கரும்பை கொண்டு பயிற்சி எடுத்த அன்னு ராணி.. இன்று ஒலிம்பிக்கில் !

0

பாரீஸில் நடைபெற்று வரும் ஒலிம்பிக்கில் இந்தியாவின் சார்பாக ஈட்டி எறிதல் போட்டியில் உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த அன்னு ராணி  பங்கேற்றார். 

கரும்பை கொண்டு பயிற்சி எடுத்த அன்னு ராணி.. இன்று ஒலிம்பிக்கில் !
மகளிருக்கான ஈட்டி எறிதல் தகுதி சுற்றில் இந்தியாவின் அன்னு ராணி 55.81 மீட்டர் தூரம் எறிந்து ஏ பிரிவில் 15-வது இடமும், ஒட்டு மொத்தமாக 26-வது இடமும் பிடித்தார். 

ஈட்டி எறிதலில் எட்டு முறை நேஷனல் சாம்பியன், ஆசிய விளையாட்டு போட்டியில் தங்கப்பதக்கம், காமன்வெல்த் போட்டிகளில் ஈட்டி எறிதலில் பதக்கம் வென்ற முதல் பெண் எனப் பல பெருமைகளுக்கு உரியவர் இந்த அன்னு ராணி.

விவசாய குடும்பத்தைச் சேர்ந்த அன்னு ராணி ஈட்டி எறிதல் விளையாட்டுக்கான பயிற்சிகளை ஆரம்பத்தில் கரும்பு மற்றும் மூங்கில் கம்புகளைக் கொண்டே பயிற்சி எடுத்துள்ளார்.

பணம் கொடுத்து உதவிடலாம் என்ற எண்ணம் நொறுங்கிய கணம்.. கிரிக்கெட் வீரர் !

உத்தரப் பிரதேச மாநிலம், மீரட்டில் உள்ள பகதூர்பூரை சேர்ந்த விவசாயி அமர்பால் சிங்கின் மகள் தான் அன்னு ராணி. மிகவும் பின்தங்கிய, பாலின வேறுபாடுகள் நிறைந்த அந்த கிராமத் திலிருந்து ஒலிம்பிக் வரை சென்றிருக்கிறார் இந்த 31 வயது பெண். 

விளையாட்டின் மீதான ஆர்வத்தில் தந்தையின் எதிர்ப்பையும் மீறி ஷார்ட் புட் மற்றும் வட்டெறிதல் விளையாட்டுகளில் பங்கெடுத்திருக்கிறார். 

ஆனால், ஈட்டி எறிவதுதான் ஏற்றதாக இருக்கும் என்று அவருடைய பயிற்சியாளர் கூறியதால், ஈட்டி எறிதலைத் தேர்ந்தெடுத்துள்ளார்.

18 வயதில் தொழில்முறையாக ஈட்டி வாங்க வசதி இல்லாததால் மூங்கில் கம்புகளைக் கொண்டு பயிற்சி எடுத்துள்ளார். அவருடைய பயிற்சி களம் வயல்வெளிகள் தான். புழுதி நிலத்தில் ஓடி பயிற்சி எடுத்திருக்கிறார். 

கரும்பு வயலில் கரும்புகளை எடுத்துக் கொண்டு வந்து பயிற்சி எடுத்திருக்கிறார். கிராமத்தில் விளையாட்டுக்கான உடை கட்டுப்பாடு இருக்கும் நிலையில் கிராமத்தினர் எழுவதற்கு முன்பே பயிற்சிக்குக் கிளம்பி விடுவார். 

இரவில் வீடு திரும்பும் வரை வயலில் பயிற்சி எடுப்பார். ரன்னிங், தடகளம் என விளையாட்டை தன் மூச்சாக கருதியுள்ளார்.

குடும்பத்தினரின் ஒத்துழைப்பு இல்லாத நேரத்தில் என் அண்ணன் உபேந்திரனின் ஒத்துழைப்பு மிகவும் உதவியாக இருந்தது. 

வெறும் காலில் வயலில் கரும்புக் குச்சிகளுடன் பயிற்சியிலிருந்த என்னை, காமன்வெல்த் போட்டியில் வெண்கல பதக்கம் வென்ற காஷிநாத் நாயக் அவர்களின் வழிகாட்டுதல் பேருதவி செய்தது என்கிறார் அன்னு ராணி.

மாநில, மாவட்ட அளவில் பதக்கங்களை வென்ற அன்னு ராணி, 8 முறை நேஷனல் சாம்பியனாக இருந்துள்ளார். நீராஜ் சோப்ராவுக்குப் பிறகு, அதிக தூரம் ஈட்டி எரிந்தவர் என்ற பெருமையையும் பெற்றுள்ளார். 

2023-ம் ஆண்டு ஹாங்சேவில் நடைபெற்ற ஆசிய விளையாட்டுப் போட்டியில் கலந்து கொண்டு தங்கம் வென்றுள்ளார். 

2022-ம் ஆண்டு பர்மிங்காமில் நடைபெற்ற காமென்வெல்த் போட்டியில் கலந்து கொண்டு வெண்கல பதக்கம் பெற்றதன் மூலம் காமன்வெல்த் போட்டியில் ஈட்டி எறிதலில் பதக்கம் வென்ற முதல் இந்திய வீராங்கனை என்ற பெயரை பெற்றார். 

திருப்பூர்ல குறைந்த விலையில் உணவு.. எங்கே தெரியுமா?

தோஹாவில் நடைபெற்ற உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் கலந்து கொண்டு இறுதிச் சுற்று வரை சென்றார். ஈட்டி எறிதலில் இறுதிச்சுற்று வரை சென்ற முதல் இந்திய பெண் என்ற பெருமையையும் பெற்றார்.  

தொடர்ந்து பல வெற்றிகள் மற்றும் பதக்கங்களை தனதாக்கியவருக்கு ஒலிம்பிக்கில் பங்கேற்பது கனவாக இருந்தது. அதற்காக நிறைய பயிற்சிகளை மேற்கொண்டு 2020-ல் ஜப்பானில் நடைபெற்ற ஒலிம்பிக்கில் பங்கேற்க முயன்றார். 

ஆனால், தகுதிச் சுற்றில் வெளியேறினார். அதைத் தொடர்ந்து தற்போது பாரீஸ் ஒலிம்பிக் போட்டியில் தகுதிச்சுற்றில் தேர்வாகி விளையாடினார். 

கரும்பை கொண்டு பயிற்சி எடுத்த அன்னு ராணி.. இன்று ஒலிம்பிக்கில் !

இறுதிச் சுற்றுக்குத் தகுதி பெறவில்லை யென்றாலும், ஒரு கிராமத்திலிருந்து ஒலிம்பிக்கில் கவனம் பெறுவது அவ்வளவு சாதாரணமான விஷயமில்லை. அதை சாத்தியமாக்கி யிருக்கிறார் இந்த அன்னு ராணி.

அன்னு ராணியின் தந்தை அமர்பால் தெரிவிக்கையில், தன் மகள் வீட்டிற்கு வெளியே சென்று விளையாடுவதை நான் எதிர்த்தேன். 

மத்தவங்க முன்னாடி சும்மா கெத்தா இருக்கணுமா?

இருந்தாலும் அன்னு ராணி, விளையாட்டை எவ்வளவு நேசிக்கிறார் என்பதை போகப் போகப் புரிந்து கொண்டேன். அதன் பிறகு, நன்கு விளையாட அனுமதித்து விட்டேன். 

தற்போது அன்னுவின் பெயரால் தான் மக்கள் என்னை அடையாளம் கண்டு கொள்கிறார்கள். என் மகளை நினைத்து பெருமைப் படுகிறேன் என்கிறார்.

Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)
Privacy and cookie settings