திருப்பதி லட்டு.. வெளியான செய்தி.. பரபரப்பு !

0

திருமலை திருப்பதியில் லட்டு தயாரிக்கும் ஒப்பந்தமானது கிறிஸ்துவருக்கு வழங்கப் பட்டுள்ளதாக வரும் செய்திகளை திருமலை திருப்பதி தேவஸ்தானம் மறுத்துள்ளது.

திருப்பதி லட்டு.. வெளியான செய்தி.. பரபரப்பு !
திருப்பதின்னாலே நினைவுக்கு வருவது லட்டுத்தான். திருப்பதி லட்டு எல்லோருக்கும் கிடைத்து விடாது. பெருமாள் யாரெல்லாம் அவரது பிரசாதத்தை சாப்பிட வேண்டும் என நினைக்கிறாரோ அவர்களுக்கு மட்டும் தான் கிடைக்கும். 

அவர் கூடாது என முடிவு செய்து விட்டால், தலை கீழ் நின்று தண்ணீர் குடித்தாலும் லட்டு கிடைக்கவே கிடைக்காது. அது போல் தான் திருப்பதி தரிசனமும்! வெங்கடாஜலபதி விருப்பப்பட்டால் தான் நாம் அவரை தேடி போக முடியும். 

இல்லாவிட்டால் எத்தனை முறை பிளான் போட்டாலும் அது சொதப்பலில் தான் முடியும். திருப்பதி ஏழுமலையானுக்கு ஏராளமான நைவேத்தியங்கள் படைக்கப் படுகின்றன. 

ஒரு கோடியாக இருந்தாலும் நடிக்க மாட்டேன்.. விஜயகாந்த் !

அதில் பொங்கல், தயிர்சாதம், புளியஞ்சாதம், வடை, முறுக்கு, ஜிலேபி, அதிரசம், போளி, அப்பம், லட்டு, பாயாசம், தோசை, ரவா கேசரி, முந்திரிப் பருப்பு, எள்ளு சாதம் என விதவிதமான பிரசாதங்கள் செய்யப் படுகின்றன. 

இத்தனை படைத்தாலும் லட்டை மட்டும் எந்த பிரசாதமும் அடிச்சிக்க முடியாது. வாசனையே தனிதான். திருப்பதி லட்டுக்கு காப்புரிமை வழங்கப் பட்டுள்ளது. வேறு எங்கும் அது போல் லட்டை தயாரித்து வழங்குவதில்லை. 

கீழ் திருப்பதியில் போலி லட்டை விற்பனை செய்கிறார்கள். ஆனால் அதை பெரும்பாலானோர் வாங்குவதில்லை. 

கடலை மாவு, சர்க்கரை, நெய், ஏலக்காய், பச்சை கற்பூரம், பாதாம், முந்திரி, கல்கண்டு, உலர் திராட்சை, குங்குமப்பூ ஆகியவைகளை குறிப்பிட்ட அளவில் அதற்கென உள்ள முறைப்படி சேர்த்து திருப்பதி லட்டு தயாரிக்கப் படுகிறது.

திருப்பதியில் தினந்தோறும் 2 லட்சம் முதல் 3 லட்சம் லட்டுகள் வரை லட்டுகள் தயாரிக்கப்பட்டு வருகின்றன. ஏழுமலையானுக்கு பிரசாதங்களை தயாரித்து பூஜை செய்ய வழங்கி வந்தவர் கல்யாண ஐயங்கார் குடும்பத்தினர். 

இவர்கள் தான் பூந்தியை லட்டாக்கி பிரசாதமாக்கியவர்கள் என்று சொல்லப் படுகிறது. 'கல்யாணம் ஐயங்கார்' என்று அன்போடு அனைவராலும் அழைக்கப்பட்ட அவரின் இயற்பெயர் ஸ்ரீமான் பூதேரி பத்தங்கி ஸ்ரீனிவாசராகவன்.

பூதேரி கிராமத்திலிருந்து வந்து தன் உறவினர்களுடன் திருமலையில் தங்கி திருமலை வெங்கடேஷ பெருமாளுக்கு குடும்பத்துடன் கைங்கரியம் செய்யும் பணியில் ஈடுபடுத்திக் கொண்டவர். 

ஏழுமலையான் கோயிலில் 3 வகைகளில் லட்டு தயார் செய்யப் படுகிறது. அவற்றில் ஒன்று பக்தர்களுக்கு கவுன்ட்டர்களில் விற்பனை செய்யப்படும் 175 கிராம் லட்டு. 

இரண்டாவது லட்டு 1750 கிராம் எடையில் தயார் செய்யப்படும் பெரிய லட்டு ஆகும். அது போல் மூன்றாவது லட்டு, சுவாமிக்கு நெய்வேத்தியம் செய்வதற்காகவே தயார் செய்யப் படுகிறது.

சுமார் 175 கிராம் எடை கொண்ட 5100 லட்டுகளை தயாரிக்க 185 கிலோ கடலை மாவு, 400 கிலோ சர்க்கரை, 160 கிலோ நெய், 30 கிலோ முந்திரி, 16 கிலோ உலர் திராட்சை, 8 கிலோ கல்கண்டு, 4 கிலோ ஏலக்காய் ஆகியவை பயன்படுத்தப் படுகிறது. 

இப்படி பார்த்து பார்த்து பாரம்பரியமாக செய்யப்படும் லட்டு பிரசாதம் குறித்து வதந்திகள் பரவி வருகின்றன. இது குறித்து தேவஸ்தானம் விளக்கம் அளித்து கூறியிருப்பதாவது: 

லட்டு பிரசாதம் தயாரிக்கும் பணியை நாங்கள் தாமஸ் என பெயரிடப்பட்ட தனி நபருக்கு வழங்கவில்லை. இது போல் சில யூடியூப் சேனல்கள் பரவலாக பொய் செய்தியை பரப்பி வருகின்றன.

திருப்பதியில் பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்படும் லட்டு, பட்டாச் சாரியார்களால் ஸ்பெஷலாக தயாரிக்கப் படுகிறது. 

திருப்பதி லட்டு.. வெளியான செய்தி.. பரபரப்பு !

இந்த லட்டு தயாரிப்பு பணியில் எந்த கான்ட்ராக்டரும் நியமிக்கப்பட வில்லை. இந்து மதத்தை சேர்ந்த 980 பணியாளர்கள் சேர்ந்து இந்த லட்டு பிரசாதத்தை உருவாக்குகிறார்கள்.

லட்டுத் தயாரிப்பதற்கான பொருட்களை வாங்குவதிலிருந்து அவற்றை லட்டு கவுன்ட்டர்களுக்கு கொண்டு செல்லும் வரை எல்லாமே இந்த 980 பணியாளர்களின் பொறுப்பு தான். 

இருமல் மருந்தை வீட்டிலேயே எளிதாக தயாரிக்க !

திருமலை திருப்பதி தேவஸ்தானம் குறித்து அவதூறு பரப்பிய யூடியூப் சேனல்கள் மீது சட்ட நடவடிக்கை பாயும்.

ஸ்ரீவாரி லட்டு பிரசாதம் பாரம்பரிய முறைப்படிதான் தயாரிக்கப் படுகிறது என்பதை திருமலை திருப்பதி பக்தர்களுக்கு உறுதி அளிக்கிறோம் என தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.

Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)
Privacy and cookie settings