அமெரிக்காவில் உள்ள இந்திய வம்சாவளி விண்வெளி வீராங்கனையான சுனிதா வில்லியம்ஸ் கடந்த மாதம் விண்வெளிக்குச் சென்றார். அவர் ஒரு வாரத்தில் பூமி திரும்ப இருந்தார்.
அமெரிக்காவைச் சேர்ந்த முக்கிய விண்வெளி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸ்.. இவர் இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர். மேலும், இவர் ஏற்கனவே 2 முறை அமெரிக்காவில் இருந்து விண்வெளிக்குச் சென்று திரும்பியுள்ளார்.
சுனிதா வில்லியம்ஸும் புட்ச் வில்மோரும் கடந்த ஜூன் 5ஆம் தேதி சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.
ஒரு வாரத்தில் பூமிக்குத் திரும்புவதே அவர்கள் திட்டமாகும். விண்வெளியில் பல்வேறு ஆய்வுப் பணிகளை மேற்கொண்ட அவர்கள் ஒரு வாரத்தில் பூமி திரும்ப ரெடியாக இருந்தனர்.
மிரண்டு போன இரயில்வே துறை... இவரது மகன் அமைச்சரா?
இருப்பினும், சில காரணங்களால் அவர்கள் பூமிக்கு வருவது தாமதமானது. அதாவது அவர்களை அழைத்துச் சென்ற விண்கலத்தில் உந்துதல் செயலிழப்புகள் மற்றும் ஹீலியம் கசிவுகள் ஏற்படுவது தெரிய வந்தது.
இதனால் சுனிதா வில்லியம்ஸ் எப்போது பூமிக்குத் திரும்புவார் என்றே தெரியவில்லை. நாசாவும் இதற்கான காலக்கெடு எதையும் நிர்ணயம் செய்யவில்லை.
இருப்பினும், ஜூலை மாத கடைசியில் அவர்கள் விண்வெளியில் இருந்து திரும்புவார்கள் என எதிர்பார்க்கப் படுகிறது. இதற்கிடையே இந்த விவகாரம் தொடர்பாக விண்வெளியில் இருக்கும் சுனிதா வில்லியம்ஸ் சில முக்கிய கருத்துகளைத் தெரிவித்துள்ளார்.
அவர் கூறுகையில், விண்கலம் எங்களை வீட்டிற்கு அழைத்து வரும்.. அதில் பெரியளவில் எந்த பிரச்சினையும் இருக்காது என்றே நினைக்கிறோம். விண்வெளியில் ஜாலியாகவே இருக்கிறோம்.
இங்கே எங்களுக்கான பணிகளை நாங்கள் மேற்கொண்டு வருகிறோம் என்றார்.
அதே நேரம் சுனிதா வில்லியமஸ் சென்ற ஸ்டார்லைனரின் என்ன பிரச்சினைகள் என்பதைக் கண்டறியவும் அது பறக்கும் விதத்தை மாற்றியமைக்கவும் பல்வேறு ஆய்வுகளை மேற்கொள்ள வேண்டும்.
விஞ்ஞான முறையில் விஷங்களாகும் பழங்கள்
அமெரிக்காவின் நாசா கடந்த சில காலமாகவே தனியார் நிறுவனங்களின் விண்கலம் மூலமாகவே வீரர்களை விண்வெளிக்கு அழைத்துச் சென்று வருகிறது.
அதன்படி இந்த முறை போயிங் ஸ்டார் லைனர் மூலம் அவர்கள் விண்வெளிக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். அதில் தான் இப்போது சிக்கல் ஏற்பட்டுள்ளது.
அதே நேரம் நாசாவின் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் டிராகன் என்ற விண்கலத்தையும் நாசா விண்வெளிக்கு வீரர்களை அழைத்துச் செல்ல பயன்படுத்தி இருக்கிறது.
வீரர்களை விண்வெளியில் இருந்து அழைத்துவர போயிங் விண்கலமே போதும் என்றும் அதே நேரம் வேறு வழியே இல்லை என்றால் ஸ்பேஸ் எக்ஸ் விண்கலம் பயன்படுத்தவும் ரெடியாக உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதயத் துடிப்பை சீராக வைக்கும் உணவுகள் !
இருப்பினும், அப்படி ஸ்பேஸ்எக்ஸ் மூலம் பூமிக்கு அழைத்து வரப்பட்டால் அது போயிங் நிறுவனத்திற்கு மிகப் பெரிய அவமானமாக அமையும். இதன் காரணமாகவே எப்படியாவது தங்கள் விண்கலம் சரி செய்யும் முயற்சியில் போயிங் இறங்கியுள்ளது.
Thanks for Your Comments