அந்த 44 நொடி.. இந்திய அணி வெண்கலம் வென்றது எப்படி??

0

ஹாக்கியைப் பொறுத்த வரைக்கும் ஒலிம்பிக்ஸில் இந்தியா தான் ஆதிக்கம் செலுத்தும் நாடாக இருந்து வந்தது. 1980 வரைக்குமே 8 தங்கம், 1 வெள்ளி, 2 வெண்கலம் என வென்றிருந்தது. 

அந்த 44 நொடி.. இந்திய அணி வெண்கலம் வென்றது எப்படி?
இந்தியா சுதந்திரமடைந்த பிறகு 1948-ல் நடந்த முதல் ஒலிம்பிக்ஸிலேயே இந்திய அணி இறுதிப் போட்டியில் பிரிட்டனை வீழ்த்தி தங்கப்பதக்கம் வென்றிருக்கும். 

சுதந்திர இந்தியாவில் விளையாட்டுலகில் இந்தியாவுக்குக் கிடைத்த முதல் கௌரவமாக இது மதிக்கப் படுகிறது. 1980 வரைக்குமே இந்தியா இந்த ஆதிக்கத்தைத் தொடர்ந்திருந்தது. 

குறைவான நாடுகளே கலந்து கொண்டிருந்தாலும் 1980 மாஸ்கோ ஒலிம்பிக்ஸிலுமே இந்தியா தான் சாம்பியன். ஆனால், அதன் பிறகு ஹாக்கியில் இந்தியாவின் பிடி தளர்ந்தது.

அது வரைக்கும் புல் தரையில் ஆடப்பட்ட ஹாக்கி 80களிலிருந்து ஆஸ்ட்ரோ டர்ஃப்க்கு மாறியது. இது புல்தரையிலேயே ஆடி பழக்கப்பட்ட இந்திய அணிக்குப் பின்னடைவாக மாறியது. 

பணம் கொடுத்து உதவிடலாம் என்ற எண்ணம் நொறுங்கிய கணம்.. கிரிக்கெட் வீரர் !

நவீன கட்டமைப்புகள் எதுவுமின்றி தடுமாறியது. அதன் பிறகான அத்தனை ஒலிம்பிக்ஸிலும் இந்தியாவுக்கு வீழ்ச்சி தான். உச்சக்கட்டமாக 2008 பீஜிங் ஒலிம்பிக்ஸிற்கே இந்திய அணி தகுதிப் பெறாமல் போனது. 

இப்படியொரு அவல நிலையிலிருந்து இந்திய அணி சில ஆண்டுகளுக்கு முன்பு தான் மீண்டது.  டோக்கியோ ஒலிம்பிக்ஸில் தான் தனது சக்தியை மீறப் போராடி ஜெர்மனி அணியை வீழ்த்தி வெண்கலப் பதக்கத்தை வென்றது. 

இது தான் இந்திய ஹாக்கி புத்துயிர் பெற்ற தருணமாக பார்க்கப்பட்டது. அதை அப்படியே தக்க வைத்து இந்திய ஹாக்கி அணி முன்னேறுமா என்கிற கேள்விகள் இருந்தன.

பாரிஸ் ஒலிம்பிக்ஸூக்கு முன்பாக இந்திய அணி நல்ல ஃபார்மில் இருந்திருக்க வில்லை. நிறைய லீக் போட்டிகளில் தோற்றிருந்தது. இதனால் அணியின் மீது எதிர்பார்ப்பு குறைந்தது. 

நடப்பு ஒலிம்பிக்ஸின் குரூப் சுற்றுப் போட்டியிலுமே இந்திய அணி கொஞ்சம் தடுமாறி யிருந்தது. அர்ஜெண்டினாவுக்கு எதிரான போட்டியை டிரா செய்திருந்தது. பெல்ஜியமுக்கு எதிரான போட்டியில் தோற்றிருந்தது. 

ஆனால், ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியில் திருப்புமுனை ஏற்பட்டது. வலுவான ஆஸ்திரேலியாவை 52 ஆண்டுகளுக்குப் பிறகு இந்திய அணி வீழ்த்தியது. 

அங்கிருந்து இந்தியாவுக்கு ஒரு மொமண்டம் கிடைத்தது. கிரேட் பிரிட்டனுக்கு எதிரான காலிறுதிப் போட்டியில் 42 நிமிடங்களுக்கு 10 வீரர்களுடன் ஆடி ஆட்டம் டை ஆகி பெனால்ட்டி சூட் அவுட் வரை சென்றது. 

அதிலும் அற்புதமாக ஆடி வென்றது இந்தியா. ஆனால், ஜெர்மனிக்கு எதிரான அரையிறுதியில் கடைசி நிமிடம் வரை போராடி தோல்வியைத் தழுவியது. 

இந்நிலையில் தான் இன்று வெண்கலப் பதக்கத்திற்கான போட்டியில் ஸ்பெயினுக்கு எதிராக இந்திய அணி மோதியது. ஸ்பெயின் இந்தத் தொடரில் ஆச்சர்யமளிக்கும் வகையில் ஆடியிருந்தது. 

நடப்பு சாம்பியனான பெல்ஜியமை அந்த அணி காலிறுதியில் வீழ்த்தியிருந்தது. இரு அணிகளும் பதக்கம் வெல்லும் முனைப்போடு இருந்ததால் போட்டி பரபரப்பாக இருந்தது.

வழக்கம் போல இந்திய ஹாக்கி அணி இந்தப் போட்டியிலும் தற்காப்பு ஆட்டத்தில் தான் அதிக கவனம் செலுத்தியது. ஸ்பெயின் அணி தான் அட்டாக்கிங்காக ஆடிக்கொண்டிருந்தது. 

உண்மை சம்பவம்.. இந்தியாவின் முதல் பெண் உளவாளி !

முதல் கால்பாதியில் இரு அணிகளுமே கோலே அடிக்கவில்லை. இரண்டாம் கால் பகுதியின் ஆரம்பத்திலேயே ஸ்பெயின் அணி பெனால்ட்டி ஸ்ட்ரோக்கைச் சம்பாதித்தது. 

அதில் அந்த அணியின் கேப்டன் கோல் அடிக்க ஸ்பெயின் முன்னிலை பெற்றது. ஆனால், இந்திய அணி விடவில்லை. அதன் பிறகு இந்திய அணி அட்டாக்கிங்காக ஆட ஆரம்பித்தது.

30 - 33 இந்த மூன்று நிமிடங்கள் தான் ரொம்பவே முக்கியமாக அமைந்தன. இரண்டாம் கால்பகுதி முடிவதற்குச் சில நொடிகளே இருந்த நிலையில் கிடைத்த பெனால்ட்டி கார்னர் வாய்ப்பை கேப்டன் ஹர்மன்ப்ரீத் கோலாக்கினார். 

இடைவேளைக்குப் பிறகு 33வது நிமிடத்தில் இன்னொரு பெனால்ட்டி கார்னர் வாய்ப்பு கிடைத்தது. அதையும் கேப்டன் ஹர்மன்ப்ரீத் கோலாக்கி அசத்தினார்.

இந்திய அணி 2-1 என முன்னிலை பெற்றது. ஹர்மன்ப்ரீத் இந்தத் தொடரில் அசத்தி யிருக்கிறார். மொத்தமாக 10 கோல்களை அடித்திருக்கிறார். இந்தத் தொடரில் அதிக கோல்களை அடித்த வீரர் அவர் தான். 

முன்னிலைப் பெற்ற பிறகு இந்திய அணி மீண்டும் தற்காப்பில் கவனம் செலுத்தியது. ஸ்பெயின் போட்டியை சமன் செய்யப் போராடிக் கொண்டிருந்தது. போட்டி பரபரப்பான கடைசி 2 நிமிடங்களை எட்டியது. 

போட்டி முடிய வெறும் 1.24 நிமிடங்கள் இருந்த நிலையில் ஸ்பெயினுக்குத் தொடர்ச்சியாக இரண்டு பெனால்ட்டி கார்னர் வாய்ப்புகள் கிடைத்தன. இந்திய ரசிகர்களின் இதயத்துடிப்பு எகிறியது. 

ஆனால், ஸ்ரீஜேஷ் உட்பட இந்தியாவின் டிபண்டர்கள் மிகச்சிறப்பாக ஸ்பெயினின் வாய்ப்பைத் தடுத்தனர். 

சவால் முடிந்தது என நினைக்கையில் வெறும் 44 நொடிகள் இருக்கையில் மீண்டும் ஸ்பெயினுக்கு இரண்டு பெனால்ட்டி கார்னர் வாய்ப்புகள் கிடைத்தன. பரபரப்பின் உச்சக்கட்டம். 

அந்த 44 நொடி.. இந்திய அணி வெண்கலம் வென்றது எப்படி?

ஆனாலும் இந்திய வீரர்கள் மிகச்சிறப்பாக மீண்டும் ஸ்பெயினின் முயற்சியைத் தடுத்தனர். ஸ்பெயினின் கடைசி முயற்சியும் ஓய்ந்தது. இந்தியா வெண்கலப் பதக்கத்தை வென்றது.

இந்திய கேப்டன் ஹர்மன் ப்ரீத்தும் கோல் கீப்பர் ஸ்ரீஜேஸூம் தான் இந்தியாவின் ஹீரோக்கள். 

ஏலக்காய் எனும் நறுமண மருந்து !

பெனால்ட்டி கார்னர் வாய்ப்புகள் கிடைத்தால் சிறப்பாக கோலாக்கும் ஹர்மனின் துல்லியமும் பதற்றமான இதயத்துடிப்பு எகிறும் நொடிகளிலும் கூலாக சேவ்களை செய்யும் சமயோஜிதமும் தான் இந்தியாவுக்கு பதக்கத்தை வென்று கொடுத்திருக்கிறது. 

ஸ்ரீஜேஷூக்கு இது கடைசிப் போட்டி வேறு. அவரினின் அர்ப்பணிப்புக்கு ஏற்ற மதிப்புமிக்க விடைபெறல் இது!

Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)
Privacy and cookie settings