பிரிட்டன் நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்ற இந்திய வம்சாவளியை சேர்ந்த 29 வயது நிரம்பிய சிவானி ராஜா பகவத் கீதையை கையில் வைத்து எம்பியாக பதவியேற்று கொண்டார்.
நம் நாட்டை போல் பிரிட்டனிலும் 5 ஆண்டுக்கு ஒருமுறை நாடாளுமன்ற தேர்தல் நடைபெற்று வருகிறது. கடந்த 2019ம் ஆண்டு நடந்த நாடாளுமன்ற தேர்தலில் கன்சர்வேட்டிவ் கட்சி வெற்றி பெற்றது.
இதையடுத்து போரிஸ் ஜான்சன், லிஸ் டிரஸை தொடர்ந்து இந்திய வம்சவாளியை சேர்ந்தவரும், இன்போசிஸ் நிறுவனரான நாராயண மூர்த்தியின் மருமகனுமான ரிஷி சுனக் பிரதமரானார்.
இந்நிலையில் தான் கடந்த 4ம் தேதி பிரிட்டன் நாடாளுமன்றத்துக்கு தேர்தல் நடந்தது. அங்கு மொத்தம் 650 தொகுதிகள் உள்ளன. ஒரு கட்சி தனித்து ஆட்சியை பிடிக்க வேண்டும் என்றால் 326 இடங்களில் வெற்றி பெற வேண்டும்.
நெஞ்செரிச்சலை எளிமையாக தடுப்பது எப்படி?
பிரிட்டனை பொறுத்தமட்டில் ரிஷி சுனக்கின் கன்சர்வேட்டிவ் கட்சி மற்றும் கீர் ஸ்டார்மரின் தொழிலாளர் கட்சி இடையே கடும் போட்டி நிலவியது.
4ம் தேதி தேர்தல் முடிவடைந்த நிலையில் 5ம் தேதி ஓட்டு எண்ணிக்கை நடத்தப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டன. இதில் ரிஷி சுனக் கட்சி படுதோல்வியடைந்த நிலையில் கீர் ஸ்டார்மரின் கட்சி அமோக வெற்றி பெற்றது.
அதாவது கீர் ஸ்டார்மரின் தொழிலாளர் கட்சி 33.7 சதவீத ஓட்டுகளுடன் தனிப்பெரும் பான்மைக்கு தேவையான இடங்களை தாண்டி 412 தொகுதிகளில் வெற்றி பெற்றது.
இந்த தேர்தலில் இந்திய வம்சாவளியை சேர்ந்த ரிஷி சுனக் உள்பட மேலும் சிலர் வெற்றி பெற்றனர். அதில் ஒருவர் தான் சிவானி ராஜா. இவர் லெய்செஸ்டர் கிழக்கு தொகுதியில் கன்சர்வேட்டிவ் கட்சி சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.
இவரிடம் இந்திய வம்சாவளியை சேர்ந்த தொழிலாளர் கட்சியின் ராஜேஷ் அகர்வால் தோல்வியடைந்தார்.
இந்த தொகுதி கடந்த 37 ஆண்டுகளாக தொழிலாளர் கட்சியின் கோட்டையாக இருந்த நிலையில் அங்கு சிவானி ராஜா போட்டியிட்டு வெற்றி பெற்று எம்பியாகி உள்ளார்.
இந்நிலையில் தான் பிரிட்டன் நாடாளுமன்றத்தில் எம்பியாக பதவியேற்றார். அப்போது அவர் பகவத் கீதை மீது கைவைத்து உறுதிமொழி எடுத்து கொண்டார்.
இது தொடர்பான வீடியோ தற்போது இணைய தளங்களில் வெளியாகி வேகமாக பரவி வருகின்றன. பிரிட்டன் பிரதமராக இருந்த ரிஷி சுனக் இதற்கு முன்பு பகவத் கீதையை வைத்து பதவியேற்றார்.
மூட்டு மாற்று அறுவை சிகிச்சையும் சிக்கல்களும்?
அந்த வகையில் பிரிட்டனின் அடுத்த ரிஷி சுனக்காக சிவானி ராஜாவா? என்ற கேள்வி எழுந்துள்ளது. ஏனென்றால் சிவானி ராஜாவும் இந்திய வம்சாவளியை சேர்ந்தவர். இவரது பெற்றோர் குஜராத்தை சேர்ந்தவர்.
அவர்கள் பிரிட்டனில் செட்டில் ஆன நிலையில் சிவானி ராஜாவும் அங்கேயே வளர்ந்துள்ளார். இவருக்கு தற்போது வயது 29 தான் ஆகிறது. இப்போது எம்பியாகி உள்ளதால் பிரிட்டன் அரசியலில் அவர் நல்ல நிலைக்கு வரலாம் என சொல்லப் படுகிறது.
இதற்கு முக்கிய காரணம் என்னவென்றால் சிவானி ராஜா, தொழிலாளர் கட்சியின் வேட்பாளரான இந்திய வம்சாவளியை சேர்ந்த ராஜேஷ் அகர்வாலை தோற்கடித்துள்ளார்.
இந்நிலையில் தான் பகவத் கீதை மீது உறுதிமொழி ஏற்றுக் கொண்ட சிவானி ராஜா அதுபற்றி தனது எக்ஸ் பக்கத்தில் பெருமையாக கூறியுள்ளார்.
அசைவ உணவுகளை அதிகம் உண்பவர்களுக்கு ஆபத்து !
அந்த பதிவில், இன்று லெய்செஸ்டர் கிழக்கு தொகுதியை பிரதிநிதித்துவப் படுத்தும் வகையில் நாடாளுமன்றத்தில் பதவியேற்றது பெருமையாக இருக்கிறது.
பகவத் கீதையின் மீது மன்னர் சார்லசுக்கு எனது உறுதி மொழியை அளித்ததில் பெருமைப் படுகிறேன்' என தெரிவித்துள்ளார்.
Thanks for Your Comments