கோயிலில் விழும் நிழல்... விடை கிடைக்காத மர்மம்?

0

தெலுங்கானாவில் உள்ள சாயா சோமேஸ்வரர் கோயிலில் மர்மமான முறையில் நிழல் விழுகின்றன. இவை இரவானாலும் மறையாமல் அப்படியே இருப்பது நமது கட்டடக் கலைக்கு சிறந்த எடுக்காட்டாகும். 

கோயிலில் விழும் நிழல்... விடை கிடைக்காத மர்மம்?
இந்த நிழல் எப்படி விழுகிறது என்பது புரியாத புதிராக உள்ளது. இது குறித்து குவோராவில் ரத்தினம் வடிவேல் சேகர் என்பவர் கூறியிருப்பதாவது: 

மர்ம நிழல்கள் உள்ள சாயா சோமேஸ்வரர் கோவில், தெலுங்கானா மன்னர் காலத்தில் வடிவமைக்கப்பட்ட சில கோவில்களில் உள்ள மர்மங்களை 

உலகம் வெளிச்சத்திற்கு கொண்டு வர முடியாமல் இன்றளவும் விஞ்ஞானிகளும் விழி பிதுங்கி தான் அங்கு வழிய நிற்கிறார்கள் என்றே தான் நாம் கூற வேண்டும்.

அந்த வகையில் ஹைதராபாத் மாநகரத்தில் இருந்து சுமார் 100 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள சாயா சோமேஸ்வரர் கோவிலில் பல மர்மங்கள் அடங்கியுள்ளது.

ஒரு ரூபாய்க்கு சாப்பாடு.. ஈரோட்டில் அதிசய மனிதர் ! 

10ம் நூற்றாண்டில் கன்டூர் சோழர்களால் கட்டப்பட்டது. இந்த கோவிலில் ஃ வடிவில் மூன்று கருவறைகள் உள்ளது. அந்த மூன்று கருவறைகளில் மூன்று விதமான மர்ம நிழல்கள் உள்ளன. 

இங்குள்ள லிங்கத்திற்கு பின்புறம் ஒரு தூணின் நிழல் விழுகிறது. நிழலில் என்ன அதிசயம் என்றால், காலை முதல் மாலை வரை அந்த நிழல் நகர்வதே கிடையாது. 

அதோடு இரவு நேரத்தில் கூட அந்த நிழல் மறைவதே கிடையாது. பொதுவாக சூரியன் நகர நகர நிழலும் நகர்ந்து கொண்டே தான் போகும் அது தான் உலகின் நியதி.

அனால் இங்கு சூரியன் உதிப்பதில் இருந்து அந்தி மறையும் வரை அந்த நிழல் நகராமல் ஒரே இடத்தில உள்ளது. மேலும் இந்த கருவறைக்கு முன்பு நான்கு தூண்கள் உள்ளன. 

அனால் கருவறையில் விழும் நிழல் எந்தவொரு தூணிற்காக உருவானது என்று கண்டறியவே முடியவில்லை. எந்த தூணிற்கு பக்கத்தில் நாம் நின்று பார்த்தாலும் தூணின் நிழல் மட்டுமே கருவறையில் விழுகிறதே தவிர நமது நிழல் தரையில் விழுவதில்லை. 

கோயிலில் விழும் நிழல்... விடை கிடைக்காத மர்மம்?

இந்த கருவறைக்கு எதிரில் ஒருவர் நின்றால் அவர் தன்னுடைய நான்கு நிழல்களை பார்க்க முடியும். எப்படி ஒரு உருவத்திற்கு நான்கு நிழல்கள் விழுகிறது என்பது சற்றும் புரியாத புதிராகவே உள்ளது.

இந்த கருவறைக்கு எதிரில் ஒருவர் நின்றால் அவரது நிழல் எப்பொழுதும் அவருக்கு எதிர் திசையிலே விழும். நிழல் எப்படி எப்போதும் எதிர் திசையிலே விழுகிறது என்பது கணிக்க முடியாத ஒன்றாகவே இன்று வரையிலும் உள்ளது.

பாகிஸ்தானை மிரள வைத்த இந்தியா.. எப்படி தெரியுமா?
சாயா என்றால் நிழல் என்று பொருள் அதனால் தான் இந்த கோவிலுக்கு ஸ்ரீ சாயா சோமேஸ்வரர் ! என்று பெயர் வந்துள்ளது. 

நிழலை வைத்து பல மர்மங்களோடு தொடர்புடைய இந்த கோவிலை கட்டப்பட்டு உள்ளதால், தான் இந்த கோயிலின் கடவுள் நிழல்களின் தெய்வம் என்றே மக்களால் அழைக்கப் படுகிறார். இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)
Privacy and cookie settings