பாம்புகளை தேடிக் கொல்லும் மக்கள்... ஏன் தெரியுமா?

0

பாம்பு என்றால் படையும் நடுங்கும் என்பார்கள். ஆனால், அண்டை நாடான வங்கதேசத்தில் படையாகத் திரண்டு பாம்புகளை மக்கள் கொன்று வருகின்றனர். 

பாம்புகளை தேடிக் கொல்லும் மக்கள்... ஏன் தெரியுமா?
சந்திரபோடா அல்லது உலுபோடா எனப்படும் கண்ணாடி விரியன் பாம்புகள் மீது கொண்டுள்ள அச்சத்தால், அவற்றை மக்கள் அடித்துக் கொல்கின்றனர்.

வங்கதேசத்தில் திடீரென பாம்புகள் மீது கோபமடைந்து மக்கள் வேட்டையாடத் தொடங்கி இருப்பது ஏன் தெரியுமா? ஒரு காலத்தில் முற்றிலும் அழிக்கப் பட்டதாகக் கருதப்பட்ட கண்ணாடி விரியன் பாம்புகள் மீண்டும் பெருகி வருவதாக வெளியான தகவலும், 

அதன் கடியால் ஏற்பட்ட உயிரிழப்புகள் குறித்து சமூக வலைதளங்களில் பரவிய எதிர்மறைத் தகவல்களும் மக்களை அச்சமூட்டி, அதனால் அவற்றைக் கொல்லத் தொடங்கி யுள்ளனர்.

Diamond Ring - யை💍திருப்பி கொடுத்த மனிதர்.. ஆச்சரியம்.. உண்மை !

சில ஆண்டுகளுக்கு முன், வங்கதேசத்தில் பத்மா ஆற்றங்கரையோர மாவட்டங்களில் பாம்பு கடித்து சிலர் உயிரிழந்தனர். அண்மையில் மாணிக் கஞ்ச் மாவட்டத்தில் பாம்புக்கடியால் 5 பேர் இறந்ததாகவும் கூறப்படுகிறது. 

கல்லூரி மாணவர் ஒருவரும் பாம்பு கடித்து இறந்த செய்தி வெளியான நிலையில், பாம்புகளை தேடிப்பிடித்து தாக்கத் தொடங்கி இருக்கிறார்கள். 

பாம்புகளை கொல்வோருக்கு சிலர் பரிசுகளை அறிவிக்கும் அளவுக்கு அதன் மீதான பீதி காணப்படுகிறது. வங்கதேசத்தில் காணப்படும் பாம்புகளில் 85 சதவிகிதம் நஞ்சற்றவை என்று சொல்லப் படுகிறது. 

வங்கதேசத்தில் ஆண்டுதோறும் 7,500 பேர் பாம்புக்கடியால் உயிரிழப்பதாகவும், இதில் சுமார் 120 பேர் கண்ணாடி விரியன் பாம்பால் மட்டுமே இறப்பதாகவும் தரவுகள் தெரிவிக்கின்றன.

கண்ணாடி விரியன் பாம்புகள் திடீரென பெருகியதற்கு, அவற்றை உணவாக வேட்டையாடும் கழுகு, பருந்து, உடும்பு போன்றவற்றின் எண்ணிக்கை கணிசமாகக் குறைந்ததே காரணம் என்று கூறப்படுகிறது. 

பணம் கொடுத்து உதவிடலாம் என்ற எண்ணம் நொறுங்கிய கணம்.. கிரிக்கெட் வீரர் !

கண்ணாடி விரியன்களை குறி வைத்து தாக்குவதாகச் சொன்னாலும் இதில் கட்டுவிரியன், சாரைப்பாம்பு, நீர்க்கோலி போன்ற வேறுவகை பாம்புகளையும் மக்கள் கொன்று விடுவதாக வங்கதேச வனத்துறையினர் கவலையுடன் தெரிவிக்கின்றனர்.

வங்கதேசத்தின் சட்டப்படி கண்ணாடி விரியன் பாம்புகள் பாதுகாக்கப்பட்ட உயிரினமாகும். அதைப் பிடிப்பதோ, கொல்வதோ தண்டனைக்குரிய குற்றமாகும். 

எனினும், அங்கு நிலவும் பாம்புகள் மீதான அச்சம், மக்களை சட்டத்தை மீறச் செய்துள்ளது. எனவே, பாம்பின் மீதான அச்சத்தை, வெறுப்புணர்வைப் போக்க உரிய விழிப்புணர்வு ஏற்படுத்துவது அவசியமாகிறது.

பொதுவாக, கண்ணாடி விரியன் ஓர் ஆக்ரோஷமான பாம்பு அல்ல; காயம் பட்டால் மட்டுமே திருப்பித் தாக்கும் குணம் கொண்டவை என்று கூறும் வன ஆர்வலர்கள், இது குறித்து மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்கின்றனர்.

பாம்புகளை தேடிக் கொல்லும் மக்கள்... ஏன் தெரியுமா?
இயற்கை சமநிலை, பல்லுயிர் பாதுகாப்பில் பாம்புகள் முக்கிய பங்களிப்பு செய்கின்றன. உண்மையில் பாம்புகள் தான் மனிதர்களைக் கண்டு அஞ்சி ஓடுகின்றன. 

அவை தற்காப்புக்காகவே நம்மை தாக்குவதாக விலங்கு நல ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர். 

மழை சீசனில் பின்பற்ற 10 பாதுகாப்பு நடவடிக்கைகள் !

இயற்கை சுழற்சிக்கு நாம் இடையூறு செய்தால், அதாவது பாம்பு போன்றவற்றை நாம் கொல்வதால் எதிர்காலத்தில் எலிகளின் எண்ணிக்கை பெருகி, உணவு உற்பத்தியில் பாதகமான விளைவுகளை ஏற்படுத்தும். 

பாம்புகள் இல்லாமல் போனால் அது முழு உணவுச் சங்கிலியும் பாதிக்கும் என்பதே உண்மை.

Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)
Privacy and cookie settings