராதிகா மெர்ச்சண்ட் திருமண சடங்குகள் இம்மாத தொடக்கத்தில் தொடங்கி விமரிசையாக நடந்து வந்தன.
இதற்காக அம்பானி வீடு மற்றும் ஜியோ வேர்ல்டு சென்டர் இரண்டுமே வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு இருந்தன. அம்பானி இல்லத் திருமணத்திற்கு நேற்று மதியமே விருந்தினர்கள் வர ஆரம்பித்தனர்.
விருந்தினர்களுக்காகச் சிறப்பு விமானங்கள் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தன. டெல்லி உட்பட நாட்டின் முக்கிய இடங்களிலிருந்து மும்பைக்குச் சிறப்பு விமானங்கள் இயக்கப்பட்டன.
இத்திருமணத்தில் அமெரிக்க டி.வி நட்சத்திரம் கிம் கர்தாஷியன், அவரது சகோதரி கிலோய், நைஜீரியா பாடகி ரீமா, பிரிட்டன் முன்னாள் பிரதமர் டோனி பிளேர், சாம்சங் நிறுவனத் தலைவர் ஜெய் லி மற்றும் தொழிலதிபர்கள் பலர் கலந்து கொண்டனர்.
அழிந்து வரும் கோரைப்பாய் தொழில்
இதில் ஒட்டு மொத்த பாலிவுட்டும் ஆஜராகி யிருந்தது. அமிதாப் பச்சன் குடும்பம் மட்டும் இவ்விழாவில் பிரிந்து காணப்பட்டது.
ஆனால் இதில் ஐஸ்வர்யா ராயும், அவரது மகளும் பங்கேற்கவில்லை. இருவரும் தனியாக வந்து திருமணத்தில் பங்கேற்றது மட்டுமல்லாது இருவரும் சேர்ந்து புகைப்படத்திற்கு போஸ் கொடுத்தனர்.
நடிகை ஜான்வி கபூர் தனது காதலர் சிகருடன் இத்திருமணத்தில் கலந்துகொண்டார். ஜான்வி கபூர் அணிந்திருந்த ஆடை அனைவரையும் கவரும் விதத்திலிருந்தது.
விழாவில் அனில் கபூரும், போனி கபூரும் ஒன்றாக நடனம் ஆகி மகிழ்ந்தனர். விழாவில் ரன்வீர் சிங் மற்றும் அனில் கபூர் ஆகியோருடன் சேர்ந்து நடிகர் ரஜினிகாந்த் நடனமாடினார்.
ஷாருக்கான் மற்றும் அவரது குடும்பம், சல்மான் கான், அஜய் தேவ்கன், ரன்பீர் கபூர், ஆலியா பட், வருண் தவான், அர்ஜுன் கபூர், அனன்யா பாண்டே, மகேஷ் பாபு,
ராம் சரண், சச்சின் டெண்டுல்கர், மகேந்திர சிங் தோனி, ஸ்ரீகாந்த், ஹர்திக் பாண்டியா உட்பட பாலிவுட் மற்றும் கிரிக்கெட் நட்சத்திரங்கள் கலந்து கொண்டனர்.
இத்திருமணத்தில் பங்கேற்பதற்காக நடிகை கேத்ரீனா கைஃப் லண்டனிலிருந்து வந்து தனது கணவர் விக்கி கௌஷலுடன் சேர்ந்து கலந்து கொண்டார்.
இது தவிரக் கர்ப்பிணியாக இருக்கும் தீபிகா படுகோனேவும் இத்திருமணத்தில் கலந்து கொண்டார்.
லிப்ஸ்டிக்கினால் மூளை பாதிப்பு ஏற்படுகிறது?
திருமணத்தில் உள்நாடு மற்றும் வெளிநாடுகளிலிருந்து விருந்தினர்கள் வந்திருந்ததால் அவர்களுக்குத் தகுந்த படி பல்வேறு வகையான உணவு வகைகளுக்கு ஏற்பாடு செய்யப் பட்டிருந்தது.
பனாரஸிலிருந்து பிரத்யேகமாக சாட் மசாலா வரவழைக்கப்பட்டு இருந்தது. இது தவிர இந்தூரில் பிரபலமாக இருக்கும் கராடு சாட் எனப்படும் உணவு வகைக்கும் ஏற்பாடு செய்யப் பட்டிருந்தது.
திருமண விருந்தில் தேங்காயில் செய்யப்பட்ட 100 வகையான உணவுகள் பரிமாறப்பட்டன. மெட்ராஸ் பில்டர் காபி, கும்பகோணம் டிகிரி காபி, மைசூர் பில்டர் காபியும் விருந்தினர்களிடம் சக்கைப் போடுப் போட்டது.
இந்தியத் தெருக்களில் விற்பனை செய்யப்படும் பிரபல உணவு முதல் சர்வதேச உணவு வரை மொத்தம் 2500 வகையான உணவுகள் விருந்தினர்களுக்கு வழங்கப்பட்டன.
குடல் புற்று நோய்க்கான அறிகுறிகள் என்ன?
திருமணத்தில் கலந்து கொண்டவர்களுக்கு எதைச் சாப்பிடுவது என்ற குழப்பம் ஏற்படும் அளவுக்கு உணவு பரிமாறப்பட்டது. மும்பையில் நேற்று மழை பெய்து கொண்டிருந்தது. அப்படியிருந்தும் திருமண விருந்து களைகட்டிக் காணப்பட்டது.
Thanks for Your Comments