உலகமே வியந்து பார்க்கும் இந்த புர்ஜ் கலிபா கட்டிடத்தில் மிகப் பெரிய பிரச்சினை ஒன்று இருக்கிறது தெரியுமா. அந்த கட்டிடத்திற்கு வெளியே செப்டிக் டேங்க் வாகனங்கள் அணி வகுத்து நிற்கிறது ஏன் தெரியுமா.
கச்சா எண்ணெய் கண்டுபிடிக்கப்படும் வரை மிகவும் ஏழ்மை நிலையில் இருந்த நாடுகள் அதன் பின்னர் மின்னல் வேகத்தில் வளர தொடங்கியது.
இப்போது உலகின் மிகவும் பவர்புல் நாடுகளில் மத்திய கிழக்கு நாடுகளும் உள்ளன. விண்ணை முட்டும் கட்டிடங்கள், பளபளக்கும் சாலைகளால் மத்திய கிழக்கு நாடுகள் முற்றிலுமாக மாறி விட்டன.
உடலுக்கு தைரியத்தைத் தரும் உணவு முறைகள்
காலநிலை மாற்றம் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் நாம் மெல்லக் கச்சா எண்ணெய் பயன்பாட்டைக் குறைத்து, அதற்குப் பதிலாக மின்சார வாகனங்களை நோக்கிச் சென்று கொண்டிருக்கிறோம்.
இதனால் மத்திய கிழக்கு நாடுகளும் வரும் காலத்தைக் கருத்தில் கொண்டு கச்சா எண்ணெய் மட்டும் நம்பி இருக்காமல் பொருளாதாரத்தை மாற்றி வருகின்றன.
உலகெங்கும் இருந்து சுற்றுலாப் பயணிகளை ஈர்க்க அவர்கள் பலவற்றைச் செய்து வருகின்றனர். அதற்காகத் தான் துபாயில் அவர்கள் பல புதிய கட்டுமானங்களை ஏற்படுத்தி வருகின்றனர்.
2004ஆம் ஆண்டில் கட்டுமானம் தொடங்கப்பட்ட நிலையில், இதை முற்றிலுமாக கட்டி முடிக்கவே அவர்களுக்கு 6 ஆண்டுகள் ஆகியுள்ளன.
உலகின் டாப் ஹோட்டல்கள், சொகுசு விடுதிகளைக் கொண்ட இந்த புர்ஜ் கலிபா கட்டிடத்திற்கு உலகெங்கும் இருந்து மக்கள் வருகின்றனர்.
உலகின் மிகப் பெரிய கட்டிடமான இந்த புர்ஜ் கலிபா 830 மீட்டர் உயரம் கொண்டது. நாம் நம்ம ஊரில் இப்போது பார்க்கும் கட்டிடங்களை விட இது பல மடங்கு உயரமானது.
மாத்திரைகளை உடைத்து உபயோகிக்கலாமா?
இதில் அதிகபட்சமாக 35 ஆயிரம் பேர் வரை தங்க முடியும். இப்படிப் பல சிறப்புகளைக் கொண்டிருந்தாலும், அங்கே கழிவு நீர் அமைப்பு என ஒன்று முறையாக இல்லை.
புர்ஜ் கலிபா சந்தேகத்திற்கு இடமின்றி வியக்கத்தக்க ஒரு கட்டிடம் என்ற போதிலும் அது நகரின் கழிவு நீர் அமைப்புடன் இணைக்கப் படவில்லை. அப்போ உள்ளே இருப்பவர்கள் டாய்லெட் போனால், என்ன ஆகும்.
அதை அப்புறப்படுத்த ஒரு மிக மோசமான வழியை வைத்துள்ளார்கள். அதாவது தினசரி அங்கே புர்ஜ் கலிபா கட்டிடத்திற்கு முன்பு பல நூறு செப்டிக் டேங்க் வாகனங்கள் நிற்கும் எனப் பார்த்தோமே..
இதற்காக அதிக எண்ணிக்கையில் செப்டிக் டேங்க் வாகனங்கள் ஒவ்வொரு நாளும் புர்ஜ் கலிபா கட்டிடத்தை நோக்கிப் படையெடுக்கிறது. வாகனங்கள் மூலம் ஒவ்வொரு நாளும் அந்த கழிவுகள் நகரத்திற்கு வெளியே கொண்டு செல்லப் படுகின்றன.
பல ஆயிரம் கோடி செலவழித்து கட்டிடம் கட்டியவர்கள் கழிவுகளை அகற்றக் கூட ஒரு அமைப்பைக் கட்டியிருக்க மாட்டார்களா என்று நீங்கள் யோசிக்கலாம்.
புர்ஜ் கலிபா கட்டப்பட்டு வந்த போது, 2008இல் துபாய் மிகப் பெரிய கடன் நெருக்கடியில் சிக்கியது. இதனால் புர்ஜ் கலிபா கட்டுமானத்திலும் செலவைக் குறைக்க வேண்டிய நிர்ப்பந்தத்திற்குத் தள்ளப்பட்டது.
என்ன செய்யலாம் என யோசித்தவர்கள். அதை நகரின் முக்கிய கழிவுநீர் அமைப்பில் இணைக்க வேண்டாம் என முடிவெடுத்தனர். அதற்கு செய்யும் செலவை அவர்கள் தேவையற்ற செலவாகவே பார்த்தார்கள்.
இதன் காரணமாகவே செப்டிக் டேங்க் வாகனங்கள் அணி வகுத்து நிற்கிறது. இருப்பினும், 35,000 பேர் வசிக்கக்கூடிய இந்த கட்டிடம் ஒரு நாளைக்கு 15 டன் கழிவுநீரை உற்பத்தி செய்யும் என்பதால் இதுவே இவர்களுக்குப் பெரிய பிரச்சினையாக மாறிவிட்டது.
இதயத்தை பாதுகாப்பது எப்படி? | How to protect the heart?
இதனால் கழிவுநீர் அமைப்பை மீண்டும் மேம்படுத்த முடிவு செய்துள்ளனர். இருப்பினும், அதன் கட்டுமானம் நிறைவடையவே 2025 வரை ஆகும். அதுவரை இரு செப்டிக் டேங்க் வாகனங்கள் தான்.
Thanks for Your Comments