கொலையாளி கூறிய அந்த வார்த்தை.. அருகே சென்ற ஆம்ஸ்ட்ராங்.. நடந்தது என்ன?

0

ஆம்ஸ்ட்ராங் கொலை செய்யப் படுவதற்கு முன்பு என்ன நடந்தது என்பது பற்றி பரபரப்பு தகவல் ஒன்று வெளிவந்துள்ளது. 

கொலையாளி கூறிய அந்த வார்த்தை.. அருகே சென்ற ஆம்ஸ்ட்ராங்.. நடந்தது என்ன?
ஆம்ஸ்ட்ராங்கை கொல்வதற்கு முன்பாக கொலையாளிகளில் ஒருவன் ஜெய்பீம்ணா என கூறியதால் ஆம்ஸ்ட்ராங் அருகே சென்றதாக தகவல் வெளியாகியுள்ளது.

பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் பிரபல கூலிப்படை கும்பல் தலைவன் மறைந்த ஆற்காடு சுரேஷின் தம்பி பொன்னை பாலு உள்ளிட்ட எட்டு பேர், சம்பவம் நடந்த அன்று இரவே கைது செய்யப்பட்டனர். 

மேலும் 3 பேரும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப் பட்டுள்ளனர். தற்போது தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது. இந்நிலையில் பரபரப்பு தகவல்கள் வெளியாகி உள்ளன.

மூளையை பாதிக்கும் விஷயம் !

தமிழ்நாடு மாநில பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவரான ஆம்ஸ்ட்ராங், பெரம்பூர் செம்பியம் வேணுகோபால் தெருவில் உள்ள தனது பழைய வீட்டை இடித்து விட்டு புதிய வீடு ஒன்றை கட்டி வருகிறார். 

இதனால் ஆம்ஸ்ட்ராங் கட்டுமான பணிகளை நேரில் பார்க்க அயனாவரத்தில் இருந்து வேணுகோபால் தெருவுக்கு சென்றுள்ளார். அங்கு தனக்கு நெருக்கமான வீரமணி, பாலாஜி ஆகியோருடன் பேசிக்கொண்டு இருந்துள்ளார்.

அங்கு இருசக்கர வாகனத்தில் உணவு டெலிவரி செய்யும் நபர்கள் போல வந்த 6 பேர் கும்பல், சற்றும் எதிர்பாராத நேரத்தில் ஆம்ஸ்ட்ராங்கை அவரின் ஆதரவாளர்கள் கண் முன்பே கொடூரமாக வெட்டிப் படுகொலை செய்தது. 

இரவு 7 மணி அளவில் இந்த சம்பவம் நடைபெற்ற நிலையில், கொலைச் சம்பவத்தை அரங்கேற்றிய கும்பல், அங்கிருந்து விரைவாக தப்பிச் சென்றது.

படுகாயத்துடன் உயிருக்கு போராடிய ஆம்ஸ்ட்ராங்கை மீட்ட ஆதரவாளர்கள், உடனடியாக அவரை சென்னை கிரீம்ஸ் ரோடு அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதித்தனர். 

அங்கு ஒருசில நிமிடங்களில் ஆம்ஸ்ட்ராங் பரிதாபமாக உயிரிழந்தார். ஆம்ஸ்ட்ராங் படுகொலை சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.

திருமணமாகி சில நாளில் கணவரை விட்டு லெஸ்பிய னுடன் சென்ற இளம் பெண் !

கொலைக்கு முன் நடந்தது என்ன? 

ஆம்ஸ்ட்ராங் படுகொலைக்கு முன்பாக என்ன நடந்தது என்ற தகவல்கள் தற்போது ஒவ்வொன்றாக வெளியாகி வருகின்றன. ஆம்ஸ்ட்ராங் கட்டி வரும் வீட்டுக்கு அருகே பிரபல உணவகம் ஒன்று உள்ளது. 

எனவே அப்பகுதியில் எப்போதுமே, உணவு டெலிவரி ஊழியர்கள் அதிகளவில் பைக்குகளில் நிற்பார்கள். அதனை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்தியே கொலையாளிகள், உணவு டெலிவரி ஊழியர்கள் போல உடை அணிந்து வந்து, ஆம்ஸ்ட்ராங்கை கொலை செய்துள்ளனர்.

உணவு டெலிவரி ஊழியர்கள் அணியும் டிசர்ட் அணிந்து வந்த ஒருவர், ஆம்ஸ்ட்ராங்கை பார்த்து கையை உயர்த்தி ஜெய்பீம்ணா என கோஷம் போட்டுள்ளார். 

உடனே, ஆம்ஸ்ட்ராங் அவருக்கு அருகே சென்று பேச முயன்றுள்ளார். அப்போது தான் மற்ற சிலர் அரிவாள்களுடன் ஓடி வந்து ஆம்ஸ்ட்ராங்கை சரமாரியாக வெட்டியதாக தகவல் வெளியாகியுள்ளது. 

இந்த தகவல் ஆம்ஸ்ட்ராங் உடல் அடக்கம் செய்யப்பட்ட போது அங்கிருந்தவர்கள் மத்தியில் பரவியது.

புரட்சி பாரதம் கட்சியின் வாயிலாக அரசியலுக்குள் நுழைந்த ஆம்ஸ்ட்ராங், 2007 ஆம் ஆண்டுக்குப் பின் மாயாவதி தலைமையிலான பகுஜன் சமாஜ் கட்சியில் இணைந்து பயணித்து வந்தார். 

தன்னிடம் உதவி என வரும் நபர்களுக்கு தன்னால் இயன்ற உதவியை செய்வது என பல நன்மைகளை ஆம்ஸ்ட்ராங் செய்துள்ளார். பல சட்டக்கல்லூரி மாணவர்களை தனது சொந்த செலவில் படிக்க வைத்துள்ளார்.

ஆம்ஸ்ட்ராங் எப்போதும் சொல்வது ஜெய்பீம் முழக்கத்தைத் தான். ஆம்ஸ்ட்ராங் நேற்று அடக்கம் செய்யப்பட்ட சவப்பெட்டியிலும் ஜெய்பீம் என்ற வாசகம் பொறிக்கப் பட்டிருந்தது. 

கொலையாளி கூறிய அந்த வார்த்தை.. அருகே சென்ற ஆம்ஸ்ட்ராங்.. நடந்தது என்ன?

அம்பேத்கரின் கொள்கை மீது தீவிர பற்றுக் கொண்ட ஆம்ஸ்ட்ராங்கிடம் இருந்து தான் பா. ரஞ்சித் தனது அரசியல் பயணத்தை தொடங்கி இருக்கிறார். 

ஆம்ஸ்ட்ராங் மூலமாகவே பா.ரஞ்சித் தனது படங்களிலும், பேச்சிலும் ஜெய்பீம் என்ற முழக்கத்தை எழுப்பி வருகிறார். 

அந்த ஜெய்பீம் என்ற சமத்துவத்திற்கான அழைப்பு கோஷத்தைத் தான் கொலையாளிகளில் ஒருவன் ஆம்ஸ்ட்ராங்கை கொல்லப் பயன்படுத்தி யுள்ளான். 

நுண்ணுயிர்க் கொல்லி மாத்திரைகளால் ஏற்படும் ஆபத்து என்ன?

அந்த வாசகத்தால் தான் நம்ம ஆள் என நம்பி, முன்னெச்சரிக்கை இன்றி அவர்களை நெருங்கி உள்ளார் ஆம்ஸ்ட்ராங். கொலையாளி ஜெய்பீம் எனக் கூறியதாக, நேற்று பொத்தூரில் ஆம்ஸ்ட்ராங் உடல் அடக்கத்தின் போது சிலர் கூறியுள்ளனர்.

Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)
Privacy and cookie settings