பட்டா, பத்திரப்பதிவு போன்ற விஷயங்களில் லஞ்ச நடமாட்டம் பெருகிய படியே உள்ளது. இதை தடுப்பதற்காகவே, பல்வேறு அதிரடிகளையும், கடிவாளங்களையும் தமிழக பதிவுத்துறை முன்னெடுத்து வருகிறது.
லஞ்சம், ஊழல் தொடர்பாக அரசு ஊழியர்கள், அதிகாரிகளும் ஊழல் தடுப்பு போலீசாரால் தொடர்ந்து சுற்றி வளைக்கப்பட்டு கைது செய்யப்பட்டு வந்தாலும் கூட, பெண் அதிகாரிகளின் லஞ்ச லாவண்யம் அதிகரித்து கொண்டே யிருக்கிறது.
இதோ மதுரை சர்வேயரும் சிக்கியிருக்கிறார். மதுரை மாவட்டம் பேரையூர் அருகில் சின்னக்கட்டளையை சேர்ந்த விவசாயி ராமசாமி.. இவருக்கு 73 வயதாகிறது.
எதிர் பாராமல் செய்யும் உதவி | Unexpected help !
இவருக்கு சொந்தமான நிலம் அதே கிராமத்தில் உள்ளதால், இந்த நிலத்தை முறையாக அளந்து எல்லையை நிர்ணயம் செய்து கொடுக்க, ஆன்லைன் மூலம் விண்ணப்பித்திருக்கிறார்.
மேலும், இது குறித்து பேரையூர் தாலுகா, சேடபட்டி குறுவட்ட சர்வேயர் ஜோதி என்பவரையும் சந்தித்து, தன்னுடைய தனது இடத்தை சர்வே செய்து கொடுக்க வேண்டும் என்று ராமசாமி கேட்டுள்ளார்.
ஆனால்,ஜோதியோ, எந்த நடவடிக்கையும் எடுக்காமல் தொடர்ந்து தாமதம் செய்து வந்திருக்கிறார். கடந்த 6ம் தேதி தான், ராமசாமியின் நிலத்தை அளந்துள்ளார்.
ஆனாலும், அதற்கான சான்றிதழை வழங்க வேண்டுமானால், ரூ.5 ஆயிரம் லஞ்சம் கேட்டுள்ளார். இந்த பணத்தை தருவதற்கு ராமசாமி விரும்பவில்லை.
லஞ்ச ஒழிப்புத் துறையினரின் யோசனைப்படி, பேரையூர் பஸ் ஸ்டாண்டில், நேற்று சர்வேயர் ஜோதியிடம் ரூ.2 ஆயிரத்தை ராமசாமி கொடுத்தார்.
போராடி ஜெயிப்பது தான் வாழ்க்கை.. வாழ்ந்து காட்டுவோம் !
அப்போது, அருகில் மறைந்திருந்த டிஎஸ்பி-யான சத்யசீலன் தலைமையிலான போலீஸார், ஜோதியை கையும், களவுமாக பிடித்தனர். தொடர் விசாரணைக்குப் பிறகு ஜோதி இன்று அதிகாலையில் கைது செய்யப்பட்டார்.
பெண் அதிகாரி இப்படி பகிரங்கமாக சிக்கியிருப்பது, மதுரையில் பெரும் அதிர்ச்சியை தந்து வருகிறது.
Thanks for Your Comments