விஜய் ஆண்டனி சொல்றத கேட்டா ரத்த சோகை வரும்.. டாக்டர் ப்ரூனோ !

0

சமீபத்தில் ஒரு இசை வெளியீட்டு விழாவிற்கு செருப்பு போடாமல் வந்த நடிகரும், இசையமைப் பாளருமான, விஜய் ஆண்டனி பேசுகையில், செருப்பு இல்லாம நடந்து பாருங்கள், அதோட அருமை உங்களுக்கு புரியும். 

விஜய் ஆண்டனி சொல்றத கேட்டா ரத்த சோகை வரும்.. டாக்டர் ப்ரூனோ !
சீரியஸ்ஸா சொல்றேன், 1 மாதம் செருப்பு போடாமல் நடந்து பாருங்க. அதோட பயன் உங்களுக்கு தெரியும், செமையா இருக்கும் என தெரிவித்திருந்தார்.

இது குறித்து மூளை மற்றும் முதுகு தண்டுவட அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் ப்ரூனோ தனது எக்ஸ் வலைதள பக்கத்தில் சில கருத்துக்களை தெரிவித்திருந்தார். 

குடல் புழுக்கள் ஆங்கிலத்தில் Hook Worm என்று அழைக்கப் படுகின்றன. இவற்றில் பல வகைகள் இருந்தாலும் Ancylostoma duodenale மற்றும் Necator a mericanus என்பவை மனிதர்களை தாக்கும் வகைகள். 

இவை குடலினுள் இருந்து கொண்டு, தினமும் சிறிது சிறிதாக இரத்தத்தை உறிஞ்சும். எனவே குடல் புழுக்கள் உள்ள நபருக்கு இரத்த சோகை (Anemia) வரும். 

நண்பர்கள் செய்த துரோகத்தால் உடைந்து போன விஜயகாந்த் !

நமது உடலில் நுரையீரலில் இருந்து உடலின் பிற பகுதிகளுக்கு பிராண வாயுவை எடுத்து சென்றால் தான் அனைத்து பகுதிகளில் உள்ள திசுக்களும் உறுப்புகளும் ஒழுங்காக வேலை செய்ய முடியும்.

இரத்த சோகை இருந்தால் இப்படி பிராணவாயுவை எடுத்து செல்வது குறைவாக இருக்கும். எனவே உடலின் அனைத்து பகுதிகளுக்கும் பிராணவாயு (ஆக்சிஜன் Oxygen) போதிய அளவு செல்லாது. 

எனவே உறுப்புகளால் ஒழுங்காக வேலை செய்ய முடியாது. இரத்த சோகையால் பாதிக்கப்பட்ட நபர்கள் எளிதில் சோர்வடைவார்கள். கண் எரிச்சல் இருக்கும். 

ஆனால் கண் பரிசோதனை செய்தால் கண் சரியாக இருக்கும். தலைவலி, முதுகுவலி என்று இருக்கும். ஊடுகதிர் (எக்ஸ் ரே) எடுத்து பார்த்தால் எலும்பு சரியாக இருக்கும். இது போல் பல பிரச்சனைகள் இருக்கும்.

இரத்த சோகை அதிகரித்தால் அதனால் இதயத்திற்கு கூட பாதிப்பு வரலாம். (Anemia causing Heart Failure). மேலும் இரத்த சோகை உள்ள பெண்கள் கர்ப்பமடையும் போது பல பிரச்சனைகள் வரும். 

குழந்தைக்கு போதிய வளர்ச்சி இருக்காது. பிரசவத்தில் சிக்கல் வரும். பேறுகால மரணங்கள் (Maternal Mortality) மற்றும் பச்சிளம் குழந்தை மரணங்களுக்கு (Infant Mortality) இரத்த சோகை என்பது மிகவும் முக்கியமான காரணம் ஆகும்.

அதே போல் குழந்தைகள் வயிற்றில் புழுக்கள் இருந்தால் குழந்தைகளின் வளர்ச்சி பாதிக்கப்படும். (Stunted Growth). எனவே கொக்கி புழுக்கள் பாதிப்பு என்பது வயிற்றில் புழு உள்ளது என்று எளிதாக கடந்து செல்லக் கூடிய பிரச்சனை அல்ல. 

பேறுகால மரணம், பச்சிளம் குழந்தை மரணம், குழந்தை வளர்ச்சிக் குறைபாடு என்று பல சமூக பிரச்சனைகளின் மூலம் குடற்புழுக்கள் ஆகும். 

அதே போல் இரத்தச் சோகையினால் உடலில் இருக்கும் இரும்பு சத்து குறைந்தால் முடி உதிர்வது போன்ற பிரச்சனைகளும் வரும்.

ஆனால் குடற்புழுக்கள் அப்படி அல்ல. இந்த Necator americanus புழுக்களின் சிறுவடிவங்கள் உங்கள் காலில் முதலில் தொற்றுகின்றன. பிறகு காலில் இருந்து இரத்தம் மூலம் நுரையீரல் செல்லுகின்றன. 

நுரையீரலில் இரத்தக் குழாயில் (venules) இருந்து காற்றுப் பைகளுக்குள் (Alveoli) வருகின்றன. நுரையீரலில் இருந்து மூச்சுக்குழாய் (Trachea) மூலம் வெளிவந்து அப்படியே உணவு குழாய் (Esophagus) மூலம் வயிற்றினுள் சென்று குடலுக்குள் செல்கின்றன.

ஒருமுறை குடலினுள் சென்ற Necator americanus புழுக்கள் 15 வருடங்கள் வரை உள்ளிருந்து உங்கள் இரத்தத்தை உறிஞ்சுகின்றன. 

(காலரா, டைப்பாயிடு எல்லாம் சில நாட்களே, வருடக்கணக்கில் அல்ல என்பதையும் நினைவில் வையுங்கள்). காலரா டைப்பாயிடு ஆகியவற்றை தடுக்க நீரை காய்ச்சி குடித்தால் போதும். 

ஆனால் இரத்தச் சோகையை தடுக்க நீரை காய்ச்சி குடித்தால் மட்டும் போதாது, உங்கள் காலில் இந்த புழுக்களின் சிறுவடிவம் (இளம் புழு, லார்வா, larva) தொற்றுவதை தவிர்க்க வேண்டும்.

எப்படி தவிர்க்க முடியும்? சிம்பிள் , செருப்பு அணியுங்கள், இது போன்ற அரை வேக்காடுகளின் முட்டாள் தனமாக உளறல்களை நம்பி இரத்த சோகைக்கு உள்ளாகாதீர்கள். 

விஜய் ஆண்டனி சொல்றத கேட்டா ரத்த சோகை வரும்.. டாக்டர் ப்ரூனோ !

எனக்கு இரத்த சோகை வந்தால் உனக்கு என்ன பிரச்சனை என்று கேட்கிறீர்களா. குடற்புழுக்களில் இரண்டு வகை மனிதர்களை தாக்கும் என்று பார்த்தோம் அல்லவா.. 

இதில் Necator americanus என்பது கால் வழியாக மட்டுமே ஒருவரை தாக்கும். எனவே நீங்கள் செருப்பு போடவில்லை என்றால் உங்களுக்கு மட்டுமே பாதிப்பு. 

ஆனால் Ancylostoma duodenale என்பது கால் வழியாகவும் தாக்கும், வாய் வழியாகவும் தாக்கும். எனவே நீங்கள் செருப்பு போடவில்லை என்றால் உங்களுக்கும் பிரச்சனை, மற்றவர்களுக்கும் பிரச்சனை.

நடந்த உண்மை சம்பவம்.. இந்தியாவின் முதல் பெண் உளவாளி

பள்ளி சிறுவர்களுக்கு காலணி வழங்கிய பிறகு இரத்தச்சோகை பாதிப்பு குறைந்தது. பேறுகால மரணங்களை குறைத்ததில் பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்படும் விலையில்லா காலணியும் பங்கு வகிக்கிறது என்பது உங்களுக்கு ஆச்சரியம் தரலாம். 

Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)
Privacy and cookie settings