விண்வெளியில் இறந்தவர்களின் உடல் என்னாகும்? பூமிக்கு வருமா?

0

சமீபத்தில் விண்வெளிக்கு சென்ற இந்திய வம்சாவளி விண்வெளி வீராங்கனையான சுனிதா வில்லியம்ஸ், பூமிக்கு திரும்ப முடியாமல் சிக்கியுள்ளார். அவர் பத்திரமாக பூமிக்கு திரும்ப பிரார்த்தனை செய்து வருகின்றனர். 

விண்வெளியில் இறந்தவர்களின் உடல் என்னாகும்? பூமிக்கு வருமா?
மேலும் அவர் பத்திரமாக பூமிக்கு திரும்புவார் என்ற நம்பிக்கை உள்ளது. இந்நிலையில் தான் விண்வெளியில் மனிதர்கள் இறந்தால் அவர்களை என்ன செய்வார்கள் என்பது குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன.

பூமியிலிருந்து ஏறத்தாழ 400 கி.மீ உயரத்தில் உள்ள சர்வதேச விண்வெளி மையத்திற்கு அடிக்கடி விண்வெளி வீரர்கள் சென்று ஆய்வு செய்வது வழக்கம். 

அமெரிக்காவின் நாசா, ஐரோப்பாவின் இஎஸ்ஏ, ரஷ்யா மற்றும் சீனாவை சேர்ந்த வீரர்களும் இந்த ஆய்வில் ஈடுபட்டு வருகின்றனர். இப்படி இருக்கையில், இனி வரும் காலங்களில் இந்த ஆய்வு இன்றும் விரிவடைய இருக்கிறது.

அதாவது நிலவிலும், செவ்வாய் கிரகத்திலும் தங்கி ஆய்வு செய்யும் அளவுக்கு திட்டங்கள் போடப்பட்டிருக்கிறது. இந்த திட்டத்தில் உயிரிழப்புகள் தவிர்க்க முடியாததாக இருக்கும் என்று விஞ்ஞானிகள் கூறுகின்றனர். 

இதுவரை 20 விண்வெளி வீரர்கள் விண்வெளியில் உயிரிழந்திருக்கின்றனர். இனி வரும் காலங்களில் இந்த எண்ணிக்கை அதிகரிக்கலாம். அப்படி அதிகரிக்கும் பட்சத்தில் உடல்களை என்ன செய்வார்கள் என்பது குறித்த தகவல்கள் வெளியாகியுள்ன.

விண்வெளியில் அழுத்தம் அதிகம். அறிவியல் விதிப்படி, அழுத்தம் குறைவாக இருக்கும் பகுதியிலிருந்து அதிகமாக உள்ள பகுதிக்கு ஒரு பொருள் வேகமாக இடம் பெயரும். 

பாகிஸ்தானை மிரள வைத்த இந்தியா.. எப்படி தெரியுமா?

அதாவது நமது உடலில் உள்ள ரத்தம், காற்று உள்ளிட்டவை இயல்பான அழுத்தம் உள்ள பகுதியில் இருக்கிறது. இதுவே நமது உடல் விண்வெளிக்கு சென்றால் உடலில் உள்ள ரத்தமும் காற்றும் உடனடியாக உடலை விட்டு வெளியேற பார்க்கும். 

இந்த செயல்முறையின் போது உயரிழப்புகள் ஏற்படும். இதனை தடுப்பதற்காக தான் சிறப்பு உடைகளை விண்வெளி வீரர்கள் அணிந்திருக்கிறார்கள். 

ஆனால் பல நேரங்களில் இந்த உடைகளில் சேதம் ஏற்பட்டு உயிரிழப்பு ஏற்படுவதற்கான சூழல் உருவாகி விடுகிறது. எதிர்காலத்தில் நிலவில் ஆராய்ச்சி மையம் அமைக்க நாசாவும், சீனாவும் தீவிரமாக முயன்று வருகின்றன. 

அதே போல செவ்வாய் கிரகத்திலும் ஆய்வு மையம் அமைக்கப்பட இருக்கிறது. இந்த செயல்முறையின் போது எதிர்பாராமல் விபத்து ஏற்படுமாயின் அங்கேயே விண்வெளி வீரர்கள் உயிரிழக்க நேரிடும். 

விண்வெளியில் இறந்தவர்களின் உடல் என்னாகும்? பூமிக்கு வருமா?

இப்படி உயிரிழந்தவர்களை நிலவிலோ, செவ்வாய் கிரகத்திலோ புதைக்க முடியாது. அப்படி செய்தால் ஒரு உயிரியல் தீங்கை ஏற்படுத்தும். எனவே உடலை பூமிக்குதான் கொண்டு வர வேண்டும்.

இது எப்படி சாத்தியம் என்பது குறித்து நாசாவின் தலைமை மருத்துவ அதிகாரியான இம்மானுவேல் உர்கியேட்டா விளக்களியுள்ளார். இறந்தவர்களின் உடல்களை இரண்டு வழியில் அகற்ற முடியும். 

ஒன்று அடக்கம் செய்வது. மற்றொன்று தகனம் செய்வது. நிலவில் நிச்சயம் அடக்கம் செய்ய முடியாது. அதே போல செவ்வாய் கிரகத்திற்கும் பூமிக்கும் 300 மில்லியன் கி.மீ இருக்கிறது. 

எனவே, உடலை அங்கிருந்து பூமிக்கு கொண்டு வருவது சவாலான பணி. இதற்காக நாங்கள் பிரத்யேக ஸ்பேஸ் சூட்டை உருவாக்க திட்ட மிட்டிருக்கிறோம். 

இந்த சூட்-ல் உடல் வைக்கப்படும் போது, உடலிலிருந்து பாக்டீரியாக்கள் வெளியேறாமல் இருக்கும். சர்வதேச விண்வெளி மையத்தில் செயற்கையாக ஈரப்பதம் உருவாக்கப் பட்டிருக்கும். 

எனவே, அங்கு பாக்டீரியாக்கள் உருவாக வாய்ப்பிருக்கிறது. இப்படியாக பிரத்யோக சூட் மூலமாக விண்வெளியிலிருந்து வீரர்கள் பூமிக்கு கொண்டு வரப்படுவார்கள் என்று கூறியுள்ளார்.

மனிதர்களை விட சொகுசான வாழ்க்கை வாழுது பாருங்க

அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனமான நாசாதான் இந்த பணிகளை மேற்கொண்டு வந்தது. சமீபத்தில் இந்த பணிகளை தனியார் வசம் ஒப்படைக்க நாசா முடிவெடுத்தது. 

இதற்காக போயிங் நிறுவனம் தேர்வு செய்யப்பட்டது. போயிங் நிறுவனத்திற்கு விமான தயாரிப்பில் முன் அனுபவம் உண்டு, அதன் அடிப்படையில்தான் இந்த நிறுவனத்தை நாசா தேர்ந்தெடுத்தது. 

போயிங் நிறுவனம் இந்திய வம்சாவளியை சேர்ந்த சுனிதா வில்லியம்ஸ் மற்றும் அமெரிக்காவின் மற்றொரு விண்வெளி வீரரான புட்ச் வில்மோர், என இருவரையும் சர்வதேச விண்வெளி மையத்திற்கு அழைத்து சென்று, மீண்டும் பத்திரமாக பூமிக்கு கொண்டு வரும் பணியை ஏற்றுக் கொண்டது.

ஸ்டார் லைனர் எனும் ஸ்பேஸ் ஷிப் மூலம் கடந்த ஜூன் 5ம் தேதி அமெரிக்காவின் கேப் கனாவெரல் ஏவுதளத்திலிருந்து சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு சுனிதாவும், வில்மோரும் அனுப்பி வைக்கப்பட்டனர். 

இரண்டு நாட்கள் கழித்து, அதாவது ஜூன் 7ம் தேதியன்று ஸ்டார் லைனர் சர்வதேச விண்வெளி மையத்தை அடைந்தது. ஆனால் இந்த பயணத்தை தொடங்குவதற்கு முன்னரே பல்வேறு குளறுபடிகள் ஏற்பட்டிருந்தன. 

இரண்டு மூன்று முறை ஸ்டார் லைனரின் பயணம் தொழில்நுட்ப கோளாறு காரணமாக ஒத்தி வைக்கப்பட்டது. 

விண்வெளியில் இறந்தவர்களின் உடல் என்னாகும்? பூமிக்கு வருமா?

இப்படி இருக்கையில் தற்போது சர்வதேச விண்வெளி நிலையத்திலிருந்து சுனிதா வில்லியம்ஸையும், புட்ச் வில்மோரையும் மீண்டும் பூமிக்கு அழைத்து வருவதில் சிக்கல் ஏற்பட்டிருக்கிறது.

7ம் தேதி சர்வதேச விண்வெளி மையத்திற்கு சென்ற சுனிதா மற்றும் வில்மோர் ஜூன் 14ம் தேதி மீண்டும் பூமிக்கு திரும்பியிருக்க வேண்டும். 

ஆனால், ஸ்டார் லைனரில் ஏற்பட்ட ஹீலியம் வாயு கசிவு மற்றும் உந்து விசை கருவியில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு ஆகியவை இந்த பயணத்தை மேலும் ஒரு வாரத்திற்கு தள்ளி போட்டது. 

விண்வெளி பயணம் உயிருக்கு ஆபத்தானதா?

இதன்படி ஜூன் 26ம் தேதி இவரும் பூமிக்கு திரும்பியிருக்க வேண்டும். 

ஆனால், ஸ்டார் லைனரின் தொழில்நுட்ப கோளாறுகள் இன்னும் சரி செய்யப் படாததால், இன்று வரை இருவரும் பூமிக்கு திரும்பாமல் சர்வதேச விண்வெளி மையத்திலேயே சிக்கி தவிக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது

Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)
Privacy and cookie settings